search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனுக்கள்"

    • கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக் கொண்டார்.
    • நிகழ்ச்சியில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 374 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக் கொண்டார்.

    தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் நலவாரிய நலதிட்ட உதவிகள், உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.94 ஆயிரத்து 500 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 வீதம் மொத்தம் ரூ.32ஆயிரத்து 874 மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரங்களையும், தாட்கோ மூலம் 14 பயனாளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் நல வாரிய அட்டைகளையும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 374 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்ப ந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நேர்காணல் முகாம் 22 -ந்தேதி நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்துக்கு உட்பட்ட செங்கமங்கலம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நவம்பர் 22 புதன்கிழமை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தாவது:-

    பேராவூரணி வட்டம் ஆவணம் சரகம் செங்கம ங்கலம் கிராமத்தில் நவம்பர் 22ஆம் தேதி புதன்கிழமை நடத்தப்பட உள்ள மக்கள் நேர்காணல் முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.
    • மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் உள்ளது. இந்த பகுதியில் சாலை குண்டு குழியுமாக உள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் கடலூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கிழக்கு ராமாபுரத்தில் குண்டு குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்த நிலையில், இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் திடீரென்று குட்டை போல் நின்றிருந்த மழை நீரில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

    மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளை உடனடியாக சீரமைக்கா விட்டால் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தனர் . பின்னர் சிறிது நேரத்தில் சிறைபிடித்த அரசு பஸ்ைசை விடுவித்து நாற்று நடும் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை பொது மக்கள் வழங்கினர்
    • ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை பொது மக்கள் வழங்கினர்.

    இதேபோல் மாற்றுத்திற னாளிகள் 14 மனுக்களை வழங்கினர். மாவட்ட மாற்றுத்தி றனாளி நல த்துறை சார்பில் தசை சிதைவு நோயினால் பாதிக்க ப்பட்ட 2 மாற்றுத்தி றனாளி களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும், மடக்கு சக்கர நாற்காலி 2 நபர்களுக்கும், இயற்கை மரணம் ஈமச்ச டங்கு காசோலை 5 நபர்க ளுக்கும், காதெலிக்கருவி ஒரு நபருக்கும் என மொத்தம் 10 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இதர மனுக்கள் 235 என மொத்தம் 842 மனுக்கள்அளிக்கப்பட்டது.
    • ரூ.4,23,500 மதிப்பீட்டிலான உதவிகளை வழங்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். கூட்டத்தில் பட்டா தொடர்பாக 178 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 72 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 46 மனுக்களும், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக 34 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 62 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 56 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 31 மனுக்களும், தையல் எந்திரம் கோரி 45 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 60 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 235 என மொத்தம் 842 மனுக்கள்அளிக்கப்பட்டது.

    மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கு உதவித்தொகையாக 24 பயனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4,08,000 மதிப்பீட்டிலும் மற்றும் மாற்றுத்திறனாளியின் மகன், மகளுக்கு கல்வி உதவித்தொகையாக 5 பயனாளிகளுக்கு ரூ.15,500 மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.4,23,500 மதிப்பீட்டிலான உதவிகளை வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை மூலம் பல்வேறு வட்டங்களை சார்ந்த 2 மாற்றுத்திறனாளி பயனாளிகள் உட்பட 20 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் , தனித்துணை கலெக்டர் ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • மொபைல் எண் மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம் என மொத்தம் 28 மனுக்கள் பெறப்பட்டது.
    • முகாமிற்கு வட்ட வழங்க அலுவலர் கங்காலக்ஷ்மி தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் அசோக் முன்னிலை வகித்தார். தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் வரவேற்றார். முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம் என மொத்தம் 28 மனுக்கள் பெறப்பட்டது. 28 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் வட்ட பொறியாளர் அய்யனார் மற்றும் நுகர்வோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்ட வழங்க அலுவலர் கங்காலக்ஷ்மி தலைமை தாங்கினார். முகாமில் 36 மனுக்கள் பெறப்பட்டு உடனே தீர்வு காணப்பட்டது.

