என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கள்ளக்குறிச்சி அருகே செய்தி மக்கள் தொடர்பு துறை புகைப்பட கண்காட்சி:  அமைச்சர் எ.வ.வேலு பாராட்டு
  X

  கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் நடைபெற்ற மக்களை தேடி மனுக்கள் பெரும் நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டார்.

  கள்ளக்குறிச்சி அருகே செய்தி மக்கள் தொடர்பு துறை புகைப்பட கண்காட்சி: அமைச்சர் எ.வ.வேலு பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
  • பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்திமக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இங்கு பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் துறையின் சார்பில் புகைப்பட தொகுப்புகள் அடங்கிய விளம்பர பதா கையில் அமைக்க ப்பட்டிருந்தது.தனை பொதுப்பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்ட மன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டார். இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்திமக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

  அதன்படி மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட தொகுப்புகளின் கண்காட்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து துறைகளின் முக்கியமான அறிவிப்புகளில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த தொகுப்பும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட அறிவிப்புகள், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான அறிவிப்பு, கோயில் நிலங்கள் மீட்பு, மகளிருக்கான இலவச பஸ் பயணம், கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அறிவிப்பு, விவசாயி களுக்கான அறிவிப்பு, சாலை போக்குவரத்துக்கான அறிவிப்பு, பள்ளி கல்வி துறை அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியி டப்பட்ட அறிவிப்புகளின் புகைப்பட தொகுப்புகள் விளம்பர பதாகையில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டதை பார்வையிட்டனர்.

  பார்வையிட்ட அமைச்சர் பொது மக்கள் தமிழ்நாடு அரசின் திட்டங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்படக் கண்காட்சியை சிறப்பாக அமைத்திருப்பதாக பாராட்டினார். இதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும் பார்வை யிட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சிவக்குமார், அனைத்து ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×