search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை"

    • தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    • வேலூர் கண்டோன் மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறது.

    தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மார்கழி பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை சென்னையில் இருந்து வேலூர் கண்டோன் மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறது.

    பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடைகின்றது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப் பட்டு செல்கிறது.

    அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் விழுப்புரத்தில் இருந்து நாளை காலை 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடையும்.

    பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடைகின்றது.

    அதேபோல் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நாளை இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணா மலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடையும்.

    பின்னர் அந்த ரெயில் திரு வண்ணாமலையில் இருந்து 27-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 6.07 மணி முதல் புதன்கிழமை காலை 6.19 மணிக்கு நிறைவடைகிறது.
    • கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பவுர்ணமி தோறும் அங்குள்ள அண்ணாமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி மார்கழி மாத பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6.07 மணிக்கு தொடங்கி புதன் கிழமை காலை 6.19 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம். மேலும் கோவிலில் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • இரண்டாம் கால பூஜையின் போது ஸ்ரீ பராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும்.
    • அன்னையை ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டுவார்கள்.

    சோமாவார பூஜை திங்கட்கிழமை நடத்தப்படுவது போல சுக்ரவார பூஜை வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்படுகிறது.

    அன்றையதினம் மாலை இரண்டாம் கால பூஜையின் போது ஸ்ரீ பராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும்.

    பிறகு அம்மனுக்கு அலங்காரம் செய்து எழுந்தருள செய்வார்கள்.

    அதைத்தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடி மரம் அருகே ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படும்.

    அன்னையை ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டுவார்கள்.

    ஸ்ரீ பராசக்தி அம்மனின் ஆனந்த ஊஞ்சல் உற்சவத்துக்கு ஏற்ப நாதஸ்வர கலைஞர்கள் இசை அமைப்பார்கள்.

    கண்களுக்கும், காதுகளுக்கும் இந்த ஊஞ்சல் உற்சவம் விருந்து படைப்பதாக இருக்கும்.

    ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு இந்த ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது.

    திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் திட்டமிட்டு தங்கள் பயணத்தை அமைத்துக் கொண்டால் இந்த ஊஞ்சல் உற்சவத்தை பார்த்துவிட்டு வரலாம்.

    சஷ்டி, சதுர்த்தி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    இந்த பஞ்ச பருவ பூஜைகளின் போது உற்சவ மூர்த்திகள் எந்தெந்த வாகனங்களில் எடுத்து செல்லப்படும் என்பதை முன்னோர்கள் முறைப்படி அமைத்துள்ளனர்.

    இந்த உற்சவங்களின் போது சுவாமிக்கு எத்தகைய அலங்காரம் செய்யப்பட வேண்டும் என்பதும் திருவண்ணாமலை தலத்தில் தனித்துவமாக உள்ளது.

    அந்தமாதிரி அலங்கார ஆராதனைகளை வேறு எந்த தலத்திலும் பார்க்க இயலாது.

    சில பூஜை முறைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரசர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

    அந்த பூஜைகள் அனைத்தும் இப்போதும் மரபு மாறாமல் நடந்து வருகிறது.

    அவற்றை பார்த்தாலே பரவசம் மட்டுமல்ல, பலன்களும் தேடிவரும்.

    எனவே அடுத்த முறை திருவண்ணாமலை தலத்துக்கு செல்லும் முன்பு பஞ்ச பருவ பூஜைகள் ஏதேனும் உள்ளதா?

    என்பதை அறிந்து சென்றால் அதிக பலனை பெற முடியும்.

    • திருவண்ணாமலை ஆலய பஞ்ச பருவ பூஜைகளில் சோமவார பூஜை வித்தியாசமானது.
    • ஆசையை கைவிட்டால் தான் முக்தி பாதைக்கு செல்ல முடியும்.

    திருவண்ணாமலை ஆலய பஞ்ச பருவ பூஜைகளில் சோமவார பூஜை வித்தியாசமானது.

    இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    பொதுவாக அனைவருக்குமே ஏதாவது ஆசைகள் இருந்து கொண்டே இருக்கும்.

    ஆசையை கைவிட்டால் தான் முக்தி பாதைக்கு செல்ல முடியும்.

