search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானி ஆற்றில்"

    • நீரில் முழ்கி கிடந்தது கொமரன் என்பது தெரிய வந்தது.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், நடுப்பாளை யம் காலனியைச் சேர்ந்தவர் கொமரன் (73). இவரது மனைவி கருப்பம்மாள் (50). இருவரும் கூலித் தொழி லாளிகள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமண மாகி தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்த ன்று மாலை 6 மணியளவில், பவானி ஆற்றில் குளித்து விட்டு வருவதாக கூறி சென்ற கொமரன் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.

    இதையடுத்து, கருப்ப ம்மாள், அருகில் வசித்து வரும் தனது மகள்களுடன் சேர்ந்து தேடிப் பார்த்துள்ளனர். நள்ளிரவு ஆகிவிட்ட தால் இருவரும் வீடு திரும்பி விட்டனர்.

    இந்த நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் பவானி ஆற்றில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதாக கருப்பம்மாளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    உடனடியாக அவர் அங்கு சென்று பார்த்தபோது, நீரில் முழ்கிக் கிடந்தது கொமரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே கொமரன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அத்தாணி கைகாட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்று உள்ளனர்.
    • எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய நிலையில் தண்ணீரில் அடித்துச் சென்றனர்.

    ஆப்பக்கூடல், 

    அந்தியூர் அடுத்த புது மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (45), திருமணமாகி மனைவி மாகாளி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.அதே புது மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (46) திருமணமாகி ஜோதி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இருவரும் அந்தியூர் பகுதியில் உள்ள செங்கல் சூலையில் வேலை செய்து வந்தனர், இந்நிலையில் சின்னதுரை, மோகன்ராஜ் மற்றும்அதே பகுதியை சேர்ந்த ரவி ஆகிய மூவரும் நண்பர்கள் ஆவர்.இந்த மூன்று பேரும் நேற்று மதியம் அந்தியூர் அடுத்த அத்தாணி கைகாட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்று உள்ளனர்.

    மூன்று பேரில் ரவி என்பவருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்றில் இறங்கி குளிக்காமல் கரையிலேயே இருந்து உள்ளார்.அதனால் சின்னத்துரை மற்றும் மோகன்ராஜ் இருவரும் மட்டுமே ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.அப்பொழுது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த இருவரும், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய நிலையில் தண்ணீரில் அடித்துச் சென்றனர்.

    கரையில் இருந்து ரவி என்பவர் சிறிது நேரத்திற்கு பிறகு குளிக்க சென்ற நண்பர்கள் இருவரை காணாமல் தேடியுள்ளார்.உடனே அதிர்ச்சி அடைந்த ரவி ஆற்றங்கரையில் இருந்து வெளியேறி வந்து அந்தியூர் தீயணைப்புத் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் தீயணைப்புத்துறை வீரர்கள் நேற்று மாலை ஆற்றில் இறங்கி தேடிய நிலையில் சின்னத்துரை என்பவரின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இரவு ஆனதை தொடர்ந்து தேடுதல் பணியை நிறுத்தி வைக்கப்பட்டது, இன்று காலை ஆற்றில் தேடுதல் பணியை தொடங்கிய தீயணைப்பு வீரர்கள் மோகன்ராஜை தேடி வந்தனர்.சில மணி நேரம் தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மோகன்ராஜை ஆற்றில் சடலமாக மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி ஆற்றங்கரையோரம் பெண் உடல் மிதப்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்துள்ள அத்தாணி பவானி ஆற்றில் சுமார் 55 வயதுடைய முதியவர் உடல் மிதப்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் அத்தாணி கருவல்வாடிபுதூர் அருகே பவானி ஆற்றங்கரையோரம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பவானி ஆற்றில் வெவ்வேறு இடங்களில் பிணமாக மிதந்த ஆண், பெண் உடல் குறித்து யார் என்று அடையாளம் தெரிந்தது. அத்தாணி திருவள்ளுவர் நகர் ஓடைமேடு பகுதியை சேர்ந்த செங்கோடன் (45) என்பதும்,

    அத்தாணி கருவல்வாடிபுதூர் அருகேயுள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலியானார் என்றும் தெரியவந்தது.

    இதனையடுத்து பெண் உடலில் இடது கையில் அமுதா என்ற பெயர் எழுதி உள்ளது. ஆனால் இந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருப்பு நிறமாக தண்ணீர் செல்வதாக புகார் எழுந்தது.
    • 2 இடங்கள் கண்டறியப்பட்டு மாசு அளவு கண்டறியும் கருவி அமைக்க உள்ளோம்.

    ஈரோடு, ஏப். 29-

    ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகளும், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி-– அரக்கன்கோட்டை வாய்காலி லும் தண்ணீர் ஓடுகிறது.

    இப்பகுதியில் அதிகமாக சாய, சலவை, தோல் ஆலைகள், உட்பட பல ஆலை கழிவுகளை நேரடியாக ஆறு மற்றும் நீர் நிலைகளில் கலக்கின்றனர்.

