search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் சாலையில் கிடந்த 4 கிலோ வெள்ளி பொருட்களை போலீசில் ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு
    X

    சங்கரன்கோவில் சாலையில் கிடந்த 4 கிலோ வெள்ளி பொருட்களை போலீசில் ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு

    • நடராஜன் சாலையோரம் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார்.
    • வெள்ளி பொருட்களை காணவில்லை என புகார் அளிக்க வியாபாரி முத்துக்குமார் போலீஸ் நிலையத்தில் நின்றுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகைக்கடை பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்த வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நடராஜன் சாலையோரம் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் விலை கூடிய வெள்ளி பொருட்கள் இருந்துள்ளது. உடனடியாக சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.

    அதேநேரம் சங்கரன்கோவில் பகுதியில் 4 கிலோ பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்த மதுரையை சேர்ந்த வெள்ளி வியாபாரி முத்துக்குமார் வெள்ளி பொருட்களை காணவில்லை என புகார் அளிக்க போலீஸ் நிலையத்தில் நின்றுள்ளார். நடராஜன் கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்த பை முத்துக்குமாருடையது என்பதை கண்டறிந்த போலீசார் டி.எஸ்.பி. சுதீருக்கு தகவல் கொடுத்தனர்.

    விரைந்து வந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர் சாலையோரம் கிடந்த 4 கிலோ வெள்ளி பொருட்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த கூலித் தொழிலாளி நடராஜனை பாராட்டி சால்வை அணிவித்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    பின்னர் மதுரையை சேர்ந்த வெள்ளி வியாபாரி முத்துக்குமாரிடம் 4 கிலோ வெள்ளி பொருட்களை ஒப்படைத்தார். அப்போது செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் இருந்தனர்.

    Next Story
    ×