search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளி"

    • கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு சம்மந்தமூர்த்தி தெருவில் சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான நகை மற்றும் நகை அடகு கடை உள்ளது.

    நேற்று இரவு வழக்கம் போல சிவசுப்பிரமணியன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் அவர் தனது செல்போனில் சி.சி.டி.வி. கேமிரா காட்சி பதிவுகளை பார்வையிட்டுள்ளார்.

    அதில் சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் எதுவும் காட்டப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த சிவசுப்பி ரமணியன், உடனடியாக கடைக்கு புறப்பட்டு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நேற்று இரவில் அவர் கடையை பூட்டி விட்டு சென்றபின் திட்டமிட்டு காத்திருந்த மர்ம நபர்கள் நகை கடையை உடைத்து கடையில் இருந்த வெள்ளி பாத்திரங்கள், கொலுசுகள், என மொத்தம் 1½ கிலோ வெள்ளி பொருட்களும், 8 பவுன் தங்கம், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.காமிராக்களையும் உடைத்து சென்றதும் தெரியவந்தது.

    இது குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 5-ம் திருவிழாவான நேற்று மாலை ஆன்மீக உரையும், இரவு திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் நாட்டிய குழுவினரின் பரதநாட்டியமும் நடந்தது.

    அதன் பிறகு பல வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகா ரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் தலைமையில் இலங்கை பக்தர்கள் கூடை, கூடையாக தாமரை, மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர்களை தூவி வழிபட்ட நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும் போது கோவில் ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடல் பாடியபடி அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிர கார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராத னையும் நடந்தது.

    6-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பிலும் காலை 10 மணிக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சார்பிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபர ணங்கள் மற்றும் சந்த னக்காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும், அதைத் தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் நடந்தது.

    மாலையில் சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிர காரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • நடராஜன் சாலையோரம் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார்.
    • வெள்ளி பொருட்களை காணவில்லை என புகார் அளிக்க வியாபாரி முத்துக்குமார் போலீஸ் நிலையத்தில் நின்றுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகைக்கடை பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்த வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நடராஜன் சாலையோரம் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் விலை கூடிய வெள்ளி பொருட்கள் இருந்துள்ளது. உடனடியாக சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.

    அதேநேரம் சங்கரன்கோவில் பகுதியில் 4 கிலோ பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்த மதுரையை சேர்ந்த வெள்ளி வியாபாரி முத்துக்குமார் வெள்ளி பொருட்களை காணவில்லை என புகார் அளிக்க போலீஸ் நிலையத்தில் நின்றுள்ளார். நடராஜன் கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்த பை முத்துக்குமாருடையது என்பதை கண்டறிந்த போலீசார் டி.எஸ்.பி. சுதீருக்கு தகவல் கொடுத்தனர்.

    விரைந்து வந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர் சாலையோரம் கிடந்த 4 கிலோ வெள்ளி பொருட்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த கூலித் தொழிலாளி நடராஜனை பாராட்டி சால்வை அணிவித்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    பின்னர் மதுரையை சேர்ந்த வெள்ளி வியாபாரி முத்துக்குமாரிடம் 4 கிலோ வெள்ளி பொருட்களை ஒப்படைத்தார். அப்போது செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் இருந்தனர்.

    • சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் இவர் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
    • வெள்ளி பொருட்கள் செய்து தருவதாக கூறி சிவதாபுரம் அம்மன் கோவில் மொரம்புகாட்டைச் சேர்ந்த ஒருவர் 6 கிலோ எடையுள்ள ரூ.4.5 லட்சம் மதிப்பிலான வெள்ளிக்கட்டிகளை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் (47). இவர் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தராஜனிடம் இருந்து வெள்ளி பொருட்கள் செய்து தருவதாக கூறி சிவதாபுரம் அம்மன் கோவில் மொரம்புகாட்டைச் சேர்ந்த ஒருவர் 6 கிலோ எடையுள்ள ரூ.4.5 லட்சம் மதிப்பிலான வெள்ளிக்கட்டிகளை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.அதன்பிறகு நீண்ட நாட்கள் ஆகியும் வெள்ளிப் பொருட்களை தயார் செய்து ஆனந்தராஜிடம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து ஆனந்த ராஜன் கொண்டலாம்பட்டி போலீஸ் புகார் கொடுத்தார்.அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10 நாட்களாக நடந்து வந்த திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களாக நடந்து வந்த திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    9-ம் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரி பார்வதிகாரர் குடும்பத்தினர் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மனை எழுந்தருள செய்து மேளதாளம் முழங்க சன்னதி தெரு வழியாக தெற்குரத வீதியில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் விசேஷ பூஜை களும், அலங்கார தீபாராத னையும் நடந்தது. இதில் மண்டகப்படி கட்டளைதாரர்கள் ஹரிகரன், சிவசுப்பிரமணியன் விஜய் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பின்னர் இரவு 7 மணிக்கு சமயசொற்பொழிவும் அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பக்தி பஜனை யும் நடந்தது. அதன்பிறகு பகவதி அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரதவீதி, சன்னதிதெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடு கிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.

