பவானி ஆற்றில் மூதாட்டி பிணமாக மீட்பு

பவானி ஆற்றில் மூதாட்டி பிணமாக மீட்பு

65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பவானி ஆற்றில் பிணமாக மிதப்பதாக தெரிய வந்தது.பலியான அந்த மூதாட்டி பெயர், விபரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமலை கருப்பராயன் கோவில் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பவானி ஆற்றில் பிணமாக மிதப்பதாக தெரிய வந்தது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக மிதந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலியான அந்த மூதாட்டி பெயர், விபரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com