search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது
    X

    பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது

    • பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சுழல் நிறைந்த பகுதியாகும்.

    மேட்டுப்பாளையம்,

    சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட வச்சினம்பாளையம் நீருந்து நிலையத்தின் அருகே உள்ள பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. மீறினால் போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவர் என சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வச்சினம்பாளையம் நீருந்து நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் குளிக்கச் சென்ற 5 பேரில் 3 பெண்கள் ஆழமான பகுதிக்கு சென்று சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வெள்ளப் பெருக்கிலும், சுழலிலும் சிக்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வச்சினம்பா ளையம் நீருந்து நிலையம் அருகே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில் இப்பகுதி அபாயகரமான பகுதியாகும். இந்த இடம் மிகவும் ஆபத்தான அடிக்கடி வெள்ளப்பெருக்கு மற்றும் சுழல் நிறைந்த பகுதியாகும். மேலும் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. எனவே, இந்த இடத்தில் பொதுமக் கள் குளிக்கவோ, அத்துமீறி ஆற்றில் இறங்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த எச்சரிக்கை பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் கூறுகையில்: சிறுமுகை வச்சினம்பாளை யம் பகுதியில் உள்ள நீருந்து நிலையம் அருகே அடிக்கடி ஆற்றில் குளிக்க வருவோர் சுழலில் சிக்கியும், வெள்ளப்பெருக்கில் சிக்கியும் பரிதாபமாக தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இதனை தடுக்கவே அப்பகுதியில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பலகை வைக்கப்பட்டுள்ளது. மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×