    • 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது
    • வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசைக் கச்சேரி, பக்தி சொற்பொழிவு, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.7-ம் திருவிழாவான நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் மாலை6மணிக்கு சமய உரையும் அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு பரத நாட்டியமும் நடந்தது.

    அதன் பிறகு 10 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்துக்கு முன்னால் செண்டை மேளம், சிங்காரி மேளம், கேரள தையம் ஆட்டம், கேரளாவைச் சேர்ந்த கலைஞர்கள் கடவுள் வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்ச்சி, பெண்களின் நாதஸ்வர கச்சேரி, பூ கரக காவடி ஆட்டம் போன்றவை இடம் பெற்று இருந்தன.

    இதில் 100-க்கு மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்று கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிது நேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.

    பின்னர் அங்கு இருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர். இந்த7-ம்நாள் திருவிழா நிகழ்ச்சியில் கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, 7-ம் திருவிழா மண்டகப்படி கட்டளை தாரர்கள் அய்யப்பன், சந்திரன், கண்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    8-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்குபகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத் தொடர்ந்து 11.30 மணிக்குஅலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 5 மணிக்குமண்டகப்படி நிகழ்ச்சியும் 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு தேவார இன்னிசையும் நடக்கிறது அதன் பின்னர் 8-30 மணிக்கு சன்னதி தெருவில் அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் கிரகங்கள் வரிசை கட்டி நிற்கும் அதிசய நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
    • இன்று இரவு சந்திரன், வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு வானில் தோன்றுகிறது.

    சென்னை:

    நவகிரகங்களில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களை வானில் பார்க்க முடியும். சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலையில் விடிவெள்ளி தென்படும்.

    மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சந்திரன், வியாழன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களை கண்களால் பார்க்க முடியும்.

    சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் கிரகங்கள் வரிசை கட்டி நிற்கும் அதிசய நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு சந்திரன், வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு வானில் தோன்றுகிறது.

    இதனை தொலைநோக்கிகள் போன்ற உபகரணங்களை கொண்டு பார்க்க முடியும். கிண்டியில் உள்ள ஸ்பேஸ் ஆர்கேடில் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு தொலைநோக்கிகள் மூலம் வானில் தோன்றும் கிரகங்களின் இணைப்பு நிகழ்வை பார்க்க முடியும் என அதன் தலைமை செயல் அதிகாரி நீரஜ்லடியா கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், முன்பு விண்வெளி ஆய்வு ஒரு முக்கிய பொழுது போக்காக இருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொருவரும் நமது சூரிய குடும்பத்தை பற்றி மேலும் அறியவும், தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர் என்றார்.

    இன்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை 3 கிரகங்கள் நேர்கோட்டில் சந்திப்பதை தொலைநோக்கிகள் மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு. இந்த கொலுசு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • இந்த தொழிலை நம்பி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வெள்ளித் தொழிலாளர்கள் உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு. இந்த கொலுசு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வெள்ளித் தொழிலாளர்கள் உள்ளனர்.

