பவானி ஆற்றில் 4,700 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது.அணையில் இருந்து அப்படியே 4,700 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் 4,700 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
Published on

ஈரோடு:

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதனால் கடந்த 17-ந் தேதி மாலை பவானிசாகர் அணை மீண்டும் 102 அடியை எட்டியது. அணையின் விதிப்படி 102 அடி எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி கீழ் மதகு வழியாக அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியே ற்றப்பட்டு வருகிறது.

இதனால் பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து அப்படியே 4,700 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com