பவானி ஆற்றில் ஆண்-பெண் உடல்கள் மீட்பு

பவானி ஆற்றங்கரையோரம் பெண் உடல் மிதப்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.
பவானி ஆற்றில் ஆண்-பெண் உடல்கள் மீட்பு
Published on

ஆப்பக்கூடல்:

ஆப்பக்கூடல் அடுத்துள்ள அத்தாணி பவானி ஆற்றில் சுமார் 55 வயதுடைய முதியவர் உடல் மிதப்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் அத்தாணி கருவல்வாடிபுதூர் அருகே பவானி ஆற்றங்கரையோரம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பவானி ஆற்றில் வெவ்வேறு இடங்களில் பிணமாக மிதந்த ஆண், பெண் உடல் குறித்து யார் என்று அடையாளம் தெரிந்தது. அத்தாணி திருவள்ளுவர் நகர் ஓடைமேடு பகுதியை சேர்ந்த செங்கோடன் (45) என்பதும்,

அத்தாணி கருவல்வாடிபுதூர் அருகேயுள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலியானார் என்றும் தெரியவந்தது.

இதனையடுத்து பெண் உடலில் இடது கையில் அமுதா என்ற பெயர் எழுதி உள்ளது. ஆனால் இந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com