என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரிய மேடு லாட்ஜில் அதிரடி வேட்டை: விமானத்தில் வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 அழகிகள் சிக்கினர்
    X

    பெரிய மேடு லாட்ஜில் அதிரடி வேட்டை: விமானத்தில் வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 அழகிகள் சிக்கினர்

    • விபசார தடுப்பு போலீசார் பெரியமேடு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • முக்கிய குற்றவாளி தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மீட்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் விபசார தடுப்பு போலீசார் பெரியமேடு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் மேற்கொண்ட இந்த வேட்டையில் கோவா, அந்தமான், டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் இருந்து வந்து விபசார தொழிலில் ஈடுபட்ட அழகிகள் பிடிபட்டனர்.

    விமானத்தில் வந்து இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ராஜஸ்தான் மாநில தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளி தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×