    இதையடுத்து வெள்ளி தொழிலாளர்கள் கோரிக்கையின் அடிப்படை யில் அரியாகவுண்டம்பட்டி யில் வெள்ளி கொலுசு பன்மாடி உற்பத்தி மையக் கட்டிடம் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த வெள்ளி கொலுசு உற்பத்தி மைய கட்டிட பணி களை விரைந்து முடித்துத் பயன்பாட்டுக்கு வழங்கு மாறு சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச்சங்கத் தலைவர் ஆனந்தராஜன், செயலாளர் முனியப்பன், துணை செயலாளர் பாபு ஆகியோர் தமிழ்நாடு சிட்கோ சென்னை கிண்டி யில் உள்ள மேலாண்மை இயக்குனர் மதுமதியிடம் மனு வழங்கினர். அப்போது அவர் விரைந்து கட்ட நடவடிக்கை எடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்தார்.

    • பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது.

    பல்லடம் :

    பல்லடம் -செட்டிபாளை யம் ரோடு, சி.டி.சி டெப்போ அருகில் சங்கரநாராயணன் என்பவரது மனைவி உஷாராணி (வயது 60) என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவையில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அருகில் இருந்தவர்கள் அவரது வீடு திறந்து கிடப்பதாக அவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அவர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது. ஆனால் வீட்டில் பணம் மற்றும் நகைகள் இல்லாததால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதற்கிடையே அந்த வீட்டின் அருகில் முருகன் என்பவரது மகன் அழகுராஜா ( 38 ) என்பவர் குடியிருந்து வருகிறார். அவரும் நேற்று வெளியில் சென்று இருந்தார்.

    இந்த நிலையில் அவரது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அங்கு போலீசார் சென்று பார்த்தபோது அவரது வீட்டில் இருந்த சுமார் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மர்மநபர்கள் கைவரிசை
    • அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே குட்டைக்குழி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள கும்பளத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலையில் பூஜை நடப்பது வழக்கம்.

    நேற்று கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் பூசாரிகள் கோவில் நடையை அடைத்துவிட்டு சென்றனர்.

    இன்று காலை யில் பூஜை செய்வதற்காக ராமன் போற்றி கோவிலுக்கு சென்றார். உள்ளே சென்று பார்க்கும்போது கோவிலில் இருந்த பெரிய 15 கிலோ எடையிலுள்ள அணையா விளக்கு, மற்றும் 20 கிலோ எடையிலான பெரிய மணி மற்றும் 10 கிலோ மதிப்பிலான சிறிய மணிகள் உட்பட சுமார் 60 கிலோ எடையிலான வெண்கல பொருட்கள் மாயமாகி இருந்தது.

    இதன்மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதனை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

    இதையடுத்து அர்ச்சகர் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கொள்ளை நடந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது. அதன் பிறகு தினமும் அதிகளவு பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அருகே நரசிம்மர் ஆலயத்தில் உண்டியில் பணம் திருட்டு போனநிலையில் தற்போது திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்,

    • சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியில் வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கினர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 23). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கியதாக கூறப்படுகிறது.

     இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் , மதன் (26), ஷாஜகான் (22), முருகன் (23), ஏழுமலை (21), தமிழரசன் (20) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வழிப்பறி திருடர்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை-நாகர்கோவில் வழித்தடத்தில் காலை, மாலை வேளைகளில் அதிக பயணிகள் கூட்டம் அரசு பேருந்துகளில் நிரம்பி வழிகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் படிக் கட்டில் பயணம் செய்கின்றனர். அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள் எந்த பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. பேருந்து ஸ்டாப்புக்கு முன்னரோ, பின்னரோ இறக்கி விட்டு மட்டும் செல்கின்றனர்.

    இதனால் யாரும் ஏறவும் முடியாது.இதில் அரசு பேருந்து ஓட்டுனர்களை குறை கூறி எந்த பயனும் இல்லை, ஏனென்றால் பேருந்தில் நிற்க கூட இடமில்லாத நிலை உள்ளது. இலவச பேருந்து சேவை வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு செல்லும் இலவச பேருந்தை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதால், முக்கிய பணிகளுக்கு, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், இலவச பேருந்தில் ஏற முடியாத நிலை உள்ளது. மார்த்தாண்டத்திலிருந்தே பேருந்தில், நாகர்கோவில் வருபவர்களும் பல இன்னலுக்கு உள்ளாவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே காலை-மாலை வேளைகளில், குறிப்பாக திங்கள் முதல் வெள்ளி வரை கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென்று பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×