    அதற்கு விரதங்கள் உதவியாக உள்ளன. விரதங்களில் சோமவாரம் விரதம் அதிக பலன்களை தரக்கூடியது.

    திருமணம், குழந்தை பாக்கியம், நோய் தீர, எதிரிகளை வெல்ல, நினைத்தது நடக்க சோமவார விரதமும், பூஜையும் கைகொடுக்கும்.

    திருவண்ணாமலையில் சோமவார பூஜையை கடந்த சுமார் 43 ஆண்டுகளாக ஒரு அமைப்பு நடத்தி வருகிறது.

    இந்த அமைப்பினர் திங்கட்கிழமை தோறும் திருவண்ணாமலையில் சோமவார பூஜையை பொறுப்பேற்று நடத்துகிறார்கள்.

    அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது உற்சவ மூர்த்தியான சந்திரசேகரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கிறார்கள்.

    இந்த அபிஷேக ஆராதனை மிகவும் சிறப்பாக நடத்தப்படும்.

    அதை கண்டு வழிபடுவதே தனி ஆனந்தத்தை தரும்.

    அதன்பிறகு உற்சவ மூர்த்தியை அலங்காரம் செய்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள செய்வார்கள்.

    அங்கு அவருக்கு தீபாராதனைகள் நடத்தப்படும்.

    • நந்தி வாகனத்தில் பிரதோஷ நாயகர் வரும் காட்சி அருள்மழை பொழிவது போன்று இருக்கும்.
    • ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதோஷம் வருகிறது.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதோஷம் வருகிறது.

    சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரதோஷ பூஜையில் பக்தர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள்.

    திருவண்ணாமலை தலத்திலும் அதேநிலை தான் இருந்தது.

    பிரதோஷ பூஜை தினத்தன்று அந்த காலத்தில் 50 பேர் வந்தாலே அதிகம்.

    ஆனால் இப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளுகிறார்கள் என்று திருவண்ணாமலையில் வாழும் பழம்பெரும் சிவாச்சாரியாரான தியாகராஜ சிவாச்சாரியார் நினைவு கூர்ந்தார்.

    சமீப காலமாக திருவண்ணாமலையில் பிரதோஷ தினத்தன்று வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

    பெரும்பாலான பக்தர்கள் அன்றைய தினம் விரதம் இருந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வதை பழக்கத்தில் வைத்துள்ளனர்.

    அன்றையதினம் மாலை நந்திக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பிறகு பிரதோஷ நாயகர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்படுவார்.

    நந்தி வாகனத்தில் பிரதோஷ நாயகர் வரும் காட்சி அருள்மழை பொழிவது போன்று இருக்கும்.

    மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் பிரதோஷ நாயகர் எழுந்தருளுவார்.

    அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அப்போது பக்தர்கள் அரோகரா என்று முழக்கிமிடுவார்கள்.

    அந்த சமயத்தில் சிவபுராணம் மற்றும் நந்தி புராணம் படித்தால் அளவற்ற பலன்கள் தேடி வரும் என்பது ஐதீகம் ஆகும்.

    • கிருத்திகை நட்சத்திரத்தன்று திருவண்ணாமலையில் உள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும்.
    • இந்த பூஜையில் பங்கேற்றால் வாழ்வில் ஆனந்தம் உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும்.

    ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று திருவண்ணாமலையில் உள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும்.

    அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும்.

    பிறகு முருகப்பெருமான் அலங்காரத்துடன் நான்காம் பிரகாரத்தின் வடமேற்கு திசையில் உள்ள கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளுவார்.

    அங்கு அவருக்கு சிறப்பு தீபாராதனை காட்டுவார்கள்.

    இந்த பூஜையில் பங்கேற்றால் வாழ்வில் ஆனந்தம் உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும்.

    • அங்கு அவருக்கு தூப தீப ஆராதனைகள் மிகவும் விமர்சையாக நடைபெறும்.
    • அந்த ஆராதனை முடிந்த பிறகு அவர் ஆலயத்துக்குள் செல்வார்.

    பவுர்ணமி போன்றே அமாவாசை தினத்தன்றும் இரண்டாம் கால பூஜையின்போது உற்சவர் சந்திரசேகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.

