search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாவூர்சத்திரம்"

    • பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
    • சிவக்குமார் என்ற பொன்பாண்டி, தங்கராசு ஆகியாரின் கடைகளில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையார்புரம் கிராமத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மேலப்பட்ட முடையார்புரம் நாடார் நடுத்தெருவை சேர்ந்த நயினார் என்பவர் மகன் சிவக்குமார் என்ற பொன்பாண்டி (வயது 51), தேவர் நடுத்தெருவை சேர்ந்த தங்கராசு(36) ஆகியாரின் கடைகளில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    • சங்கர் அரியப்பபுரம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்தார்.
    • பிரிண்டிங் பிரஸ்சுக்கு பயன்படுத்தி வந்த கெமிக்கலை குடித்து ராஜம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிவசுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ராஜம்(வயது 29). இவர்களுக்கு நவிஷ்காஸ்ரீ (5), அரிஹரபாலன் (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். சங்கர் அரியப்பபுரம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    இதனால் மன விரக்தியில் இருந்து வந்த ராஜம் நேற்று வீட்டில் இறந்து கிடந்தார். கணவர் இறந்த துக்கத்தில் பிரிண்டிங் பிரஸ்சுக்கு பயன்படுத்தி வந்த கெமிக்கலை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
    • திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜர்நகர் வென்னிமலை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதையொட்டி அன்று காலையில் கும்பஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாராதனையும் மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நேற்று இரவு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியை காண பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிர மணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி காலையில் கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாரா தனையும், மாலையில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை காண பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
    • குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதாகி குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்திற்கு ஏராளமான கிராம பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மட்டும் இன்றி பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய காய்கறி சந்தைக்கு உள்ளூர், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதியில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள், விவசாயிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    சுத்திகரிப்பு எந்திரம்

    இந்நிலையில் பஸ் நிலையத்தில் புதிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி என அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக பழுதாகி குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது. இலவச கழிப்பிட கட்டிடம் பழுது பார்க்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டு அதுவும் மூடப்பட்டு அருகில் இருக்கும் கட்டண கழிப்பிடம் செல்லும் நிலையில் அதுவும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருகிறது.

    மழைக்காலங்களில் பஸ் நிலையத்தினுள் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிப்பதோடு குப்பைகள் அகற்றப்படாமலும், மதுக்குடிப்போரின் கூடாரமாகவும் பஸ் நிலையம் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் எழுந்துள்ளது.

    பயணிகள் கோரிக்கை

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் புகார் செய்தும், அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தி அங்கு குடிநீர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • சூரசம்ஹாரம் விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கி 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை கணபதி ஹோமமும், கொடி யேற்றமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலையில் கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாராதனையும், மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அரிசி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • சிறப்பு விருந்தினராக கே.ஆர்.பி. இளங்கோ கலந்து கொண்டு கண்தான விழிப்புணர்வு குறித்து பேசினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் பொருளாளருமாகிய சினேகா பாரதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இதில் பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர் குழு நிறுவனரும், ஆலமர வட்டார தலைவருமாகிய கே.ஆர்.பி. இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட பொருட்களை வழங்கி கண்தான விழிப்புணர்வு குறித்து பேசினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர் ஜேக்கப் சுமன் வாழ்த்தி பேசினார். முடிவில் ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளர் சுனில்குமார் நன்றி கூறினார்.

    • தீபாவளி பண்டிகை கொண்டாடப் படும் விதம் குறித்து மாணவி ஜெய் ஸ்ரீ விளக்கி கூறினார்.
    • நிகழ்ச்சியில் மாணவ - மாணவிகள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானுர் பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளி யில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

    மாணவி வைஷ்ணவி வரவேற்றார். தீபாவளி பண்டிகை கொண்டாடப் படும் விதம் குறித்தும், பட்டாசு வெடிக்கும் விதிமுறை குறித்தும் மாணவி ஜெய் ஸ்ரீ விளக்கி கூறினார்.

