தூக்கணாம்பாக்கத்தில் குட்டையில் தவறி விழுந்த மூதாட்டி பலி

ஜோதி அதே பகுதியில் உள்ள பண்ணை குட்டையில் இறங்கும்போது திடீரென்று கால் தவறி தண்ணீரில் விழுந்தார்.ஜோதி உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தூக்கணாம்பாக்கத்தில் குட்டையில் தவறி விழுந்த மூதாட்டி பலி
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி ஜோதி (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள பண்ணை குட்டையில் இறங்கும்போது திடீரென்று கால் தவறி தண்ணீரில் விழுந்தார். இதில் தண்ணீர் முழ்கி ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதி உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com