search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி"

    • மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்.
    • நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

    சென்னை:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று காலையில் டெல்லியில் உள்ள வீட்டில் சந்தித்து பேசினார். அவருடன் துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

    காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய மந்திரியிடம் வழங்கினார். அந்த கடிதத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் எழுதி இருப்பதாவது:-

    காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி முக்கியமாக உள்ள நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 2018 பிப்ரவரி 16-ம் நாளிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அட்டவணையின்படி, நீர் சேமிப்பு மற்றும் பிலிகுண்டுலுவில் அடையப்பட வேண்டிய நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டது.

    இருப்பினும், ஜூன் 1 முதல் ஜூலை 17 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர் இருப்பு 3.78 டி.எம்.சி மட்டுமே இந்தக் காலகட்டத்தில் பெறவேண்டிய தண்ணீர் அளவு 26.32 டி.எம்.சி. என உள்ள நிலையில், 22.54 டி.எம்.சி., நீர் பற்றாக்குறையாக உள்ளது. பிலிகுண்டுலுவில் இந்த 3.78 டி.எம்.சி நீர்வரத்துகூட கே.ஆர்.எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களுக்கு கீழே, கட்டுப்பாடற்ற இடைநிலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பிலிகுண்டுலு வரை பாய்கிறது.

    தென்மேற்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்.

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடி, மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளதாகவும், குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அது 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    எனவே, நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தண்ணீர் தேவைக்கும், நீர்வரத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதால், கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்திட இயலும்.

    தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் கடந்த 5.7.2023 அன்று ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து, இந்த முக்கியமான பிரச்சனையில் தலையிட்டு, தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டிருந்தார்.

    3.7.2023 தேதியிட்ட கடிதத்தின்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்துச் சென்றதாகவும் கூறினோம். காவிரி நீர் மேலாண்மை ஆணையம், 4.7.2023 தேதியிட்ட தனது கடிதத்தில், உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் நீரோட்டத்தினை உறுதி செய்யுமாறு கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும், கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    இந்தக் கடினமான சூழ்நிலையில், கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே, தமிழ்நாட்டில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், இந்தப் பிரச்சினையில் ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள மாதாந்திர அட்டவணையைப் பின்பற்றவும், பற்றாக்குறையை ஈடு செய்யவும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிடவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் எழுதியுள்ளார்.

    ஜல் சக்தி துறை அமைச்சர் , கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கும் மற்றும் நீர் பற்றாக்குறை காலங்களில் சரியான நீர் பங்கீடு செய்வதற்கு தேவையான முறையை செயல்படுத்து வதற்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

    • தற்காலிகமாக அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறாது என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    • பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் பூலாம்பட்டி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    எடப்பாடி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள மக்கள் பிரச்சனை குறித்து விவரம் வழங்குமாறு கோரியிருந்தார்.

    இதனைத் தொடர்ந்து எடப்பாடி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விவரங்களை முதலமைச்சருக்கு அளித்திருந்தார்.

    அவற்றில் ஒன்றாக, எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கி செல்லும் வகையிலான ஓய்வு விடுதி அமைத்து தர கோரி இருந்தார்.

    இதனை பரிசீலித்த தமிழக அரசு பூலாம்பட்டி பகுதியில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் ஓய்வு விடுதி, உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது.

    முதற்கட்டமாக, இன்று சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணியினை தொடங்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வு விடுதி மற்றும் இதர கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறி, அப்பகுதியில் புதிய கட்டுமானப் பணி தொடங்க எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி-மேட்டூர் பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து அப்பகுதிக்கு வந்த உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது, தற்காலிகமாக அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறாது என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் பூலாம்பட்டி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • காவிரியில் செல்லும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் என்று கேட்கிறோம்.
    • இந்தியாவிலேயே அதிக அளவில் மது விற்பனை நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு தான்.

    தருமபுரி:

    தருமபுரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை இன்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

    தருமபுரி மாவட்டத்தில் அதியமான் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகின்றது. இதில் 936 அணிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 14 ஆயிரம் இளைஞர்கள் விளையாடுகிறார்கள்.