    நான்காவது பிரகாரத்தில் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள அமாவாசை மண்டபத்தில் சந்திரசேகரை எழுந்தருள செய்வார்கள்.

    அங்கு அவருக்கு தூப தீப ஆராதனைகள் மிகவும் விமர்சையாக நடைபெறும்.

    அந்த ஆராதனை முடிந்த பிறகு அவர் ஆலயத்துக்குள் செல்வார்.

    அமாவாசை தோறும் நடைபெறும் இந்த சிறப்பு பூஜையை காண ஏராளமானோர் அமாவாசை மண்டபத்தில் திரள்வது உண்டு.

    இந்த பூஜையை நேரில் கண்டால் பித்ருக்களை வழிபட்டதற்கு சமமாக கருதப்படுகிறது.

    எனவே மறைந்த முன்னோர்களின் ஆசியை பெற விரும்புபவர்கள் இந்த அமாவாசை பஞ்ச பருவ பூஜையை தவற விடுவதில்லை.

    இறையருள் மட்டுமின்றி பித்ருக்களின் ஆசியையும் பெற்று தரும் அமாவாசை பருவ பூஜையை மற்ற தலங்களில் காண இயலாது.

    • பஞ்ச பருவ பூஜைகளில் பவுர்ணமி தினத்தில் நடக்கும் பூஜை மிகவும் விசேஷமானது.
    • அங்கு அவருக்கு தீபாராதனை உள்ளிட்ட உபசாரங்கள் நடத்தப்படும்.

    பஞ்ச பருவ பூஜைகளில் பவுர்ணமி தினத்தில் நடக்கும் பூஜை மிகவும் விசேஷமானது.

    அன்றைய தினம் கிரிவலத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் திரள்வது உண்டு.

    ஆனால் பெரும்பாலானவர்கள் ஆலயத்தில் நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்பதில்லை.

    அன்றைய தினம் மாலை உற்சவ மூர்த்தியான சந்திரசேகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.

    பிறகு அவர் அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு ஆகி மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள்வார்.

    அங்கு அவருக்கு தீபாராதனை உள்ளிட்ட உபசாரங்கள் நடத்தப்படும்.

    இதை நேரில் கண்டுகளிப்பது மிகுந்த பலன் தருவதாக கருதப்படுகிறது.

    • தமிழ் மாத பிறப்பு அன்று திருவண்ணாமலையில் பஞ்ச மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள்.
    • அந்த மாத பிறப்பு மண்டபம் மிக மிக பழமையானது.

    ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு அன்றும் திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெறுவது பழங்காலத்தில் மிகவும் புகழ் பெற்று இருந்தது.

    தற்போது அது குறைந்து பவுர்ணமிக்கு கிரிவலம் செல்வது அதிகரித்து உள்ளது.

    தமிழ் மாத பிறப்பு அன்று திருவண்ணாமலையில் பஞ்ச மூர்த்திகளுக்கும் அபிஷேக சிறப்பு ஆராதனைகள் நடத்துவார்கள்.

    அன்று மாலை இரண்டாம் கால பூஜையின்போது பஞ்ச மூர்த்திகளையும் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள மாத பிறப்பு மண்டபத்துக்கு எழுந்தருள செய்வார்கள்.

    அந்த மாத பிறப்பு மண்டபம் மிக மிக பழமையானது.

    அந்த மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளையும் அலங்காரத்துடன் பார்ப்பது கண்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும்.

    • திருவண்ணாமலை ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது.
    • தினசரி நடக்கும் பூஜைக்கு நித்திய கிரியை என்று பெயர்.

    தமிழகத்தில் உள்ள பழமையான ஆலயங்களில் இன்றும் கால பூஜைகள் தினமும் தவறாமல் நடத்தப்பட்டு வருகின்றன.

    சில ஆலயங்களில் 5 கால பூஜைகள் நடப்பதுண்டு.

    சில ஆலயங்களில் 6 கால பூஜைகள் நடைபெறும்.

    திருவண்ணாமலை ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது.

    தினசரி நடக்கும் பூஜைக்கு நித்திய கிரியை என்று பெயர்.

