சேலத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த வடமாநில தொழிலாளி பரிதாப சாவு

நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் ஜெகதீஷ் மொய்த் சாப்பிட வராததால் இவரது அக்கா மகன் இன்று அதிகாலை 2 மணி அளவில் இவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
சேலத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த வடமாநில தொழிலாளி பரிதாப சாவு
Published on

சேலம்:

மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் மொய்த் (47).

தொழிலாளி

இவர் கொண்ட லாம்பட்டி அருகே சிவதாபுரம் மொரம்புக்காடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடும்பத்தினரை சொந்த ஊரில் விட்டு விட்டு சேலத்திற்கு வந்தவர் தொடர்ந்து மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இறந்து கிடந்தார்

நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் ஜெகதீஷ் மொய்த் சாப்பிட வராததால் இவரது அக்கா மகன் இன்று அதிகாலை 2 மணி அளவில் இவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் அசைவின்றி கிடந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக கொண்டலாம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெகதீஷ் மொய்த் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாததால் ஜெகதீஷ் மொய்த் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com