என் மலர்
உலகம்

AI ஆல் வரப்போகும் பொருளாதார சரிவு: எதில் முதலீடு செய்யலாம்? - Rich Dad Poor Dad புத்தக ஆசிரியர் ஆலோசனை
- செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நல்லதா கெட்டதா என்ற விவாதம் அதிகரித்துள்ளது.
- பலரும் ஏஐ தொழில்நுட்பத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை கூறி வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி, டீப்சீக், எக்ஸ் குரோக் ஆகியவையே நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன.
அண்மையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நல்லதா கெட்டதா என்ற விவாதம் அதிகரித்துள்ளது. பலரும் ஏஐ தொழில்நுட்பத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் உலக வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார சரிவு தொடங்கிவிட்டது என்று உலக புகழ்பெற்ற Rich Dad Poor Dad புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்துள்ளார்
இதுகுறித்து ராபர்ட் கியோசாகி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உலக வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார சரிவு தொடங்கிவிட்டது, இதற்கு செயற்கை நுண்ணறிவே முக்கிய காரணம். லட்சக்கணக்கான மக்கள் இந்த சரிவால் தங்கள் சேமிப்பு அனைத்தையும் இழக்க நேரிடும். செல்வத்தைப் பாதுகாக்க ஒரே வழி, தங்கம், வெள்ளி, பிட்காயின்களில் முதலீடுகள் செய்வதுதான். இதிலும் வெள்ளை சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீடு" என்று தெரிவித்துள்ளார்.






