search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி"

    • அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரை மீட்டு மார்த்தாண்டம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • அர்ச்சுனனின் உடல் இன்று குழித்துறை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 54). ரப்பர்பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார் இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் ஒரு மகளும் மகனும் உள்ளனர் மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை அர்ச்சுனன் திருநந்திகரையில் இருந்து குலசேகரம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வரும் போது பேச்சிப்பாறை சேனங்கோடு பகுதியை சேர்ந்த விஜோ ஜோசப்பு என்ற பள்ளி மாணவன் தனது இரு சக்கர வாகனத்தில் குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறை நோக்கி வந்தான். இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன.

    இதில் அர்ச்சுனன் தூக்கி வீசப்பட்டார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரை மீட்டு மார்த்தாண்டம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று இரவு அர்ச்சுனன் இறந்து விட்டார்.

    இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விஜோ ஜோசப் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். அர்ச்சுனனின் உடல் இன்று குழித்துறை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.

    • தொழிலாளி உள்பட 3 பேர் பலியாகினார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே வாடிப்பட்டி குமரம் பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையன் மகன் சரவணன் (24). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.இவர் பாலமேடு-மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் சரவணன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

    இது குறித்து அவருடைய தாய் சரஸ்வதி அலங்கா நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வரு கின்றனர்.

    திருமங்கலம் மேலக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (47). கொத்தனாரான இவர் திண்டுக்கல்-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கட்டுப் பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் அவருக்கு பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து முருகன் மனைவி ராமுத்தாய் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை-திருமங்கலம் நான்கு வழி சாலை கப்பலூர் சர்வீஸ் ரோட்டில் ஒருவர் சாலையோரம் அடிபட்டு மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் மறவன்குளம் கிராம நிர்வாக அதிகாரி ஆனந்த் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    பின்னர் இது குறித்து அவர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சாலையோரம் அடிபட்டு கிடந்த அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர் சிகிச்சை பலனனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி வையம்பட்டியில் நடுரோட்டில் சம்பவம்
    • தொழிலாளியை காலால் எட்டி உதைத்து தாக்கிய வாலிபர்
    • வைரலாகும் வீடியோவால் பரபரப்பு


    திருச்சி,


    திருச்சி வையம்பட்டி தொப்ப நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் வையம்பட்டியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் ராஜேந்தி ரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.


    இந்த நிலையில் தமிழ்செ ல்வனுக்கும் அவரது சகோதரர் லோகநாத னுக்கும் இடையே நிலத்த கராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. தமிழ்செ ல்வனுக்கு ஆதரவாக அவரது கடையில் வேலை பார்க்கும் ராஜே ந்திரனும், லோகநாதனுக்கு ஆதரவாக ஷாஜகானும் செயல்பட்டு வந்தனர்.


    இந்த நிலையில் வையம்பட்டி பகுதியில் வைத்து ராஜேந்திரனுக்கும் ஷாஜகானுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்ப ட்டது. பின்னர் அது கைகல ப்பாக மாறியது. அதில் ஆத்திரம் அடைந்த ஷாஜ கான், ராஜேந்திரனை அடித்து உதைத்து தாக்கி னார்.


    இதனை தமிழ்செல்வன் வீடியோ எடுத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்டார். இது தற்போது வையம்பட்டி பகுதியில் வைரல் ஆகியு ள்ளது. இந்த மோதல் தொடர்பாக ஷாஜகான் மீது வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.




    • சரமாரியாக தாக்கியதில் அபிஷேக்கின் பற்கள் முழுவதும் உடைந்துள்ளது.
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் அருகே நல்லூர் தேனாம்பாற தலவிளையை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 21), மீன்பிடி தொழிலாளி, இவருக்கும் குளக்கச்சி பகுதியை சேர்ந்த சஜி (19), சஜித் (21), சஜின் (19), கொல்லஞ்சி பகுதியை சேர்ந்த ஜெகன் (19) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    நேற்று அபிஷேக் கொல்லஞ்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சஜி உள்ளிட்ட 4 பேரும் தடுத்து நிறுத்தி கத்தியாலும், இரும்பு கம்பியாலும், கையாலும் சரமாரியாக தாக்கியதில் அபிஷேக்கின் பற்கள் முழுவதும் உடைந்துள்ளது. மேலும் தாடைகளும் காயமடைந்துள்ளது.

