கவுண்டம்பாளையம் அருகே முதல் திருமணத்தை மறைத்து சிறுமியை திருமணம் செய்த கட்டிடத் தொழிலாளி

பெண்ணின் பெற்றோர் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். பொன்னுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம் அருகே முதல் திருமணத்தை மறைத்து சிறுமியை திருமணம் செய்த கட்டிடத் தொழிலாளி
Published on

கவுண்டம்பாளையம்,

தர்மபுரி மாவட்டம் கொல்லகொட்டகை என்ற ஊரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 28). இவருக்கு திருமணம் நடந்து ஒரு மகன் உள்ளார்.

இவர்கள் தற்போது கவுண்டம்பாளையம் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் வசித்து வருகின்றனர். பொன்னுசாமி கட்டிடத் தொழில் செய்து வருகிறார். தற்போது இவரது மனைவி கர்ப்பமாக இருப்பதால் தனது மகனுடன் ஊருக்கு சென்றுள்ளார்.

தனியாக வசித்து வரும் இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு இடிகரை பகுதிக்கு கட்டிட வேலைக்கு சென்றார். அங்கு வேலை செய்யும் போது பக்கத்து வீட்டில் இருந்த 17 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பொன்னுச்சாமி அந்த பெண்ணுடன் நெருங்கி பழகினார். திடீரென அந்த பெண்ணுடன் அவர் மாயமானார்.

இதுபற்றி அந்த பெண்ணின் பெற்றோர் பெரியநாயக்கன் பாளையம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரில் தங்கள் மகளை காணவில்லை எனவும், பக்கத்து வீட்டில் கட்டிட வேலைக்கு வந்து சென்ற வாலிபர் அவரை கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான சிறுமியை பொன்னுசாமி திருமணம் செய்து கொண்டு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை போலீசார் மீட்டனர்.

சிறுமியை ஆசை காட்டி ஏமாற்றி திருமணம் செய்து குடும்பம் நடத்திய பொன்னுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com