search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரச்சினை"

    • குடும்ப பிரச்சனை காரணமாக மனவேதனையில் ஹவ்ராபீவி இருந்தாக கூறப்படுகிறது.
    • பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே பண்டாரவாடை வர்ணதைக்கால் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி ஹவ்ரா பீவி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது.

    சம்பவதன்று குடும்ப பிரச்சனை காரணமாக மன வேதனையில் ஹவ்ராபீவி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஹவ்ராபீவி சேலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஹவ்ரா பீவி தம்பி முகமது காசிம் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குபதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஹவ்ராபீவிக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆவதால் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு கட்சியினரின் பங்கேற்பு கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணன், சாய்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    அவிநாசியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் சாலையோரக் கடைகளை முறைப்படுத்த வேண்டும், பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி வாரச் சந்தை வளாகத்துக்கு சாலையோரக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் அக்டோபா் 9-ந் தேதி கடையடைப்பு போராட்டத்தை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

    இந்நிலையில், பல்வேறு கட்சியினரின் பங்கேற்பு கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி, பொறுப்பாளா்கள் சண்முகம், பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளா் கோபால், அதிமுகவைச் சோ்ந்த ஜெயபால், மூா்த்தி, மதிமுகவை சோ்ந்த பாபு, காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணன், சாய்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    இதில், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ள கடையடைப்பை திரும்பப் பெற வேண்டும், அவிநாசி நகரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சாலையோர வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், பேரூராட்சி, நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல் துறை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து சாலையோர வியாபாரிகளின் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • அலுவலர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு காலதாமதமின்றி வழங்கிட வேண்டும்
    • ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    திடல் ஊராட்சிக்குட்பட்ட, திடல் கிராமத்தில் ஜல்ஜீவன் மிசன் 2020-2021 திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக் கத்தொட்டி யுடன் கூடிய பைப்லைன் நீட்டித்தல் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வு மான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்ப டும் போது மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகி மகிழ்ச்சி அடைகிறார்கள். மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப இப்பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் மற்றும் பைப் லைன் நீட்டிப்பு பணிகள் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இப்பணிகளை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பணிகளை அலுவலர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு காலதாமதமின்றி வழங்கிட வேண்டும். பணிகள் தரமானதாகவும், மக்களின் குறைபாடுகளுக்கு ஆளாகாமலும் பணிகளில் ஆர்வம் காட்டி நிறைவேற்றிட வேண்டும். மக்களின் நியாயமான, தேவையான கோரிக்கைகளை நிறைவேற்று வதில் உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன். சுந்தர்நாத் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    • கோவில் கும்பாபிஷேக பிரச்சினையில் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டையில் மாமுண்டி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த அந்தப்பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களின் முயற்சியின் பேரில் கோவில் திருப்பணிகள் நடந்தது. இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு முன்னுரிமை வழங்குவதாக புகார் எழுந்தது. இது குறித்து காஞ்சரம்பேட்டை அனைத்து சமுதாயத்தினரும் மலையாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

    இதையறிந்த போலீசார் மற்றும் வருவாய் அதிகாரி அந்த கிராம மக்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கணவன்- மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
    • தீபா வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை சேர்ந்தவர் மாணிக்கராஜா (வயது 25) மரப்பட்டையில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த தீபா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி திருமணம் நடைபெற்றது திருமணமாகி 2 மாதம் ஆகிறது.

    கணவன்- மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாணிக்கராஜா வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று பார்த்தபோது தீபா வீட்டின் மாடி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனே தீபாவை அவரது கணவர் மாணிக்கராஜா பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு

    கொண்டு சென்ற போது தீபா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி உள்ளனர்.

    இது குறித்து தீபாவின் தாயார் கற்பகம் எனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பாபநாசம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.

    இதுகுறித்து பாபநாசம் டி.எஸ்.பி பூரணி, சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர் தீபாவுக்கு திருமணமாகி 2 மாதம் ஆவதால் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா விசாரணை நடத்தி வருகிறார்.

    • கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கதவு திறக்காமல் போன விவகாரம்...
    • விரைவில் விசாரணை தொடங்க உள்ளது

    கே.கே.நகர்,

    திருச்சி விமான நிலையத் திலிருந்து பல்வேறு வெளிநா–டுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.அதில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்குவதற்கு தயாரானார்கள். ஆனால் விமானத்தில் கதவுகள் திறக் கப்படவில்லை. ஊழி–யர்கள் முயற்சி செய்தும் கதவை திறக்க முடியவில்லை. தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.இதற்கிடையே விமானத் திற்குள் சிக்கிக்கொண்ட பயணிகள் பெரும் அவ–திக்கு ஆளானார்கள். பின்னர் உடனடியாக இது பற்றி தொழில்நுட்ப வல்லு–நர்களுக்கு தகவல் தெரி–விக்கப்பட்டது. அவர்கள் வந்து சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு கதவை திறந்தனர். அதன் பிறகே பயணிகள் வெளியே வர முடிந்தது.இந்த விவகாரம் தொடர் பாக விமான நிலைய ஆணையக் குழுவின் சார் பில் விசாரணைக்கு உத்தர–விடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த விமான நிலைய ஆணைய குழுவினர் விசாரணையை தொடங்குவார்கள் என்று தெரிகிறது.

    • 5 முறை சமாதான கூட்டம் நடத்தியும் பலனில்லை
    • கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் பழமை வாய்ந்த பட்டவையா மற்றும் கொம்புக்கார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெற்ற நிலையில் அப்போது இருந்தே கோவிலில் வழிபாடு மற்றும் திருவிழா கொண்டாடுவதில் கோயில் உரிமைக்காரர்களான தானான், சின்னத்தானான் வகையறாக்களுக்கும் சிவந்தான், ஏகன் வகையறாக்களுக்கும் பிரச்சனை நிலவி வந்தது.இந்நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு பட்டவையனார் கோவில் வளாகத்தில் கல்வெட்டு வைக்க முயன்ற சிவந்தான் கரைகாரர்களுக்கும், அதைத்தடுக்க முயன்ற தாணான் கரைகாரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளாக மாறியது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டதில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் தாண ன் மற்றும் சிவந்தான் கரைகளைச் சேர்ந்த 8 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி மற்றொரு தரப்பை சேர்ந்த மக்கள் அன்னதானத்திற்காக வெட்டி வைத்திருந்த காய்கறிகளை சாலையில் கொட்டி கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அறந்தாங்கி- பட்டுக்கோட்டை நெடுஞ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.இக்கோயில் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே, ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் 2 சமாதான கூட்டமும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு சமாதான கூட்டமும் நடைபெற்றது, இந்நிலையில் மீண்டும் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. பல்வேறு வகையில் பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, மண்டல துணை தாசில்தார் ராஜேந்திரன் , ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி மற்றும் கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவ லர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் இருதரப்பு சமாதான கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றதுஇந்த சமாதான கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் கோயில் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

    • இவர் ஆனத்தூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.
    • இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த துளசி மகன் நாகராஜ் (வயது 42). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் ஆனத்தூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு பணம் வரவில்லை. வங்கி ஊழியர்களிடம் பணம் ஏன் வரவில்லை என்று கூறி பிரச்சினை செய்து விட்டு அரசூர் - பண்ருட்டி சாலையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது விழுப்பு ரத்தில் இருந்து அரசூர் வழியாக பண்ருட்டி நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். பஸ் கண்ணாடியை உடைத்து பஸ் டிரைவர் கண்டக்டரை தாக்கினார்.

    பஸ் செல்லாதவாறு வயர்களையும் பிடுங்கி எறிந்தார். இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ராபர்ட் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததை பார்த்த நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நாகராஜை தேடி வருகின்றனர்.

    • இந்த நிலையில் கொலை வழக்கு இன்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
    • இதற்காக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ரபீக்கை டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
    • அவன் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான்.

    நாகர்கோவில், அக். 27-

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் செய்யது அலி (வயது 30), வாசிம் என்ற முன்னா என்ற ரபீக் (34).

    கொலை

    நண்பர்களான இவர்கள் நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்து தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் செய்யது அலிக்கும், ரபீக்கி ற்கும் தொழிலில் பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக அடிக்கடி பிரச்சினை எழுந்து உள்ளது.

    சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ரபீக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செய்யதுஅலியை குத்தி கொலை செய்தார். இதைதொடர்ந்து, ரபீக் அங்கிருந்து தப்பிஓடி தலைமறைவாகி விட்டார்.

    கைது

    இந்த கொலை சம்ப வம் கடந்த 2010-ம் ஆண்டு நடந்தது. இது குறித்து கோட்டார் போலீ சார் வழக்குப்பதிவு செய்து தலை மறைவான ரபீக்கை தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

    இதற்கிடையே டெல்லி யில் ஒரு கொலை வழக்கில் ரபீக் கைது செய்யப்பட்டார். இது பற்றிய தகவல் குமரி மாவட்ட போலீசுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் கோட்டார் கொலை வழக்கு தொடர் பாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    இதை தொடர்ந்து டெல்லி போலீசார் ரபீக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தி இருந்தனர். விசாரணைக்குப் பின்னர் ரபீக் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பலத்த பாதுகாப்புடன்...

    இந்த நிலையில் கொலை வழக்கு இன்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ரபீக்கை டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவன் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான்.

    • இருவருக்குமிடையே இட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • தகராறில் மணிமாறன் அவரது மகன் உள்ளிட்டோர் பிரகலாதனை தாக்கியுள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரகலாதன் என்பவருக்கும் இடையே இட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    நேற்று மணிமாறன் அந்த இடத்தில் இருந்த வேலியை அகற்றியுள்ளார் . இதில் மணிமாறன் மற்றும் பிரகலாதன் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த தகராறில் மணிமாறன் அவரது மகன் உள்ளிட்டோர் சேர்ந்து பிரகலாதனை கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர் .

    இதில் பலத்த காயமடைந்த அவர் சீர்காழி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் பாகசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • பழுதடைந்த சாலைகளை உடனே சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

    கன்னியாகுமரி:

    திருவட்டார் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் பேரூராட்சி மன்ற தலைவர் பெனிலா ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    செயல் அலுவலர் மகாராஜன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சுந்தர்ராஜ், கவுன்சிலர்கள் சுவாமிதாஸ், றாபி, ஸ்டாலின் ஜோஸ், ராஜம்மாள், புஷ்பம், ஜெஸ்டின் ராஜ், ராஜேந்திரன், பரமேஷ்வரி, உஷாகுமாரி, ராஜிலா, சுரேஷ், மணிகண்டன், செல்வி, சிந்து, லில்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை சரி செய்ய திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதியதாக 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி அமைப்பது என்றும், திருவட்டார் காவல் நிலையம் அருகில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி புதியதாக அமைப்பது என்றும், பேரூராட்சிக்கு உட்பட்ட பழுதடைந்த சாலைகளை உடனே சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், விவசாய நிலங்கள் வளம் பெற பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள குளம், ஏரிகளை உடனே தூர் வாரி விவசாயிகள் பயன் பெறும் வகையில் சீரமைக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.
    • அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் ஆகியன குறித்து இருத்தல் கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெ க்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின், 2021-2023 ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் கூடவுள்ளது. இதனையொட்டி திருவாரூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொதுபிரச்சனைகள் மற்றும் குறைகள் குறித்து மனுக்களை வழங்கலாம்.

    மனுவினை தமிழில் எழுதி தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை– 600009 என்ற முகவரிக்கு ஐந்து நகல்களை அக் 7ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    எழுதப்படும் மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பலஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.

    மனுக்கள் ஒரேயொரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொருதுறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.

    மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    ஆனால் மனுவில் தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப்பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் ஆகியன குறித்து இருத்தல் கூடாது.

    சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்.

    ஒரே மனுதாரர் பல மனுக்களைஅனுப்பி இருந்தாலும், குழு முக்கிய த்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    மனுதாரர் முன்னிலையில் குழுக்கூட்டத்தில் கலந்துகொ ள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.

    இது குறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாள் குறித்த தகவல் தனியாக அனுப்பப்படும். 7.10.22-க்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வி ற்கு எடுத்துக் கொள்ளப்படாது.

    இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    ×