search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சுக்ரவார பூஜை
    X

    சுக்ரவார பூஜை

    • இரண்டாம் கால பூஜையின் போது ஸ்ரீ பராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும்.
    • அன்னையை ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டுவார்கள்.

    சோமாவார பூஜை திங்கட்கிழமை நடத்தப்படுவது போல சுக்ரவார பூஜை வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்படுகிறது.

    அன்றையதினம் மாலை இரண்டாம் கால பூஜையின் போது ஸ்ரீ பராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும்.

    பிறகு அம்மனுக்கு அலங்காரம் செய்து எழுந்தருள செய்வார்கள்.

    அதைத்தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடி மரம் அருகே ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படும்.

    அன்னையை ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டுவார்கள்.

    ஸ்ரீ பராசக்தி அம்மனின் ஆனந்த ஊஞ்சல் உற்சவத்துக்கு ஏற்ப நாதஸ்வர கலைஞர்கள் இசை அமைப்பார்கள்.

    கண்களுக்கும், காதுகளுக்கும் இந்த ஊஞ்சல் உற்சவம் விருந்து படைப்பதாக இருக்கும்.

    ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு இந்த ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது.

    திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் திட்டமிட்டு தங்கள் பயணத்தை அமைத்துக் கொண்டால் இந்த ஊஞ்சல் உற்சவத்தை பார்த்துவிட்டு வரலாம்.

    சஷ்டி, சதுர்த்தி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    இந்த பஞ்ச பருவ பூஜைகளின் போது உற்சவ மூர்த்திகள் எந்தெந்த வாகனங்களில் எடுத்து செல்லப்படும் என்பதை முன்னோர்கள் முறைப்படி அமைத்துள்ளனர்.

    இந்த உற்சவங்களின் போது சுவாமிக்கு எத்தகைய அலங்காரம் செய்யப்பட வேண்டும் என்பதும் திருவண்ணாமலை தலத்தில் தனித்துவமாக உள்ளது.

    அந்தமாதிரி அலங்கார ஆராதனைகளை வேறு எந்த தலத்திலும் பார்க்க இயலாது.

    சில பூஜை முறைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரசர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

    அந்த பூஜைகள் அனைத்தும் இப்போதும் மரபு மாறாமல் நடந்து வருகிறது.

    அவற்றை பார்த்தாலே பரவசம் மட்டுமல்ல, பலன்களும் தேடிவரும்.

    எனவே அடுத்த முறை திருவண்ணாமலை தலத்துக்கு செல்லும் முன்பு பஞ்ச பருவ பூஜைகள் ஏதேனும் உள்ளதா?

    என்பதை அறிந்து சென்றால் அதிக பலனை பெற முடியும்.

    Next Story
    ×