    இதனை கண்காணிக்க காளிங்கராயன் வாய்க்காலில் மட்டும் 3 இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசு அளவீடு செய்யும் கருவி அமைத்துள்ளனர்.

    அக்கருவி அளவீடு செய்து ஆன்லைனில் ஈரோடு மற்றும் சென்னையில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு அளவீட்டை தெரிவிக்கும்.

    இதற்கிடையில் பவானிசாகர் அணையிலும், பவானி ஆற்றிலும் ஆலை கழிவுகள் திறக்கப்படுவதால் கருப்பு நிறமாக தண்ணீர் செல்வதாக புகார் எழுந்தது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் உதயகுமார் கூறியதாவது:

    பவானிசாகர் அணையில் ஆலை கழிவு அல்லது மாசுபட்ட தண்ணீர் கலப்ப தாக புகார் தெரிவி க்கப்ப ட்டது. உடனடியாக அணைக்கு மேல் பகுதி, அணை மற்றும் அணையில் இருந்து பவானி ஆற்றில் செல்லும் தண்ணீர் என அனைத்து இடங்களில் தொடர்ந்து தண்ணீரில் டி.டி.எஸ். (டோட்டல் டிஸால்விடு சால்ட்) உள்ளிட்ட கலப்பு குறித்து பரிசோதித்தோம். அப்படியே குடிக்கும் அளவில் தண்ணீர் உள்ளதை கண்டறிந்தோம்.

    தொடர்ந்து மாசுபாடு ஏற்படுகிறதா? என்பதை கண்காணித்து வருகிறோம். தவிர மாதம் 2 முறை பவானிசாகர் அணையிலும், அணைக்கு முன், பின்பாக அளவீடு செய்வோம்.

    அந்த அளவீட்டுடன் இதனையும் ஒப்பீடு செய்தோம். அணைக்கு பல இடங்களில் இருந்து அடித்து வரப்படும் மண் உள்ளிட்டவை மக்கி, அதன் மூலம் காஸ் அல்லது கருப்பு நிறமாக வெளியேறி இருக்கும் என கருதுகிறோம்.

    மேலும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் காவிரி ஆற்றில் 2 இடங்கள், பவானி ஆற்றில் 2 இடங்கள் கண்டறியப்பட்டு மாசு அளவு கண்டறியும் கருவி அமைக்க உள்ளோம்.

    இதற்கான அனுமதி பெறப்பட்டு கருவிகள் வந்ததும் பொருத்தப்படும்.

    இக்கருவியில் இருந்தும் அளவீடுகள் ஈரோடு மாவட்ட அலுவலகத்துக்கும், சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரிய ஆணைய அலுவலகத்துக்கும் ஆன்லைனில் சென்றடையும்.

    கூடுதலாக சில இடங்களில் வைக்கலாம் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம், மாசுக ட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரைத்தால் பரிசீலிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் நிர்வாண நிலையில் ஆற்றில் மிதந்து.
    • நபரை அரிவா ளால் வெட்டி கொலை செய்து தலையை துண்டித்து விட்டு உடலை ஆற்றில் வீசி சென்றனரா?

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே பெருந்தலையூர் கிராமம் சிரையாம்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி எதிரே பவானி ஆற்றங்கரை உள்ளது.

    நேற்று மாலை அந்த பவானி ஆற்றங்கரையில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அழுகிய நிலையில் தலை, கை, கால்கள் இல்லாமல் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் நிர்வாண நிலையில் ஆற்றில் மிதந்து வந்ததை கண்டு குளித்துக் கொண்டி ருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மோப்பநாய் ஜெர்ரி, தடயஅறிவியல் ஆய்வக நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இது குறித்து தகவல் பரவியதும் அந்த பகுதியில் கூட்டம் கூடியது.

    கவுந்தப்பாடி போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்விரோதம் காரண மாக இறந்த நபரை அரிவா ளால் வெட்டி கொலை செய்து தலையை துண்டித்து விட்டு உடலை ஆற்றில் வீசி சென்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    மேலும் இறந்த நபரின் கை, கால் மற்றும் தலை ஆகியவை வேறு எங்கும் வீசப்பட்டுள்ளதா? என்று போலீசார் தேடி வருகிறார்கள்.

    வேறு எங்கேயோ வைத்து கொலை செய்துவிட்டு போலீசாரை திசை திருப்புவதற்காக உடலை பவானி ஆற்றில் வீசி இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கோபி, சத்திய மங்கலம் சப்டிவிஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் மாயமான வர்களின் பட்டியலை சேகரித்து அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்ப டுத்தி உள்ளனர்.

