search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஸ்வரூபம் எடுக்கும் கொம்புகார சுவாமி கோயில் பிரச்சினை
    X

    விஸ்வரூபம் எடுக்கும் கொம்புகார சுவாமி கோயில் பிரச்சினை

    • 5 முறை சமாதான கூட்டம் நடத்தியும் பலனில்லை
    • கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் பழமை வாய்ந்த பட்டவையா மற்றும் கொம்புக்கார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெற்ற நிலையில் அப்போது இருந்தே கோவிலில் வழிபாடு மற்றும் திருவிழா கொண்டாடுவதில் கோயில் உரிமைக்காரர்களான தானான், சின்னத்தானான் வகையறாக்களுக்கும் சிவந்தான், ஏகன் வகையறாக்களுக்கும் பிரச்சனை நிலவி வந்தது.இந்நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு பட்டவையனார் கோவில் வளாகத்தில் கல்வெட்டு வைக்க முயன்ற சிவந்தான் கரைகாரர்களுக்கும், அதைத்தடுக்க முயன்ற தாணான் கரைகாரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளாக மாறியது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டதில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் தாண ன் மற்றும் சிவந்தான் கரைகளைச் சேர்ந்த 8 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி மற்றொரு தரப்பை சேர்ந்த மக்கள் அன்னதானத்திற்காக வெட்டி வைத்திருந்த காய்கறிகளை சாலையில் கொட்டி கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அறந்தாங்கி- பட்டுக்கோட்டை நெடுஞ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.இக்கோயில் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே, ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் 2 சமாதான கூட்டமும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு சமாதான கூட்டமும் நடைபெற்றது, இந்நிலையில் மீண்டும் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. பல்வேறு வகையில் பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, மண்டல துணை தாசில்தார் ராஜேந்திரன் , ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி மற்றும் கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவ லர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் இருதரப்பு சமாதான கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றதுஇந்த சமாதான கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் கோயில் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×