    இந்த போட்டி 2 வாரம் தொடர்ந்து நடைபெறும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் முதல்பரிசாக உள்பட மொத்தம் ரூ.10 லட்சம் வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் அதிகளவில் நடைபெற வேண்டும். அப்போதுதான் விடுமுறை காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை வேறுவிதமாக திசை திரும்பாமல் விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள். அதற்காக தமிழ்நாடு முழுவதும் கோடைகாலத்தில் அதிகளவில் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் அரசு நடத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள் மது, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். அதேபோல இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமும் நிறைய விபரீத விளையாட்டுகளாலும் இளைஞர்கள் திசை மாறி செல்கின்றனர். அதனை மாற்ற இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கையாக அரசுக்கு வைத்தோம். அவ்வப்போது இதுகுறித்து அறிவிப்புகளும் வந்தன. ஆனால் இதுவரை இந்த திட்டம் நிறைவேற்றவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. காவிரியில் செல்லும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் என்று கேட்கிறோம். அது என்ன மிகபெரிய தவறா, காவிரி ஆறு கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு முதன்முதலாக தருமபுரி மாவட்டம் வழியாக தான் வருகிறது.பிறகு தான் சேலம் மாவட்டத்திற்கு செல்கிறது. ஆனால், ஆண்டுக்கு 220 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. இந்த தண்ணீரில் 3 டி.எம்.சி. அளவில் நீர் இருந்தாலே போதுமானது தருமபுரி மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நிரப்பி விடலாம். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சினை, விவசாயம், வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தீர்தது விடலாம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பா.ம.க. சார்பிலும், எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் பலமுறை சட்டசபையிலும் பலமுறை அழுத்த கொடுத்துள்ளோம். இரு கட்சிகளின் முதலமைச்சரையும் மாறிமாறி நாங்கள் சந்தித்து அழுத்தம் கொடுத்தும், காவிரி உபரிநீர் நிரப்பும் திட்டம் குறித்து இதுவரை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதேபோல 38 மாவட்டங்களில் 15 வடமாவட்டங்கள் 10 மற்றும் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து கடந்த 40 ஆண்டுகாலமாக மிகவும் பின்தங்கியுள்ளது. அதனை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்தியாவிலேயே அதிக அளவில் மது விற்பனை நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் டாஸ்மாக் இருந்தால் கள்ளசாராயம் இருக்காது என்று அரசு கூறிவந்தது. மரக்காணம் பகுதியில் சாராயம் குடித்து 23 பேர் இறந்த விவகாரத்தில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது. எனவே, மதுவால் இங்கு அதிகளவில் கற்பழிப்பு, கொள்ளை, கொலை போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன.

    டாஸ்மாக் கடையில் ரூ.10 பாட்டிலுக்கு அதிகமாக வாங்குகிறார்கள் என்று புகார் அதிகளவில் எழுந்துள்ளன. ஆனால், மது தயாரிக்கும் ஆலையில் இருந்து நேரடியாக மது விற்பனை நடைபெறுவதால் அதிகளவில் கணக்கில் காட்டாத வகையில் சம்பாதித்து வருகின்றனர். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மேலும், மது தயாரிக்கும் கம்பெனிகளின் மின் அளவுகள் மூலம் அதில் 100 யூனிட்டுக்கு எத்தனை மதுபாட்டில்கள் தயாரிக்க முடியும் என்று கணக்கீட்டு அதன்படி விசாரணை நடத்த வேண்டும். டாஸ்மாக் மூடப்படும் என்று இரு கட்சிகளும் மாறிமாறி கூறிவந்தாலும், இதுவரை முமுமையாக மதுவிலக்கு அமல்படுத்தாமல் திராவிட கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

    கடந்த தலைமுறை மதுவால் சீரழித்துவிட்டது. அடுத்த தலைமுறையாவது மதுவால் சீரழியாமல் பாதுகாக்க பூரண மதுவிலக்கு கொண்டுரப்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் சந்து கடைகளில் மதுவிற்பனை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    10.5 சதவீதம் இடஒதுக்கீடு வன்னியர் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதற்கான உரிய நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார்.

    • காலம் காலமாக இந்த சட்டத்திற்கு எதிரான செயலை கர்நாடகம் செய்து கொண்டிருக்கிறது.
    • காவிரியில் கழிவுகளை கலந்ததற்காக ரூ.2,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 2017-ம் ஆண்டே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றில் கர்நாடகம் மிகப்பெரிய அளவில் கழிவுகளை கலக்கச் செய்வதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும்.

    காவிரியிலும், தென்பெண்ணையாற்றிலும் கர்நாடகம் கழிவுநீரை கலப்பது ஒன்றும் புதிதல்ல. காலம் காலமாக இந்த சட்டத்திற்கு எதிரான செயலை கர்நாடகம் செய்து கொண்டிருக்கிறது.

    கர்நாடகத்தின் இந்த அத்துமீறலை தமிழகம் வேடிக்கை பார்க்கக் கூடாது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு பெற வேண்டும். காவிரியில் கழிவுகளை கலந்ததற்காக ரூ.2,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 2017-ம் ஆண்டே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

    கிடப்பில் உள்ள அந்த வழக்கை விரைவுபடுத்தவும், 2017-ம் ஆண்டுக்கு பிறகு கலந்த கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டையும் சேர்த்து பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • கருப்பு நிறமாக தண்ணீர் செல்வதாக புகார் எழுந்தது.
    • 2 இடங்கள் கண்டறியப்பட்டு மாசு அளவு கண்டறியும் கருவி அமைக்க உள்ளோம்.

