search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகதாது"

    • யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ, மறுக்கவோ அணை கட்ட திட்டமிடவில்லை.
    • மேகதாது அணை திட்டம் குறித்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

    பெங்களூர்:

    கர்நாடக காங்கிரஸ் மந்திரி பிரியங்க் கார்கே கூறியதாவது:-

    காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணைகட்ட திட்டமிட்டுள்ளோம். யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ, மறுக்கவோ அணை கட்ட திட்டமிடவில்லை. மேகதாது அணை திட்டம் குறித்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பிரியங்க் கார்கேவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியை தமிழக அமைச்சர் துரைமுருகன் சந்தித்த நிலையில் கர்நாடக மந்திரி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

    • காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என காங்கிரஸ் அரசு கூறி வருகிறது.
    • காவிரி மேலாண்மை ஆணையத்தை பிரதமர் மோடி அமைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவ டைந்துள்ளன. இந்த 9 ஆண்டு காலத்தில் இந்தியாவில் பல்வேறு நல்ல திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி உள்ளார். இன்னும் பல திட்டங்களை கொண்டு வர உள்ளார்.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன்படுத்தப்ப டுகிறது. அனைவருக்குமான ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார்.

    குறிப்பாக தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 60 லட்சத்து 53 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேப்போல் 15 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

    தஞ்சை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தார். விரைவில் தஞ்சை யில் விமான நிலையம் வர உள்ளது.

    மத்திய அரசில் பிரதமர் மோடி பொறுப்பேற்று 9 ஆண்டு கால ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

    இதன் மூலம் உலகப் பொருளாதார வல்லரசு நாடுகளில் ஐந்தாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சி, ஊழல் உள்ளிட்டவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என காங்கிரஸ் அரசு கூறி வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மேகதாதுவில் அணை கட்ட தமிழக பா.ஜ.க ஒருபோதும் அனுமதிக்காது. இதேபோல மத்திய அரசும் அனுமதி தராது.

    கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சியில் மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சி நடத்தபோது, அதை எதிர்த்து தமிழ்நாட்டில் தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்தியது.

    இதேபோல காங்கிரஸ் அரசும் மேகதாதுவில் அணை கட்ட முயன்றால், தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்தும்.காவிரியில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை பிரதமர் மோடி அமைத்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, பா.ஜ.க தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய் சதீஷ், ஊடகப் பிரிவு தெற்கு மாவட்டத் தலைவர் சிவபிரகாசம், மாவட்ட பொதுச் செயலாளர் வீரசிங்கம் மற்றும் துரை,

    மாவட்ட பொருளாளர் விநாயகம், ஊடகப்பிரிவு பார்வையாளர் செந்தில்,கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் கபிலன், விவசாய அணி மாவட்ட தலைவர் தங்கவேலு, தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் பொன் மாரியப்பன், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் சந்திரசேகர், முரளி,பிரபாகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

    • கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    • மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவு பாதிக்கப்படும்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி தெரிவிக்கும் வகையில், வேலூரில் செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துறை முருகன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எவ்வித பேச்சுவார்த்தை, சமரசம் செய்தாலும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்.

    மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவு பாதிக்கப்படும்.

    காவிரி பிரச்சினை குறித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முழுவதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க சுதந்திரமாக எந்த செயலும் செய்ய முடியவில்லை.
    • காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அமிர்தராஜின் தாயாரின் படத்திறப்பு விழா கீழ்வேளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. படத்திறப்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க சுதந்திரமாக எந்த செயலும் செய்ய முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் இருந்த அ.தி.மு.க, பா.ஜ.க.வின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. இதுவரை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவராக முடியாத நிலையில், இந்த முறை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக ஒரு கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும்.இந்தியாவில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. பா.ஜ.க.வை தனிமைப்படுத்தி எழுதுவதை நோக்கமாக கொண்டு ஒரே அணியை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×