என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருத்தாசலத்தில் பாம்பு கடித்து இளம்பெண் சாவு
- விஜயகுமார் மனைவி ரஞ்சிதா உள்பட 5 பேர் நாட்டு சக்கரை அரைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைபேட்டையில் பொன்னையன் என்பவருக்கு சொந்தமான நாட்டு சர்க்கரை அரைக்கும் ஆலை உள்ளது. இங்கு கோ.மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மனைவி ரஞ்சிதா (23) உள்பட 5 பேர் நேற்று நாட்டு சக்கரை அரைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ரஞ்சிதா ஆலையில் தேங்கிய குப்பைகளை ஆலையின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் கொட்டு வதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கிருந்த நல்ல பாம்பு ரஞ்சிதாவின் வலது கையில் கடித்தது.
இதில் மயங்கி விழுந்த ரஞ்சிதாவை அருகி லிரு ந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






