என் மலர்
நீங்கள் தேடியது "Case record"
- ஜோதி அதே பகுதியில் உள்ள பண்ணை குட்டையில் இறங்கும்போது திடீரென்று கால் தவறி தண்ணீரில் விழுந்தார்.
- ஜோதி உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி ஜோதி (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள பண்ணை குட்டையில் இறங்கும்போது திடீரென்று கால் தவறி தண்ணீரில் விழுந்தார். இதில் தண்ணீர் முழ்கி ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதி உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த நபரை கூச்சலிட்டு கூப்பிட்டு பார்த்தனர்.
- தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மூழ்கியவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இன்று காலை ஒருவர் ஆற்றின் கரையோரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு திடீரென தண்ணீரில் இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென அந்த நபர் மாயமானர். இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த நபரை கூச்சலிட்டு கூப்பிட்டு பார்த்தனர். ஆனால் அவர் நீரிலிருந்து வெளியில் வரவில்லை.
இதனை தொடர்ந்து கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மூழ்கியவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த நபர் தண்ணீரில் மூழ்கி இறந்தது கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணையில் அவர் கடலூர் நவநீதம் நகரை சேர்ந்த தொழிலாளி பன்னீர்செல்வம் (வயது 40) என்பது தெரிய வந்தது. ஆற்றில் மூழ்கி பலியான பன்னீர்செல்வம் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியை தாக்கினார்.
- புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரும்பார்த்த புரம் பாரதி நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 50), பெயிண்டர். இவரது நண்பர் பிரபு (36) தொழிலாளி. இவர்கள் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு மணவெளி பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடித்தனர். பின்னர் பூபதி அவரது சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது பிரபு அவரிடம் கூடுதலாக சாராயம் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே பூபதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை கோர்ட்டில் நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட பிரபுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து, அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜரானார்.
- பிரதிஷா கடந்த 2-ந் தேதி மாலை 6மணிக்கு வெளியில் சென்றவர் வீடு திரும்ப வில்லை.
- சீராளன் ஆசை வார்த்தை கூறி பிரதிஷாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி ெரயில்வே காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரதிஷா (19), இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.இவர் கடந்த 2-ந் தேதி மாலை 6மணிக்கு வெளியில் சென்றவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரது தாயார் லதா பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் ெரயில்வே காலனியை சேர்ந்த சீராளன் ஆசை வார்த்தை கூறி பிரதிஷாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை வலை வீசி தேடி வருகிறார்.
- சிவக்குமார் நெடுஞ்சேரி புத்தூர் ரோட்டில் ஆவின் பால் கடை வைத்து நடத்தி வருகிறார்.
- கடை ஷெட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே துணிஞ்சி ரமேடு பெரியார்தெருவைச் சேர்ந்த சிவக்குமார் (50). இவர் நெடுஞ்சேரி புத்தூர் ரோட்டில் ஆவின் பால் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடை ஷெட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார். கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் இரும்பு மேஜையின் டிராவை உடைத்து உள்ளே இருந்த ரூ.37,490 ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவக்குமார் சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- விஜயகுமார் மனைவி ரஞ்சிதா உள்பட 5 பேர் நாட்டு சக்கரை அரைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைபேட்டையில் பொன்னையன் என்பவருக்கு சொந்தமான நாட்டு சர்க்கரை அரைக்கும் ஆலை உள்ளது. இங்கு கோ.மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மனைவி ரஞ்சிதா (23) உள்பட 5 பேர் நேற்று நாட்டு சக்கரை அரைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ரஞ்சிதா ஆலையில் தேங்கிய குப்பைகளை ஆலையின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் கொட்டு வதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கிருந்த நல்ல பாம்பு ரஞ்சிதாவின் வலது கையில் கடித்தது.
இதில் மயங்கி விழுந்த ரஞ்சிதாவை அருகி லிரு ந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- இவர் ஆனத்தூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.
- இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த துளசி மகன் நாகராஜ் (வயது 42). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் ஆனத்தூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு பணம் வரவில்லை. வங்கி ஊழியர்களிடம் பணம் ஏன் வரவில்லை என்று கூறி பிரச்சினை செய்து விட்டு அரசூர் - பண்ருட்டி சாலையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது விழுப்பு ரத்தில் இருந்து அரசூர் வழியாக பண்ருட்டி நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். பஸ் கண்ணாடியை உடைத்து பஸ் டிரைவர் கண்டக்டரை தாக்கினார்.
பஸ் செல்லாதவாறு வயர்களையும் பிடுங்கி எறிந்தார். இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ராபர்ட் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததை பார்த்த நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நாகராஜை தேடி வருகின்றனர்.
- விவசாய நிலம் அருகில் சோளம் பயிர் செய்து அறுவடை செய்துள்ள இடத்தில் நிரோஷாவின் பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன
- இதைப்பார்த்து ஆத்தி ரமடைந்த சாமிகண்ணு தன்னிடம் இருந்த கொடுவாளால் மாடுகளின் வால் மற்றும் கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிகண்ணு. இவரது மனைவி நிரோஷா (வயது 33). இவரும், இவரது கணவரும் 2 கறவை மாடுகள் வைத்து, கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதே ஊரை சோ்ந்த பிச்சன் மகன் சாமிகண்ணு என்பவரின் விவசாய நிலம் அருகில் சோளம் பயிர் செய்து அறுவடை செய்துள்ள இடத்தில் நிரோஷாவின் பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
இதைப்பார்த்து ஆத்தி ரமடைந்த சாமிகண்ணு தன்னிடம் இருந்த கொடுவாளால் மாடுகளின் வால் மற்றும் கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதனால் ரத்தம் சொட்ட... சொட்ட... வலி தாங்க முடியாமல் மாடுகள் அலறின. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நிரோஷா, சாமிகண்ணுவிடம் தட்டிக் கேட்டபோது அவர் ஆபாசமாக திட்டி கொடுவாளை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் இது குறித்து நிரோஷா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- போலீசார் வெங்கட்ராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
திருப்பதி
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராம்.
இந்த நிலையில் கடந்த வாரம் இளம் பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்தனர். வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் மட்டும் தனியாக இருந்தார்.
இதனை அறிந்த வெங்கட்ராம் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அப்போது மாற்றுத்திறனாளி இளம் பெண்ணே பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.
இதற்கு மாற்றுத்திறனாளி பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை சரமாரியாக தாக்கி காலை உடைத்தார். மாற்றுத்திறனாளி பெண் வலியால் அலறி கூச்சலிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்தபோது வெங்கட்ராம் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து அங்கு இருந்தவர்கள் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டிற்கு வந்து படுகாயம் அடைந்த மகளை மீட்டு சர்வஜனா ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் நந்தியாலா போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க கூடாது என போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட இளம் பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் எதிர்க்கட்சிகளுக்கு தெரிய வந்ததையடுத்து அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வெங்கட்ராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
- பொது மக்கள் தாக்கியதில் ராஜேந்திரகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரகுமாரை கைது செய்தனர்.
கோவை:
கோவை வடவள்ளியை அடுத்த காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண்.
சம்பவத்தன்று இவர் வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் அந்த இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் குளியல் அறையின் அருகில் இருந்து ஓடுவதை பார்த்தனர்.
உடனே பொதுமக்கள் அந்த வாலிபரை துரத்தி மடக்கி பிடித்தனர். அவர்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து பேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் காளம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரகுமார் (29) என்பதும், பிளம்பராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும் ராஜேந்திரகுமார் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரகுமாரை கைது செய்தனர். பொது மக்கள் தாக்கியதில் ராஜேந்திரகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை சுண்டக்காமுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.