search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசோதனை"

    • இ.சி.ஜி., ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • முடிவில் ஊராட்சி துணை தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

    சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் வட்டார மருத்துவர் டாக்டர் கிளின்டன், ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி செயலர் உமாபதி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. யுமான நிவேதா முருகன் முகாமை திறந்து வைத்து பெசினார்.

    முகாமில் கண் பரிசோதனை, சக்கரை நோய் கண்டறிதல், ஹெச்.ஐ.வி. சோதனை கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தல், இ சி ஜி, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களை கண்டறிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கர், திமுக துணைத் தலைவர் செல்வமணி, ஒன்றிய செயலாளர்கள் இமயநாதன், முருகமணி, மற்றும் நடராஜன், செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் சுகாதார அலுவலர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    • குடும்ப பிரச்சனை காரணமாக மனவேதனையில் ஹவ்ராபீவி இருந்தாக கூறப்படுகிறது.
    • பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே பண்டாரவாடை வர்ணதைக்கால் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி ஹவ்ரா பீவி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது.

    சம்பவதன்று குடும்ப பிரச்சனை காரணமாக மன வேதனையில் ஹவ்ராபீவி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஹவ்ராபீவி சேலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஹவ்ரா பீவி தம்பி முகமது காசிம் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குபதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஹவ்ராபீவிக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆவதால் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், குடல் புழு நீக்க பரிசோதனை செய்யப்பட்டது.
    • ஏராளமான கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், காளகஸ்தி நாதபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு செம்பனார்கோயில் கால்நடை மருத்துவர் அன்பரசன் தலைமையில் டாக்டர்கள் சுதா, பிரபாவதி, மோனிஷா ஆகியோர் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

    மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், மலடு நீக்குதல், குடல் புழு நீக்குதல் மற்றும் ஆடு, கோழி, நாய்களுக்கு நோய் தடுப்பூசிகளும் போடப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடு களை ஊராட்சி தலைவர் ஜோதிவள்ளி, துணை தலைவர் சரவணன் ஆகியோர் செய்திருந்னர்.

    முகாமில் ஏராளமான கிராம மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதில் வாழ்ந்து காட்டு வோம் திட்டத்தின் பொறுப்பா ளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • லூர்துராஜ் குழந்தை தன்விகாவின் மரணத்தில் மனைவி ரஞ்சிதம் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தார்.
    • சோதனையில் குழந்தையின் உடலில் உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் எந்த காயங்களும் இல்லை என்பது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள நேதாஜிபுரத்தை சேர்ந்தவர் லூர்துராஜ். இவர் எட்டிமடை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ரஞ்சிதம். இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார். இந்தநிலையில் இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தன்விகா என பெயர் வைத்தனர்.

    கடந்த 15-ந் தேதி தன்விகா தனது 1½ வயது குழந்தையுடன் தொண்டாமுத்தூர் களிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு இருந்த போது 17-ந் தேதி தன்விகாவிற்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ரஞ்சிதம் தனது குழந்தையை கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு இருந்தபடி அவரது கணவரை தொடர்பு கொண்ட ரஞ்சிதம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருப்பதாகவும் கூறினார். அன்று இரவு குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தது.

    இதனையடுத்து ரஞ்சிதம் குழந்தையை தாய் முருகம்மாள் மற்றும் அவரது தம்பி ஆகியோருடன் சேர்ந்து குழந்தையின் உடலை கணவர் வீட்டிற்கு எடுத்து சென்றார். பின்னர் குழந்தையின் உடலை கே.ஜி.சாவடி நேதாஜிபுரத்தில் உள்ள மயானத்தில் புதைத்தனர்.

    இந்தநிலையில் லூர்துராஜ் குழந்தை தன்விகாவின் மரணத்தில் மனைவி ரஞ்சிதம் மீது சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

    நேற்று போலீசார் நேதாஜிபுரத்தில் உள்ள மயானத்துக்கு சென்றனர். பின்னர் மதுக்கரை தாசில்தார் ராஜேஸ்குமார் முன்னிலையில் குழந்தையின் உடலை போலீசார் ேதாண்டி எடுத்து டாக்டர்கள் குழுவினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் குழந்தையின் உடலில் உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் எந்த காயங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் குழந்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சோதனை முடிவில் குழந்தை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள கீழக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48) விவசாய கூலி தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மனேவேதனை அடைந்த முருகேசன் பூச்சி மருந்தை ( விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்டந்தோறும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.
    • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பிறகு 2 நாட்களுக்குள் வீடு திரும்பி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டந்தோறும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் கடந்த 1-ந்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் தினமும் நான்கு இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறப்பு முகாம் நடத்தி காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலையிலும் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.

    முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு முகாம் நடைபெற்ற பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர். மருத்துவ முகாமில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, மேல்புறம், ராஜாக்கமங்கலம், முஞ்சிறை, கிள்ளியூர் உள்பட 9 ஒன்றியங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் இதுவரை 11,594 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 33 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் உள்ளது. தற்பொழுது டெங்கு அறிகுறியுடன் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 2 பேரும், தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பிறகு 2 நாட்களுக்குள் வீடு திரும்பி வருகிறார்கள்.

    • இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே தேவனாஞ்சேரி கீழத்தெ ருவை சேர்ந்தவர் மகேந்திரன்.

    இவரது மகன் தேசிகன் (வயது 26).

    கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

    இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.

    • அங்கம்மாள் இன்று காலை மடப்பட்டு - திருக்கோவிலூர் சாலையை கடக்க முயன்றார்.
    • சம்பவ இடத்திற்கு திருவெண்ணைநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர்

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 75). இவர் இன்று காலை மடப்பட்டு - திருக்கோவிலூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திருவெண்ணைநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர். மூதாட்டி அங்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிகழ்ச்சியை ஹாஜி முகமது அசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

    கடையம்:

    கடையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலு வலர் பழனிக்குமார் மேற்பார்வையில், ரவண சமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் தலைமையில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    சேவாலாயா சங்கிலி பூதத்தான் முன்னிலை வகித்தார். ஊராட்சிமன்ற துணை தலைவர் ராம லெ ட்சுமி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியை ஜமாத் தலைவர் ஹாஜி முகமது அசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஊராட்சிமன்ற உறுப்பினர் மொன்னா மொகமது எர்சாத் மருத்துவ அட்டை வழங்கி னார். முகாமில் மீரான், சாகுல்அமீது, ஜெய்லானி, தளபதி பீர், சின்ன ஜெய்லானி, அகமது ஷா, முகமது ஷீபக், மசூது அலி ஆகியோர் கலந்து கொ ண்டனர். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, ரத்த பரிசோ தனை செய்ய ப்பட்டது.

    முகாமில் ஈ.சி.ஜி பரிசோதனை, சிறப்பு மருத்துவம், எலும்பு மருத்துவம் பொதுமருத்துவம், மகளிர் மருத்துவம், கண் மருத்துவம் பல் மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காசநோய், தொழுநோய், குடும்பநலம் குறித்த கண்கா ட்சி அமைக்கப்பட்டது. நடமாடும் எக்ஸ்ரே மூலம் பயனாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் குறித்த உறுதி மொழி எடுக்கப்ப ட்டது.

    முகாமில் மருத்துவர்கள் முகமது உமர், பாண்டியராஜன், அமுதா, சூரிய பிரபா, தமிழ் முதல்வி, ஆஷா பர்வின் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மேலும் முகாமில் சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • மருத்துவக் குழுவினர் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர்.

    கீழக்கரை

    கீழக்கரை அரசு ஆஸ் பத்திரியில் முதல்-அமைச் சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் யோஜ னா திட்டத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சகாய ஸ்டீபன் ராஜ் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் தலைமையில் நடந் தது.

    இம்முகாமில் டாக்டர்கள் பிரவீன் ராஜ்(பொது), சரத் குமார் (அறுவை சிகிச்சை நிபுணர்), பிரகாஷ் (எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை) ராஜ வசந்த குமாரி(பெண்கள் நலம்) ஆகியோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் ஏராளமானோருக்கு இலவச இ.சி.ஜி., எக்ஸ்ரே சோதனை நடந்தது.

    மேலும் முதல்-அமைச்சர் காப்பீடு, பிரதமர் காப்பீடு திட்டத்திற்கானபுதிய மருத் துவ காப்பீட்டு திட்டம் பதிவு நடைபெற்றது. இஸ் லாமியா மெட்ரிக்.மேல் நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவர்கள் மருத்துவ முகாமிற்கு வந்த பொது மக்களுக்கு உதவி புரிந்தனர். மருத்துவக் குழுவினர் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி மருந்து, மாத்திரை வழங்கினர்.

    • வேங்கைவயல் வழக்கில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு
    • ஏற்கனவே இறையூர் பகுதிகளை சேர்ந்த 25 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காக அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த வழக்கு தொடர்பாக வேங்கைவயல், இறையூர் பகுதிகளை சேர்ந்த 25 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதற்காக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த மனு மீதான விசாரணையின் போது அடுத்தக்கட்ட நடவடிக்கை தெரியவரும். இதற்கிடையில் ஏற்கனவே டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவுகள் படிப்படியாக வந்திருப்பதாகவும், அதனை வைத்தும் ஒரு புறம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

    • புஷ்பாம்பாளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • சிவஞானம் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த கீழநாகை பகுதியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 73). இவரது மனைவி புஷ்பாம்பாள் (70). இவர்களுக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் மருமகள், பேரக்குழந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி மாலை புஷ்பாம்பாளுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக அவரை மன்னார்குடி ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    புஷ்பாம்பாள் இறந்த துக்கத்தில் அவரது கணவர் சிவஞானம் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை சிவஞானம் திடீ ரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மன்னார்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் பாசம் அப்பகுதி மக்களையும், குடும்பத்தின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×