நாகர்கோவிலில் லாட்ஜ் மேலாளர் திடீர் சாவு

திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.கோட்டார் போலீசார் சென்று விசாரணை நடத்தி தாஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

நாகர்கோவில்:

திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியை சேர்ந்தவர் தாஸ் (40). நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் மேலாளராக இருந்து வந்தார். சம்பவத்தன்று லாட்ஜில் பணியில் இருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்ப தாக கூறினார்.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில், தாஸ் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். தாஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாஸ் சகோதரர் கண்ணன், அளித்த தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com