search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள்"

    • பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது.
    • யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை, ஊராட்சிகளில் 10 பேரை பலி வாங்கியதாக கூறப்படும் அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை கேரள வனத்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    அதன் பின்பு தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. அங்கு வனத்தை விட்டு வெளியேறி தமிழக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அரிசி கொம்பன் கடந்த மாதம் 27-ந் தேதி கம்பம் நகருக்குள் ஆக்ரோஷத்துடன் நுழைந்தது.

    பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை சண்முகாநதி அணையை ஒட்டியுள்ள பகுதியில் தஞ்சமடைந்தது. அதனை நேற்று முன்தினம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதியான முத்துக்குழி பகுதியில் விட்டுள்ளனர்.

    அரிசி கொம்பன் யானையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என நெல்லை, குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே யானையின் இருப்பிடத்தை உறுதி செய்ய வலியுறுத்தி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் அரிசி கொம்பன் யானையை மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியிலேயே விட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    செண்பகத்தொழு குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் படாதபாடு படுத்தி மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் ஆரம்ப கால வசிப்பிடம் மூணாறு வனப்பகுதியை ஒட்டியே இருந்தது. எனவே அதனை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் இருந்தவரை அரிசி கொம்பனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஆனால் பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது என்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

    • மக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
    • எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் காங்கயம் சட்டமன்ற தொகுதி, திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் காங்கயம், திருப்பூர் அங்கேரிப்பாளையம், திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். திருப்பூரில் நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கொங்கு மண்டல பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசியதாவது: அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களைத்தான், தற்போது தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது கடும் அதி–ருப்–தி–யில் உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கள்ளச்சாராயம் குடித்து பலியாகி வருகிறார்கள். இதுதான் திராவிட மாடல் அரசு. இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர்.

    வருகிற நாடாளுமன்ற தொகுதியில் திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி தொகுதி மட்டுமல்ல 40 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும். வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்-அமைச்சராவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, சு.குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன்,மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் திருப்பதி, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி, திருப்பூர் மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, இணை செயலாளர் விவேகானந்தன், வக்கீல் அணி செயலாளர் முருகேசன், இணை செயலாளர் பா.சு.மணிவண்ணன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், காங்கயம் நகர செயலாளர் வெங்கு மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்களை பற்றி கவலைப்படுகிற ஆட்சி தி.மு.க தான்.
    • திராவிட மாடல் ஆட்சி என்றால் சமத்துவம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான புகழேந்தி தலைமை தாங்கினார்.

    முன்னதாக மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன் அனை வரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் தி.மு.க. செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.

    இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசுகையில்:-

    தேர்வு எழுதிய மாணவனாக நாங்கள் இருக்கிறோம். 2 ஆண்டு சாதனையை உங்களிடம் சொல்லி மதிப்பெண் போடுங்கள் என காத்திருக்கிறோம்.

    தி.மு.க. 2 ஆண்டு ஆட்சியில் 204 திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    மக்களை பற்றி கவலைப்படுகிற ஆட்சி தி.மு.க தான். திராவிட மாடல் ஆட்சி என்றால் சமத்துவம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்

    இதில் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. வேதாரத்தினம், நகர்மன்ற துணை தலைவர் மங்களநாயகி, மாவட்ட கவுன்சிலர் சோழன், பொதுக்குழு உறுப்பினர்கள் பழனியப்பன், உமா செந்தா மரைச்செல்வன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு, சுற்றுச்சூழல் அமைப்பாளர் சத்தியமூர்த்தி, வக்கீல்கள் அன்பரசு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் அனைத்து சார்பு அணியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி டி.கே.எஸ். இளங்கோ வன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முடிவில் திருகுமரன் நன்றி கூறினார்.

    • கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்திமக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இங்கு பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் துறையின் சார்பில் புகைப்பட தொகுப்புகள் அடங்கிய விளம்பர பதா கையில் அமைக்க ப்பட்டிருந்தது.தனை பொதுப்பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்ட மன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டார். இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்திமக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட தொகுப்புகளின் கண்காட்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து துறைகளின் முக்கியமான அறிவிப்புகளில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த தொகுப்பும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட அறிவிப்புகள், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான அறிவிப்பு, கோயில் நிலங்கள் மீட்பு, மகளிருக்கான இலவச பஸ் பயணம், கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அறிவிப்பு, விவசாயி களுக்கான அறிவிப்பு, சாலை போக்குவரத்துக்கான அறிவிப்பு, பள்ளி கல்வி துறை அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியி டப்பட்ட அறிவிப்புகளின் புகைப்பட தொகுப்புகள் விளம்பர பதாகையில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டதை பார்வையிட்டனர்.

    பார்வையிட்ட அமைச்சர் பொது மக்கள் தமிழ்நாடு அரசின் திட்டங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்படக் கண்காட்சியை சிறப்பாக அமைத்திருப்பதாக பாராட்டினார். இதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும் பார்வை யிட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சிவக்குமார், அனைத்து ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
    • நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாரா யணன், திட்ட இயக்குனர் மணி, கோட்டாட்சியர் பவித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    இதில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பொது மக்கள் 348 மனுக்களை அளித்தனர். அதனை பெற்ற அமைச்சர் எ.வ.வேலு, அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணும் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜா, வேளாண்மை இணை இயக்குனர் கருணா நிதி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரத்தினமாலா, மாவட்ட ஆவின் சேர்மன் ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாக ராஜன், தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வ கணேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பாத்தி நடராஜன், அய்யம்மாள் ராஜேந்திரன், கோவிந்தம் மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் அம்பிகாவீர மணி, சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குளத்தூரில் நடந்த முகாமில் மொத்தம் 283 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
    • போலீஸ் துறை தொடர்பான மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 557 மனுக்கள் பெறப்பட்டன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் போலீஸ் துறை தொடர்பான மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 557 மனுக்கள் பெறப்பட்டன.

    மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண் இணை இயக்குநர் கருணாநிதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது
    • ஒருவருக்கொருவர் பாதங்களை கழுவி பணிவிடை செய்தனர்.

    கன்னியாகுமரி :

    கிறிஸ்துமஸ் பண்டி கையை அடுத்து கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகை ஈஸ்டர் பண்டிகை ஆகும். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி புனித வெள்ளியின் முந்தின நாள் வியாழன் பெரிய வியாழனாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெரிய வியாழன் இரவு பாஸ்கா இரவு கொண்டாடப்படும். இயேசு கிறிஸ்து இரவு உணவு உண்ட வேளையில் தம் சீடர்களின் பாதங்களை கழுவி, அவர்கள் ஒருவருக்கொருவர் பணியாளர்களாக இருக்க வேண்டும் என பாடம் புகட்டினார்.

    இதை நினைவு கூறும்வ கையில் ஆண்டுதோறும் பெரிய வியாழன் இரவு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பெரிய வியாழனை முன்னிட்டு நேற்றிரவு மணவாளக்குறிச்சி அருகே திருநயினார்குறிச்சி புனித அந்தோணியார் ஆலயத்தில் ஒருவருக்கொ ருவர் பணிவிடை செய்யும் விதத்தில் பங்கு மக்கள் மற்றும் அம்மாண்டிவிளை கிளை பங்கு மக்கள் இணைந்து ஒருவருக்கு ஒருவர் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குமக்கள் அன்பு செய்து பணிவிடை எண்ணம் மேலோங்கும் வகையில் ஒருவருக்கொருவர் பாதங்களை கழுவி பணிவிடை செய்தனர். இதில் பங்கு தந்தை லியோன் எஸ். கென்சன், அருட்சகோதரர் கேபா மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக பெரிய வியாழன் பாஸ்கா விருந்தில் ஆலயங்களில் பங்குத்தந்தையர் 12 பக்தர்களின் பாதங்களை கழுவுவர்.