    ஈரோடு, ஏப். 29-

    ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகளும், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி-– அரக்கன்கோட்டை வாய்காலி லும் தண்ணீர் ஓடுகிறது.

    இப்பகுதியில் அதிகமாக சாய, சலவை, தோல் ஆலைகள், உட்பட பல ஆலை கழிவுகளை நேரடியாக ஆறு மற்றும் நீர் நிலைகளில் கலக்கின்றனர்.

    இதனை கண்காணிக்க காளிங்கராயன் வாய்க்காலில் மட்டும் 3 இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசு அளவீடு செய்யும் கருவி அமைத்துள்ளனர்.

    அக்கருவி அளவீடு செய்து ஆன்லைனில் ஈரோடு மற்றும் சென்னையில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு அளவீட்டை தெரிவிக்கும்.

    இதற்கிடையில் பவானிசாகர் அணையிலும், பவானி ஆற்றிலும் ஆலை கழிவுகள் திறக்கப்படுவதால் கருப்பு நிறமாக தண்ணீர் செல்வதாக புகார் எழுந்தது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் உதயகுமார் கூறியதாவது:

    பவானிசாகர் அணையில் ஆலை கழிவு அல்லது மாசுபட்ட தண்ணீர் கலப்ப தாக புகார் தெரிவி க்கப்ப ட்டது. உடனடியாக அணைக்கு மேல் பகுதி, அணை மற்றும் அணையில் இருந்து பவானி ஆற்றில் செல்லும் தண்ணீர் என அனைத்து இடங்களில் தொடர்ந்து தண்ணீரில் டி.டி.எஸ். (டோட்டல் டிஸால்விடு சால்ட்) உள்ளிட்ட கலப்பு குறித்து பரிசோதித்தோம். அப்படியே குடிக்கும் அளவில் தண்ணீர் உள்ளதை கண்டறிந்தோம்.

    தொடர்ந்து மாசுபாடு ஏற்படுகிறதா? என்பதை கண்காணித்து வருகிறோம். தவிர மாதம் 2 முறை பவானிசாகர் அணையிலும், அணைக்கு முன், பின்பாக அளவீடு செய்வோம்.

    அந்த அளவீட்டுடன் இதனையும் ஒப்பீடு செய்தோம். அணைக்கு பல இடங்களில் இருந்து அடித்து வரப்படும் மண் உள்ளிட்டவை மக்கி, அதன் மூலம் காஸ் அல்லது கருப்பு நிறமாக வெளியேறி இருக்கும் என கருதுகிறோம்.

    மேலும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் காவிரி ஆற்றில் 2 இடங்கள், பவானி ஆற்றில் 2 இடங்கள் கண்டறியப்பட்டு மாசு அளவு கண்டறியும் கருவி அமைக்க உள்ளோம்.

    இதற்கான அனுமதி பெறப்பட்டு கருவிகள் வந்ததும் பொருத்தப்படும்.

    இக்கருவியில் இருந்தும் அளவீடுகள் ஈரோடு மாவட்ட அலுவலகத்துக்கும், சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரிய ஆணைய அலுவலகத்துக்கும் ஆன்லைனில் சென்றடையும்.

    கூடுதலாக சில இடங்களில் வைக்கலாம் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம், மாசுக ட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரைத்தால் பரிசீலிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
    • காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது.

    சென்னை:

    காவிரியில் கழிவு நீர் அதிகளவில் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரளவை காட்டிலும், இது 484 டி.எம்.சி கூடுதல். நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

    சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது.

    காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காவிரி பக்தர்களால் அல் தீபங்கள் ஆற்று நீரில் வரிசையாக மிதக்கவிட்டு ஒளிரச் செய்யப்ட்டது.
    • இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி அன்னையை வழிபட்டார்கள்.

    திருவையாறு:

    அகில பாரத துறவிய ர்கள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகிய அமைப்பினர் 12வது ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரையை கர்நாடக மாநிலம் குடகு மலையிலிருந்து துவங்கி ஒவ்வொரு காவிரி தீர்த்தக் கட்டத்திலும் காவிரி அன்னை விக்ரஹத்திற்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடு செய்து 'காவிரிக் கழிமுகமாம் பூம்புகாரை அடைகிறார்கள்.

    இத்துலாம் மாதத்தில் காவிரி அன்னையை துலாக்கட்டத் துறைதோறும் வழிபாடு செய்யும் பொருட்டு நேற்று மாலை திருவையாறு வந்தடைந்த.

