டிப்பர் லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மெக்கானிக் பலி

நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூரில் இருந்து விருத்தாசலத்திற்கு சென்றார். 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
டிப்பர் லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மெக்கானிக் பலி
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்தவர் இளவரசன் (வயது 32). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூரில் இருந்து விருத்தாசலத்திற்கு சென்றார். வேப்பூர் கூட்ரோடு அருகே மணலை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன் நிலை தடுமாறி, டிப்பர் லாரியின் பின்னால் மோதினார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த இளவரசனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இளவரசனை பரிசோதித்த டாக்டர்கள், இவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இது தொடர்பான புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com