    அப்படி அல்லாமல் விசேஷமாக நடத்தப்படும் பூஜைகளுக்கு நைமித்திக பூஜைகள் என்று பெயர்.

    இதில் நித்திய பூஜைகளை எந்தெந்த காலங்களில் நடத்த வேண்டும் என்று ஆகமங்களில் நம் முன்னோர்கள் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    6 கால பூஜை என்பது உஷத் காலம், கால சந்தி, உச்சி காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்தஜாமம் ஆகியவற்றை குறிக்கும்.

    சூரிய உதயத்தை கணக்கிட்டு நாழிகை அடிப்படையில் இந்த பூஜைகளை செய்வார்கள்.

    ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் ஆகும்.

    உஷத் காலம் என்பது சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்பு தொடங்கி சூரிய உதயம் வரை உள்ள காலம் ஆகும்.

    கால சந்தி என்பது சூரிய உதயம் முதல் 10 நாழிகை உள்ள காலமாகும்.

    உச்சிகாலம் என்பது மதியம் 11.30 மணி முதல் 12.30 மணி வரை உள்ள காலம் ஆகும்.

    சாய ரட்சை என்பது சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிக்கைக்கு முன்பு தொடங்கி சூரியன் மறையும் வரை உள்ள நேரத்தை குறிக்கும்.

    இரண்டாம் காலம் என்பது சூரியன் மறைவிலிருந்து மூன்றே முக்கால் நாழிகை வரை உள்ள காலம் ஆகும்.

    அர்த்த ஜாமம் என்பது கோவில் நடைஅடைக்கும் சமயத்தில் நடத்தப்படும் பூஜை ஆகும்.

    பொதுவாக அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடையை திறந்து இரவு 9 மணிக்கு அடைத்து விட வேண்டும் என்பது ஆகம விதியாகும்.

    திருவண்ணாமலை ஆலயம் மற்ற ஆலயங்களை விட பெரிய ஆலயம் என்பதாலும் நிறைய சன்னதிகளை கொண்டு இருப்பதாலும் மற்ற சிவாலயங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பூஜை வகைகளை கொண்டுள்ளது.

    குறிப்பாக திருவண்ணாமலை ஆலயத்தில் பஞ்ச பருவ பூஜைகள் சிறப்பு பெற்றுள்ளன.

    மாத பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம், சோமவாரம், சுக்கிரவாரம், கிருத்திகை, சதுர்த்தி, சஷ்டி ஆகியவை பஞ்ச பருவ பூஜைகளாக நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த பூஜைகள் வரும் நாட்கள் மற்றும் நேரத்தை தெரிந்து கொண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு சென்றால் மிகவும் புண்ணியம் பெறும் வகையில் வழிபாடுகள் செய்து விட்டு வரலாம்.

    • ரைஸ் மில்லில் உள்ள வளாகத்தில் மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    • பூனை பால் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிகிறது.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-போளூர் நெடுஞ்சாலையில் தனியார் ரைஸ் மில் ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த ரைஸ் மில்லில் உள்ள வளாகத்தில் மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யாராவது உள்ளே நுழையாமல் இருப்பதற்காக பூனை மற்றும் நாயை வளர்த்து வருகின்றனர்.

    இங்குள்ள பூனை, நாயுடன் ஒன்றாக சேர்ந்து கொஞ்சி விளையாடி வருகிறது.

    அந்த நாயும் பாசத்துடன் பூனைக்கு பால் கொடுக்கிறது.

    இதனால் பூனை பால் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிகிறது. சில நாய்கள் தன்னுடைய குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுக்கிறது. ஆனால் இங்குள்ள நாய் பூனைக்கு பால் கொடுப்பதை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    • மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
    • அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 26-ந் தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

    அன்றுமுதல் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. மலையில் காட்சி அளித்த மகா தீபத்தை காண பக்தர்கள் பலர் மலை உச்சிக்கு சென்று தரிசித்து வந்தனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வந்ததையொட்டி வழக்கமாக தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயச்சித்த பூஜை நடத்தப்படும். அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயச்சித்த பூஜை நேற்று நடந்தது.

    இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயச்சித்த பூஜை நடந்தது.

    பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×