    மக்கள் அனைவரும் ஒருவருக்கொ ருவர் அன்பு செய்யும் எண்ணம் மேலோங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு பங்கு மக்கள் ஒருவருக்கொருவர் பாதங்களை கழுவி அன்பை பரிமாறிக்கொண்ட னர் என்பது குறிப்பி டத்தக்கது

    • எந்த வகையான பிரச்சனையாக இருந்தாலும் அதனை உடனடியாக கியூ ஆர் ஸ்கேனில் பதிவு செய்யலாம்.
    • இந்த திட்டம் மூலம் மக்கள் வீட்டில் இருந்தே பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் சேவைகளை பெறவும், புகார்களை தெரிவிக்கவும் டிஜிட்டல் மயமாக்கும் ஏற்பாடுகள் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி உள்ளாட்சித் துறை அமைச்சர் பரிந்துரையின் பேரில் நடந்து வருகிறது.

    அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள வீடுகளில் கியூ ஆர் ஸ்கேன் கோடு ஓட்டும் பணி இன்று தொடங்கியது.

    தஞ்சாவூர் உமா நகர் பகுதியில் வீடு வீடாக கியூ ஆர் ஸ்கேன் கோடு ஒட்டும் பணியை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    அவர் வீடு வீடாக சென்று இந்த ஸ்டிக்கரை ஒட்டினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு உத்தரவுபடி இன்று வீடு வீடாக சென்று கியூ ஆர் கோடு ஒட்டும் பணி தொடங்கியுள்ளது.

    மாநகராட்சியில் 51 வார்டுகளிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று கியூ ஆர் கோடு ஓட்டப்படும்.

    அடுத்ததாக இந்த கியூ ஆர் கோடில் வீட்டில் வசிப்பவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், வார்டு எண், வீட்டு எண், கட்டிடம் பயன்பாடு, இருப்பிட விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

    அதன் பிறகு வீட்டில் இருந்தபடியே தங்களது மொபைலில் கியூ ஆர் ஸ்கேன் செய்து அதன் மூலம் சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தலாம்.

    இது தவிர குடிநீர் பிரச்சனை, குப்பைகள் அள்ளாமல் இருப்பது உள்ளிட்ட எந்த வகையான பிரச்சனை இருந்தாலும் அதனை உடனடியாக கியூ ஆர் ஸ்கேனில் பதிவு செய்யலாம்.

    பதிவு செய்த பிறகு அடுத்த சில மணி நேரங்களில் பிரச்சனை தீர்க்கப்படும்.

    நீங்கள் கியூ ஆர் ஸ்கேன் செய்யும் போது உங்களது இருப்பிடம் காண்பிக்கும்.

    மேலும் உங்களது அனைத்து விவரங்களும் எங்களுக்கு தெரிய வரும். இந்தத் திட்டம் மூலம் மக்கள் வீட்டில் இருந்தே பயன்பெறலாம்.

    இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து வீடுகளிலும் கியூ ஆர் கோடு ஒட்டும் பணி முடிவடைந்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழச்சியில் மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படைஎடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்
    • காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படைஎடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.

    முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை யில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    இதேபோல விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி கூடம்பார தமாதா கோவில் ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையி ட்டனர். அதேபோல திருவள்ளுவர் சிலையையும், சுற்றுலா பயணிகள் 2 மணிநேரம் காத்திருந்து படகில் சென்று பார்வையிட்டுவந்தனர்.

    பொதிகை படகுகரை யேற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருவதால் விவேகானந்தா, குகன் ஆகிய 2 படகுகள் மட்டுமே இயக்கப்படுவதால் தான் இந்த காலதாமதத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுஇருந்தது.

    • வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கான நடமாடும் ரேசன்கடையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் ஜெய்ந்த் நகர் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், சிறப்பு அனுமதி பெற்று, கூட்டுறவுத்துறை மூலம் நடமாடும் நியாய விலை தொடங்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.

    மேலும் 6 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ12.40லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ3.625லட்சம் மதிப்பிலான பால் கறவை மாட்டு கடன் உதவிகளையும், 8 பயனாளிகளுக்கு ரூ6.18 லட்சம் மதிப்பிலான பயிர் கடனுதவிகளையும் என மொத்தம் ரூ.22.205 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் 691 முழு நேர நியாயவிலை கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 31 முழுநேர கடைகளும், 3 பகுதி நேர கடைகளும் மற்றும் மகளிர் நிறுவனங்கள் மூலம் 4 முழு நேர கடைகளும் என மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 6 லட்சத்து 12 ஆயிரத்து 446 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

    மேலும் 64 நடமாடும் நியாயவிலை கடைகளும் செயல்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.

