என் மலர்
உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டத்தில் தொழிலாளிக்கு கத்தி குத்து
- சரமாரியாக தாக்கியதில் அபிஷேக்கின் பற்கள் முழுவதும் உடைந்துள்ளது.
- மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை :
மார்த்தாண்டம் அருகே நல்லூர் தேனாம்பாற தலவிளையை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 21), மீன்பிடி தொழிலாளி, இவருக்கும் குளக்கச்சி பகுதியை சேர்ந்த சஜி (19), சஜித் (21), சஜின் (19), கொல்லஞ்சி பகுதியை சேர்ந்த ஜெகன் (19) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று அபிஷேக் கொல்லஞ்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சஜி உள்ளிட்ட 4 பேரும் தடுத்து நிறுத்தி கத்தியாலும், இரும்பு கம்பியாலும், கையாலும் சரமாரியாக தாக்கியதில் அபிஷேக்கின் பற்கள் முழுவதும் உடைந்துள்ளது. மேலும் தாடைகளும் காயமடைந்துள்ளது.
கத்தியால் குத்தியதில் கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் முதுகை கடித்தும் காயப்படுத்தி உள்ளனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அபிஷேக், கத்தி அலறி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு கூடி உள்ளனர்.
இதை பார்த்த 4 பேரும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். காயமடைந்தவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