    • குளிச்சபட்டு ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடந்தது.
    • விரைவாக மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் குளிச்சபட்டு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    குளிச்சபட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஊராட்சியில் உள்ள வரவு செலவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    பின்னர் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    விரைவாக மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று பொதுமக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் வாசு, ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் மணிகண்டன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா நடராஜன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் ,ஊரக வளர்ச்சித் துறை திட்ட பணியாளர் மாலா, அங்கன்வாடி விற்பனை யாளர் செல்லத்துரை, ஊராட்சி செயலாளர் சசிகுமார், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக்கொண்டார்.
    • கூட்டத்தில் பட்டாமாறுதல் உள்பட 527 மனுக்கள் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக்கொண்டார்.

    இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 527 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஷேக், மாவட்ட உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 512 மனுக்கள் பெறப்பட்டன.
    • துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலெக்டர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 512 மனுக்கள் பெறப்பட்டன.

    பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு நிவாரணத் தொகையாக 2 பயனாளி களுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை, ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், 2 பயனாளி களுக்கு சலவை பெட்டி களும் என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டது.
    • 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங் குல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி குமார் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உத வித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப் பட்டுள்ள சிறப்பு அமருமி டத்திற்குச் சென்று, மாவட்ட வருவாய் அலுவலர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சம்மந் தப்பட்ட துறை அலுவலர்க ளிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, மினி டைரி தொழில், ஆடு வளர்ப்பு தொழில்களுக்காக 33 பயனாளிகளுக்கு ரூ.26.90 இலட்சம் மானியத்தொ கைக்கான காசோலைக ளையும், மாவட்ட ஆதிதிரா விடர் நலத்துறை மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.2.20 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்க ளையும்,

    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம் மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், தனித் தணை ஆட்சியர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் கூடு தல் நேர்முக உதவியாளர் முத்துக்கழுவன், உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைகளை உடனடியாக தீர்க்க உத்தரவு
    • சாக்கடை ஓடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 41-வது வார்டு வட்டவிளை, காந்திஜி நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம், 42-வது வார்டுக்குட்பட்ட வேதநகர் கோவில் தெரு 1,2,3 பகுதிகளில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 52-வது வார்டு புல்லுவிளை-குளத்து விளை சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் போன்றவை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, உதவி பொறியாளர் ராஜசீலி, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் அனிலா, ஸ்டாலின் பிரகாஷ், ரமேஷ், சுகதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள் ராஜேஷ், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். வீட்டு வரி குறைப்பு, சொத்து வரி பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடியாக தீர்வு காண அவர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் கூறுகையில், நாகர்கோவில் மாநகர பகுதியில் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே சாக்கடை ஓடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சுகாதார ஆய்வாளர்கள் அனைவரும் தூய்மை பணியாளர்கள் மூலமாக மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவுநீர் ஓடைகளையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் சாக்கடை நீர் சாலைகளில் ஓடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    • கம்யூனிஸ்டு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதில் மொத்தம் 94 மனுக்கள் கொடுக்கப்பட்டது.

    திருச்சுழி

    திருச்சுழி ஒன்றியம் நரிக்குடியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. நரிக்குடி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் பேராணியாக சென்றனர்.

    வீடற்றவர்களுக்கு வீடு கேட்டும், குடியிருப்பு மக்களுக்கு பட்டா கேட்டும், 100 நாள் வேலையை முறைப்படுத்தி வழங்கவும், கிராமப்புற மக்களுக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் வளர்ச்சி அலுவ லரிடம் மனு கொடுக்கப் பட்டது.

    இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 94 மனுக்கள் கொடுக்கப்பட்டது.

    இந்த ஆர்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பாலு, தாலுகா குழு செய லாளர் பெரியசாமி, விவசாய சங்க தாலுகா தலைவர் அயூப்கான், சி.ஐ.டி.யூ. உதவி தலைவர் சுரேஷ், விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டத்தலைவர் பூங்கோதை, மாற்றுத்திற னாளி சங்க நிர்வாகி ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×