    கத்தியால் குத்தியதில் கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் முதுகை கடித்தும் காயப்படுத்தி உள்ளனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அபிஷேக், கத்தி அலறி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு கூடி உள்ளனர்.

    இதை பார்த்த 4 பேரும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். காயமடைந்தவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்சனை அரிவாளால் வெட்டி ரிச்சர்டு கொலை செய்தார்.
    • ரிச்சர்டை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுப டுபவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள். சமீபகாலமாக பிடி வாரண்டு குற்றவாளிகள் மீதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தலைமறைவு குற்றவாளி களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகிறார்கள். இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட தொழிலாளி ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பூதப்பாண்டி அருகே நாவல்காடு பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (வயது 57), தொழிலாளி. இவரு க்கும், அதே பகுதியை சேர்ந்த ரிச்சர்டு என்ற நிச்சர் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் நெல்சனை அரிவாளால் வெட்டி ரிச்சர்டு கொலை செய்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிச்சர்டை கைது செய்து ஜெயிலில் அடை த்தனர். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்து ரை செய்தார்.

    இதையடுத்து ரிச்சர்டை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை போலீசார் இன்று பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    • ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின் விசிறி, டி.வி. ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வரும் பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
    • மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வையாவூர் கிராமத்தில் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருபவர் பழனி. விவசாய கூலி தொழிலாளியான இவர் தனது தாய், மனைவி, 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.

    ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின் விசிறி, டி.வி. ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வரும் பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

    இந்த மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    எங்கள் வீட்டில் குறைந்த அளவிலேயே மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் மின் கட்டணம் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மின்கட்டணம் வந்து உள்ளது.

    அப்போது முறையிட்டும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மின் மீட்டரை மாற்றித் தரக்கோரி முறையிட்டேன். ஆனால் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில்தான் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் அதிகமாக ரூ.26,850 மின் கட்டணம் வந்துள்ளது.

    இவ்வளவு மின் கட்ட ணத்தை என்னால் செலுத்த இயலாது. அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் எனது மகள்கள் படிக்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

    எனவே அதிக அளவிலான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது கூலி தொழிலாளி பழனியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    • ஆறுமுகச்சாமியின் மனைவி இரு குழந்தைகளுடன் அவரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
    • ஆறுமுகசாமியை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் கீழ காலனி கீழ தெருவை சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி (வயது 48), கூலி தொழி லாளி. இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட தாகவும், அவரது மனைவி தனது இரு குழந்தைகளுடன் ஆறுமுகச் சாமியை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் தனது அம்மாவுடன் வசித்து வந்த ஆறுமுகசாமியை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை அவரது உறவினர்கள் மீட்டு தென்காசி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முருகன் இன்று காலை மொபட்டில் வீராணம் சாலையில் தனியார் நூல் மில் அருகே சென்று கொண்டிருந்தார்.
    • படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வலசையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வலசையூர் போயர் தெருவை சேர்ந்தவர் முருகன். (வயது 49). தொழிலாளி.

    இவர் இன்று காலை மொபட்டில் வீராணம் சாலையில் தனியார் நூல் மில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வலசையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கவுதம் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தார். அவர் எதிர்பாராத விதமாக முருகனின் மொபட் மீது மோதினார்.

    இதில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வலசையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது முருகன் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லேசான காயத்துடன் தப்பிய கவுதமனுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • நடராஜன் சாலையோரம் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார்.
    • வெள்ளி பொருட்களை காணவில்லை என புகார் அளிக்க வியாபாரி முத்துக்குமார் போலீஸ் நிலையத்தில் நின்றுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகைக்கடை பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்த வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நடராஜன் சாலையோரம் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் விலை கூடிய வெள்ளி பொருட்கள் இருந்துள்ளது. உடனடியாக சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.