    அதன் அடிப்படையில் வத்திராயிருப்பு வட்டம் ஜெய்ந்த் நகரில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நீண்ட தூரம் சென்று குடிமைப் பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாகவும், தங்கள் பகுதிக்கு அருகிலேயே நியாய விலைக்கடை அமைத்து தரக்கோரியும் அளிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு அனுமதி பெற்று, கூட்டுறவுத்துறையின் மூலம் 65-வது நடமாடும் நியாய விலைக்கடை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கட்டுமான பணிகள் முதற்கட்டமாக ரூ. 26 கோடியே 76 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.
    • பாதாள சாக்கடை பணிகளும், பைபாஸ் சாலை பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில்உள்ள காமராஜர் பஸ்நிலையம் பழுதடைந்து காணப்பட்ட தால் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இதற்கான கட்டுமான பணிகள் முதற்கட்டமாக ரூ. 26 கோடியே 76 லட்சம் மதிப்பில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் 18 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இதேபோல், மன்னார்குடியில் பாதாள சாக்கடை பணிகளும், பைபாஸ் சாலை பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

    விழாவில் நகர்மன்ற தலைவர் மண்ணை சோழராஜன், தி.மு.க. நகர செயலாளர் வீரா கணேசன், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • 70 ஜோடிகளுக்கு தி.மு.க. சார்பில் திருமணம் நடைபெற உள்ளது.
    • அரசின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநா–ளையொட்டி 70 ஜோடிகளுக்கு தி.மு.க. சார்பில் திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    இதனை–யொட்டி திருமண விழா நடைபெறும் இடத்தில், நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதோடு, ஒருங்கிணைந்த தி.மு.க. சார்பில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்து பரிசுகளை வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து வ .உ. சி. மைதானத்தில் அரசின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    மாலையில் கொடிசியாவில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் 2ஆயிரம் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிளிகளை வழங்கி விழா பேருரையாற்ற உள்ளார்.

    கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளில் மின் இணைப்பு துண்டிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு சுட்டிகாட்டிய இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் செங்கல் உற்பத்தியை தொடங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது.

    வருவாய்த்துறை ஆவணங்கள் சரியாக இருந்தால் 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும். கோைட காலமான ஏப்ரல், மே, மாதங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய 4,200 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது.

    இதற்காக டெண்டர் கோரப்பட்டு இது செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மின் விநியோகத்தில் எந்த வித பாதிப்பும் இருக்காது.

    6,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய சோலார் பூங்காவுக்காக டெண்டர் கோரபட்டுள்ளது. இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 99.7 சதவீதம் இணைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 0.3 சதவீதம் தான் இணைக்க வேண்டியது உள்ளது. இன்னும் இரு தினங்களில் அந்த பணிகள் நிறைவடையும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பழ–னிசாமி விமர்சித்துள்ளார்.

    அ.தி.மு.க.வுக்கு அவர்கள் நினைத்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. அந்த விரக்தியில் இது போன்ற கருத்துக்களை கூறுகின்றனர்.

    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வெற்றி பயணம் என்பது வரக்கூடிய 2024 மக்களவை தேர்தலுக்கான தொடக்கம்.

    40 பாராளுமன்ற தொகுதியிலும், முதல்-அமைச்சரின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள்.

    சட்டசபை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் இரட்ைட இலை சின்னத்தில் தான் அ.தி.மு.க போட்டியிட்டது. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அவ்வளவு தான். மக்களுக்கு நன்மை செய்ய கூடிய இயக்கமாக கட்சியை வழிநடத்த வேண்டும் என்ற சூழல் அ.தி.மு.கவிடம் இல்லை.

    கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவிக்கவில்லை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை மக்களை பற்றிய கவலை இல்லை. அவர்களின் தேவை யார் டெல்லியில் போட்டி போட்டு அடிமையாக இருப்பது என்பது தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×