    தீபாவளி உருவான வரலாறு குறித்து 10-ம் வகுப்பு மாணவி பொன் கீர்த்தனா மாணவர்களுக்கு எடுத்து கூறினார். மாணவி சுதர்ஷினி தீபாவளி குறித்து ஆங்கிலத்தில் உரை ஆற்றினார். மாணவி ஸ்ரீ பவித்தா நன்றி கூறினார். மாணவ - மாணவிகள் தாங்கள் கொண்டு வந்த இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

    ஆசிரியர்களுக்கு இனிப்பு மற்றும் போனஸ் பள்ளி நிர்வாகம் சார்பில் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை நித்தியா தினகரன் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கனரக லாரியை அதன் டிரைவர் ஜெயக்குமார் “ஒர்க் ஷாப்பிற்கு” கொண்டு சென்றார்.
    • லாரி டிரைலர் அங்கிருந்த மின் கம்பிகள் மீது மோதியதில் அவை அறுந்து விழுந்தன.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து கனிமவளம் ஏற்ற ஆலங்குளம் வந்த கனரக லாரி ஒன்றை பழுது நீக்குவதற்காக பாவூர்சத்திரத்தில் நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை அருகே உள்ள "ஒர்க் ஷாப்பிற்கு" அதன் டிரைவர் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 55) கொண்டு சென்றார். வேலை முடிந்து பிரதான சாலைக்கு லாரியை கொண்டு வரும்போது அதன் டிரைலர் மேல் தூக்கியவாறு இருந்ததை கவனிக்காமல் அந்த டிரைவர் வந்துள்ளார்.

    அப்போது அங்கிருந்த மின் கம்பிகள் மீது மோதியதில் அவை அறுந்து விழுந்தன. அதன் காரணமாக அங்கிருந்த 4 மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அதிஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இரவு நேரத்தில் கொட்டும் மழையிலும் மின் கம்பங்களை வெகு நேரம் போராடி சீரமைத்த மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • லீனா குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லீனா தற்கொலை செய்து கொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாப்பேரி குமாரசாமி நாடார் தெருவை சேர்ந்த சுப்பையா மனைவி லீனா (வயது 50). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். லீனா குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் லீனா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பூவனூர் கிராமத்தின் பிரதான சாலையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
    • பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் தண்ணீருக்குள் தவறி விழுந்து விடுகின்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி ஊராட்சி பூவனூர் கிராமத்தின் பிரதான சாலையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

    தற்போது குண்டும் குழியுமாக மிகவும் பழுதானதால் கனமழையின் காரணமாக பள்ளங்கள் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. எனவே பூவனூர் கிராமத்திற்கு யார் வந்தாலும், கிராமத்தில் இருந்து வெளியே யார் சென்றாலும் குளம் போல் தேங்கிய மழை நீரின் வழியே செல்ல வேண்டி உள்ளது என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் சைக்கிளில் இருந்து தண்ணீருக்குள் தவறி விழுந்து விடுகின்றனர்.

    இந்நிலையில் தேங்கிய தண்ணீரில் பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்களின் உடை மற்றும் பாட புத்தகங்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட திப்பணம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் புதிய சாலை அமைக்கப்படுமா என கேட்டதற்கு ஏற்கனவே 2 முறை தீர்மானம் வைத்து அனுப்பி உள்ளோம்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • ராம கிருஷ்ணன் தனது காரில் கே.டி.சி. நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
    • எதிர்பாராத விதமாக 2 கார்களும் திடீரென நேருக்கு நேர் மோதியது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை கிராமத்தை சேர்ந்த ராம கிருஷ்ணன் என்பவர் தனது காரில் பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் வந்து கொண்டி ருந்தார்.

    அப்போது நெல்லையை சேர்ந்த ஒருவர் தென்காசி யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஒருவரை இறக்கி விட்டு விட்டு மீண்டும் நெல்லை நோக்கி திரும்பி வந்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 2 கார்களும் திடீரென நேருக்கு நேர் மோதியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காருக்குள் இருந்தவர்களை மீட்க சென்றனர் .

    அப்போது 2 கார்களிலும் டிரைவர்கள் மட்டும் இருந்தனர். மேலும், கார்க ளில் உள்ள ஏர்பேக் விரிவடைந்து செயல்பட்டதால் எவ்வித காயங்களும் இன்றி 2 டிரைவர்களும் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர்.

    இருப்பினும் 2 கார்களி லும் முன் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பாவூர்சத்திரம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கார்கள் நேருக்கு நேர் மோதிய சி.சி.டி.வி. காட்சியும் வெளியாகி உள்ளது.

    ×