    அதேநேரம் சங்கரன்கோவில் பகுதியில் 4 கிலோ பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்த மதுரையை சேர்ந்த வெள்ளி வியாபாரி முத்துக்குமார் வெள்ளி பொருட்களை காணவில்லை என புகார் அளிக்க போலீஸ் நிலையத்தில் நின்றுள்ளார். நடராஜன் கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்த பை முத்துக்குமாருடையது என்பதை கண்டறிந்த போலீசார் டி.எஸ்.பி. சுதீருக்கு தகவல் கொடுத்தனர்.

    விரைந்து வந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர் சாலையோரம் கிடந்த 4 கிலோ வெள்ளி பொருட்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த கூலித் தொழிலாளி நடராஜனை பாராட்டி சால்வை அணிவித்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    பின்னர் மதுரையை சேர்ந்த வெள்ளி வியாபாரி முத்துக்குமாரிடம் 4 கிலோ வெள்ளி பொருட்களை ஒப்படைத்தார். அப்போது செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் இருந்தனர்.

    • பெண்ணின் பெற்றோர் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.
    • பொன்னுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    தர்மபுரி மாவட்டம் கொல்லகொட்டகை என்ற ஊரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 28). இவருக்கு திருமணம் நடந்து ஒரு மகன் உள்ளார்.

    இவர்கள் தற்போது கவுண்டம்பாளையம் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் வசித்து வருகின்றனர். பொன்னுசாமி கட்டிடத் தொழில் செய்து வருகிறார். தற்போது இவரது மனைவி கர்ப்பமாக இருப்பதால் தனது மகனுடன் ஊருக்கு சென்றுள்ளார்.

    தனியாக வசித்து வரும் இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு இடிகரை பகுதிக்கு கட்டிட வேலைக்கு சென்றார். அங்கு வேலை செய்யும் போது பக்கத்து வீட்டில் இருந்த 17 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பொன்னுச்சாமி அந்த பெண்ணுடன் நெருங்கி பழகினார். திடீரென அந்த பெண்ணுடன் அவர் மாயமானார்.

    இதுபற்றி அந்த பெண்ணின் பெற்றோர் பெரியநாயக்கன் பாளையம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரில் தங்கள் மகளை காணவில்லை எனவும், பக்கத்து வீட்டில் கட்டிட வேலைக்கு வந்து சென்ற வாலிபர் அவரை கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான சிறுமியை பொன்னுசாமி திருமணம் செய்து கொண்டு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை போலீசார் மீட்டனர்.

    சிறுமியை ஆசை காட்டி ஏமாற்றி திருமணம் செய்து குடும்பம் நடத்திய பொன்னுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

    • கிருஷ்ணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
    • கிருஷ்ணமூர்த்தி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள காருவள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (32), இவரது மனைவி கலையரசி (28), இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மேலும் கலையரசி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் நேற்று பனமரத்துப்பட்டி அருகே உள்ள நத்தை மேடு ஏரி பகுதிக்கு வந்தார்.

    தொடர்ந்து மனைவியின் சகோதரருக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ்-அப்பில் இடம் மற்றும் தகவலை அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்அந்த இடத்தை தேடி கண்டு பிடித்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் அங்கு சென்றனர். அப்போது அங்கு கிருஷ்ணமூர்த்தி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    பின்னர் சம்பவம் குறித்து மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் ஜெகதீஷ் மொய்த் சாப்பிட வராததால் இவரது அக்கா மகன் இன்று அதிகாலை 2 மணி அளவில் இவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
    • இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    சேலம்:

    மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் மொய்த் (47).

    தொழிலாளி

    இவர் கொண்ட லாம்பட்டி அருகே சிவதாபுரம் மொரம்புக்காடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடும்பத்தினரை சொந்த ஊரில் விட்டு விட்டு சேலத்திற்கு வந்தவர் தொடர்ந்து மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இறந்து கிடந்தார்

    நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் ஜெகதீஷ் மொய்த் சாப்பிட வராததால் இவரது அக்கா மகன் இன்று அதிகாலை 2 மணி அளவில் இவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் அசைவின்றி கிடந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக கொண்டலாம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெகதீஷ் மொய்த் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாததால் ஜெகதீஷ் மொய்த் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×