    காவிரி வழிபாட்டுக் குழுவினர் மற்றும் திருவையாறு அன்னைக் காவிரி பௌர்ணமி வழிபாட்டுக் குழுவினர் ஆகியோர் திருவையாறு காவிரி புஷ்யமண்டபத்துறையில் காவிரி அன்னை விக்ரஹ த்திற்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடுகள் செய்து, காவிரி ஆற்றுக்கு தீபாராதனைக் காட்டப்பட்டது. பின்னர் காவிரி பக்தர்களால் அல் தீபங்கள் ஆற்று நீரில் வரிசையாக மிதக்கவிட்டு ஒளிரச் செய்யப்ட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி அன்னையை வழிபட்டார்கள்.

    • கரூருக்கு காவிரி ரத யாத்திரை குழுவினர் வருகை தந்தது
    • பாதுகாப்பு சங்கத்தினர் வரவேற்றனர்

    கரூர்:

    நதியில் குப்பை, கழிவுகளை கொட்டுவதை தவிர்த்தல், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் லட்சக்கணக்கான மரங்களை நடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், கடந்த, மாதம் 21ல் கர்நாடகா மாநிலம், தலைக்காவிரியில் இருந்து இந்த குழுவினர் காவிரி ரத யாத்திரையை தொடங்கினர்.

    இந்நிலையில் நேற்று காலை கரூர் வடிவேல் நகர் முனியப்பன் கோவில் பகுதிக்கு ரத யாத்திரை குழுவினர் வந்தனர். அவர்களை, அனைத்திந்திய இந்து திரு கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து, கரூர் தீயணைப்பு அலுவலக வளாகத்தில் உள்ள சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமி கோவிலில், காவிரி ரத யாத்திரை குழுவினர், மகேஸ் வர பூஜை நடத்தி, சிறப்பு வழிபாடு செய்தனர். இக்குழுவினர் இரண்டாம் நாளாக 

    • கொடுமுடி ஆற்றில் இருந்து காங்கயம் நகருக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் கொண்டு வரப்படுகிறது.
    • நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டாா்களை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காவிரி ஆற்றில் வெள்ளம் தணிந்தவுடன் காங்கயம் நகருக்கு குடிநீா் வழங்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஆற்றில் இருந்து காங்கயம் நகருக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் கொடுமுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டாா்களை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க போா்க்கால அடிப்படையில் வாகனங்கள் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.ஆற்றில் வெள்ளம் தணிந்தவுடன் காங்கயம் நகராட்சி பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் சீராக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆடி அமாவாசை தினத்தை யொட்டி இன்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, தர்ப்பணம் பூஜை செய்தனர்.
    • பூஜையில் வைத்து படைக்கப்பட்ட சாதம், எள் உள்ளிட்ட உணவு வகைகளை காகங்களுக்கு கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி கைலாசநாதர் ஆலயம் முன்பு அமைந்துள்ள காவிரி படித்துறை, படகு துறை, விநாயகர் ஆலயம், காவிரித்தாய் கோவில், நந்திகேஸ்வரர் சன்னதி உள்ளிட்ட காவிரி ஆற்றங்கரை பகுதியில் ஆடி அமாவாசை தினத்தை யொட்டி இன்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, தர்ப்பணம் பூஜை செய்தனர்.

    பூஜையில் வைத்து படைக்கப்பட்ட சாதம், எள் உள்ளிட்ட உணவு வகைகளை காகங்களுக்கு கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடி அமாவாசையை முன்னிட்டு பூலாம்பட்டி காவிரி கரை கைலாசநாதர் ஆலயம், நவகிரக சன்னதி, பசுபதீஸ்வரர் கோவில், காவிரி கரை கணபதி சன்னதி, அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளிட்ட திருத்தலங்களில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது காவிரி ஆற்றில் கூடுதலான அளவில் வெள்ளப்பெருக்கு இருந்து வரும் நிலையில் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க சுதந்திரமாக எந்த செயலும் செய்ய முடியவில்லை.
    • காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அமிர்தராஜின் தாயாரின் படத்திறப்பு விழா கீழ்வேளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. படத்திறப்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க சுதந்திரமாக எந்த செயலும் செய்ய முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் இருந்த அ.தி.மு.க, பா.ஜ.க.வின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. இதுவரை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவராக முடியாத நிலையில், இந்த முறை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக ஒரு கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும்.இந்தியாவில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. பா.ஜ.க.வை தனிமைப்படுத்தி எழுதுவதை நோக்கமாக கொண்டு ஒரே அணியை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மகுடேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
    • இப்பயிற்சியில் எதிர்வரும் மழை வெள்ள காலங்களில் தங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்ட தீணைப்பு துறை அலுவலர் உத்தரவுப்படி தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இப்பயிற்சியில் எதிர்வரும் மழை வெள்ள காலங்களில் தங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கொடுமுடி மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×