search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணிவிடை செய்யும் வகையில் திருநயினார்குறிச்சி ஆலயத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் பாதம் கழுவும் நிகழ்ச்சி
    X

    பணிவிடை செய்யும் வகையில் திருநயினார்குறிச்சி ஆலயத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் பாதம் கழுவும் நிகழ்ச்சி

    • ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது
    • ஒருவருக்கொருவர் பாதங்களை கழுவி பணிவிடை செய்தனர்.

    கன்னியாகுமரி :

    கிறிஸ்துமஸ் பண்டி கையை அடுத்து கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகை ஈஸ்டர் பண்டிகை ஆகும். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி புனித வெள்ளியின் முந்தின நாள் வியாழன் பெரிய வியாழனாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெரிய வியாழன் இரவு பாஸ்கா இரவு கொண்டாடப்படும். இயேசு கிறிஸ்து இரவு உணவு உண்ட வேளையில் தம் சீடர்களின் பாதங்களை கழுவி, அவர்கள் ஒருவருக்கொருவர் பணியாளர்களாக இருக்க வேண்டும் என பாடம் புகட்டினார்.

    இதை நினைவு கூறும்வ கையில் ஆண்டுதோறும் பெரிய வியாழன் இரவு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பெரிய வியாழனை முன்னிட்டு நேற்றிரவு மணவாளக்குறிச்சி அருகே திருநயினார்குறிச்சி புனித அந்தோணியார் ஆலயத்தில் ஒருவருக்கொ ருவர் பணிவிடை செய்யும் விதத்தில் பங்கு மக்கள் மற்றும் அம்மாண்டிவிளை கிளை பங்கு மக்கள் இணைந்து ஒருவருக்கு ஒருவர் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குமக்கள் அன்பு செய்து பணிவிடை எண்ணம் மேலோங்கும் வகையில் ஒருவருக்கொருவர் பாதங்களை கழுவி பணிவிடை செய்தனர். இதில் பங்கு தந்தை லியோன் எஸ். கென்சன், அருட்சகோதரர் கேபா மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக பெரிய வியாழன் பாஸ்கா விருந்தில் ஆலயங்களில் பங்குத்தந்தையர் 12 பக்தர்களின் பாதங்களை கழுவுவர்.

    மக்கள் அனைவரும் ஒருவருக்கொ ருவர் அன்பு செய்யும் எண்ணம் மேலோங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு பங்கு மக்கள் ஒருவருக்கொருவர் பாதங்களை கழுவி அன்பை பரிமாறிக்கொண்ட னர் என்பது குறிப்பி டத்தக்கது

    Next Story
    ×