    மேலும் இறந்தவரின் உடலை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பவானி ஆற்றில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வந்தது.
    • ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த குப்பண்டாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி விஜயகுமாரி (48). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    கடந்த 15 வருடத்திற்கு முன்பு வேலுச்சாமி இறந்து விட்டார்.அதன் பின்பு விஜயகுமாரி கருவல் வாடிபுதூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். விஜயகுமாரி அத்தாணி அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை பார்த்து வந்தார்.

    அவரது மகள் கோவையில் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். தினமும் தந்தையிடம் பேசி வந்த விஜயகுமாரி கடந்த 2 நாட்களாக தந்தையிடம் போனில் பேசவில்லை.

    இதனையடுத்து விஜயகுமாரின் தந்தை மகளை தேடி அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது.

    பின்னர் வீட்டிற்கு பின்புறம் உள்ள பவானி ஆற்றில் ஒரு பெண்ணின்உடல் மிதந்து வருவதாக தகவல் அறிந்து விஜயகுமாரின் தந்தை அங்கு சென்ற பார்த்தபோது இறந்து கிடந்தது தனது மகள் என்று உறுதி செய்தார்.

    இதனையடுத்து அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஜயகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஜயகுமாரி குளிக்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சுழல் நிறைந்த பகுதியாகும்.

    மேட்டுப்பாளையம்,

    சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட வச்சினம்பாளையம் நீருந்து நிலையத்தின் அருகே உள்ள பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. மீறினால் போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவர் என சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வச்சினம்பாளையம் நீருந்து நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் குளிக்கச் சென்ற 5 பேரில் 3 பெண்கள் ஆழமான பகுதிக்கு சென்று சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வெள்ளப் பெருக்கிலும், சுழலிலும் சிக்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வச்சினம்பா ளையம் நீருந்து நிலையம் அருகே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில் இப்பகுதி அபாயகரமான பகுதியாகும். இந்த இடம் மிகவும் ஆபத்தான அடிக்கடி வெள்ளப்பெருக்கு மற்றும் சுழல் நிறைந்த பகுதியாகும். மேலும் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. எனவே, இந்த இடத்தில் பொதுமக் கள் குளிக்கவோ, அத்துமீறி ஆற்றில் இறங்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த எச்சரிக்கை பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் கூறுகையில்: சிறுமுகை வச்சினம்பாளை யம் பகுதியில் உள்ள நீருந்து நிலையம் அருகே அடிக்கடி ஆற்றில் குளிக்க வருவோர் சுழலில் சிக்கியும், வெள்ளப்பெருக்கில் சிக்கியும் பரிதாபமாக தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இதனை தடுக்கவே அப்பகுதியில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பலகை வைக்கப்பட்டுள்ளது. மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • பவானி நகரில் மிக சிறப்பு வாய்ந்த கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • பவானி ஆற்றில் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விடு வதால் அந்தப் பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது.

    பவானி:

    பவானி நகரில் மிக சிறப்பு வாய்ந்த கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    கோவில் பின் பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    தற்போது கோவிலுக்கு வெளியூர், வெளி மாநில அய்யப்ப பக்தர்கள் கூடு துறைக்கு அதிகளவு வந்து காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து செல்வதால் கோவில் பகுதியில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

    இதனால் குப்பைகளும் அதிக அளவில் காணப்படு கிறது.இந்த குப்பைகளை கோவில் பணியாட்கள் அவ்வபோது சுத்தம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரோடு- பவானி ரோடு கோவிலை யொட்டி உள்ள பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும பொதுமக்கள் சிலர் கோவில் நுழைவு வாயில் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் குவிந்து வருகிறது.

    இதையடுத்து பவானி ஆற்றில் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விடு வதால் அந்தப் பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகை மூட்டத்தால் அவதி அடைந்து வருகின்ற னர்.

    எனவே பவானி கூடுதுறை நுழைவு வாயில் பகுதியில் உள்ள ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குப்பைக்கு தீ வைப்ப வர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்‌பகுதி பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.10 அடியாக உள்ளது.
    • பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணை 104 அடியில் நீடித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்ட நிலையில் இன்று 1,900 கனஅடியாக குறைத்து விடப்படுகிறது.

    இதேபோல் கீழ் பவானி வாய்க்காலுக்கு ஆயிரம் கன அடி நீர் என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து அப்படியே 4,700 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் கடந்த 17-ந் தேதி மாலை பவானிசாகர் அணை மீண்டும் 102 அடியை எட்டியது. அணையின் விதிப்படி 102 அடி எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி கீழ் மதகு வழியாக அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து அப்படியே 4,700 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    • 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பவானி ஆற்றில் பிணமாக மிதப்பதாக தெரிய வந்தது.
    • பலியான அந்த மூதாட்டி பெயர், விபரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமலை கருப்பராயன் கோவில் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பவானி ஆற்றில் பிணமாக மிதப்பதாக தெரிய வந்தது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக மிதந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பலியான அந்த மூதாட்டி பெயர், விபரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×