search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரத்தி"

    • நொய்யல் ஆறு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்
    • 4 தனியார் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு நொய்யல் ஆற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    திருப்பூர்,

    அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் மற்றும் நொய்யல் ஆறு டிரஸ்ட் சார்பில் கோவையில் நடைபெற உள்ள நொய்யல் பெருவிழாவையொட்டி அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்த மகராஜ் வழிகாட்டுதலின்படி, சந்நியாசிகள் இணைந்து நொய்யல் ஆறு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ரதத்தில் நொய்யல் அம்மன் எழுந்தருளினார். ரத யாத்திரை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் தொடங்கி நொய்யல் ஆற்றின் கரையோரமாக சென்று வழிநெடுகிலும் உள்ள மக்களுக்கு சந்நியாசிகள் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

    திருப்பூர் மாநகருக்குள் நேற்று வந்தடைந்த ரத யாத்திரை குழுவினர் திருப்பூரில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு நொய்யல் ஆற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து திருப்பூரில் நொய்யல் ஆற்றுக்கு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. திருப்பூர் ெநாய்யல் வீதி வளம் பாலத்தில் நொய்யல் ஆற்றுக்கு பால், மஞ்சள் நீர், மலர்களால் ஆரத்தி வழிபாடு செய்யப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில பாரதீய சந்நியாசிகள் சங்க பொறுப்பாளர் பாரதி, திருப்பூர் ஸ்ரீராம கிருஷ்ணா வித்யாலயா பள்ளி தாளாளர் முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.
    • கடற்கரையில் கடல் அன்னைக்கு பக்தர்கள் சிறப்பு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.

    வேதாரண்யம்:

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் வனதுர்க்கை அம்மன் கோவிலில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர், புனிதநீர் அடங்கியகடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இதேபோல், வேதாரண்யம் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகருக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்திநாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், வேதார ண்யம் அருகே வேம்ப தேவன்காட்டில் மவுனமகான் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இந்த சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    மேலும், ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் செய்து பின் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்நிலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.

    மேலும், பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் கடல் அன்னைக்கு பக்தர்கள் சிறப்பு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.

    இதேபோல், கோடிய க்காடு குழகர் கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதேபோல், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள ஆறுமுகக்கடவுள், மேலகுமரர் மற்றும் நாகை சாலையில் உள்ள பழனியாண்டவர் கோவில், ஆறுகாட்டுத்துறையில் உள்ள முருகன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    • கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் எழுந்தருளி உள்ள சாய்பாபாவிற்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 4 கால ஆரத்தி விழா நடைபெற்றது.
    • இந்த அன்னதானம் தினந்தோறும் காலை முதல் இரவு வரை 3 வேளையும் நடைபெறும். நித்ய அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் எழுந்தருளி உள்ள சாய்பாபாவிற்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 4 கால ஆரத்தி விழா மற்றும் நித்ய அன்னதானம் நேற்று நடைபெற்றது. இதில் காலை 6 மணிக்கு ஆரத்தி, 7 மணிக்கு புனித தீர்த்த நீராடல் நிகழ்ச்சி, 8 மணிக்கு நெய்வேத்தியம், சங்கல்ப பூஜை, சிறப்பு ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு நித்ய அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை நாமக்கல் ராமலிங்கம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    இந்த அன்னதானம் தினந்தோறும் காலை முதல் இரவு வரை 3 வேளையும் நடைபெறும். நித்ய அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    மதியம் மற்றும் மாலையிலும் ஆரத்தி நடைபெற்றது. இந்த விழாவில் நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டிபட்டி சாய் தபோவன கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • காவிரி பக்தர்களால் அல் தீபங்கள் ஆற்று நீரில் வரிசையாக மிதக்கவிட்டு ஒளிரச் செய்யப்ட்டது.
    • இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி அன்னையை வழிபட்டார்கள்.

    திருவையாறு:

    அகில பாரத துறவிய ர்கள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகிய அமைப்பினர் 12வது ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரையை கர்நாடக மாநிலம் குடகு மலையிலிருந்து துவங்கி ஒவ்வொரு காவிரி தீர்த்தக் கட்டத்திலும் காவிரி அன்னை விக்ரஹத்திற்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடு செய்து 'காவிரிக் கழிமுகமாம் பூம்புகாரை அடைகிறார்கள்.

    இத்துலாம் மாதத்தில் காவிரி அன்னையை துலாக்கட்டத் துறைதோறும் வழிபாடு செய்யும் பொருட்டு நேற்று மாலை திருவையாறு வந்தடைந்த.

    காவிரி வழிபாட்டுக் குழுவினர் மற்றும் திருவையாறு அன்னைக் காவிரி பௌர்ணமி வழிபாட்டுக் குழுவினர் ஆகியோர் திருவையாறு காவிரி புஷ்யமண்டபத்துறையில் காவிரி அன்னை விக்ரஹ த்திற்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடுகள் செய்து, காவிரி ஆற்றுக்கு தீபாராதனைக் காட்டப்பட்டது. பின்னர் காவிரி பக்தர்களால் அல் தீபங்கள் ஆற்று நீரில் வரிசையாக மிதக்கவிட்டு ஒளிரச் செய்யப்ட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி அன்னையை வழிபட்டார்கள்.

    • கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம் தொடங்கி வைத்தார்
    • முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம் உள்பட திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    ஆனிமாத பவுர்ணமி யையொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் நடந்தது.

    கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேதபாடசாலையில்இருந்து கைலாய வாத்தியத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில்உள்ள பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தார். அங்கு பூஜை நடந்தது.

    அதையடுத்து சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள். தொடர்ந்து வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டாக்டர் சிவசுப்பிர மணியபிள்ளை, பொருளாளர செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியா செல்வி ஆகியோர் முன்னிலைவகித்தார்கள்.

    கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீ சூரிய குரு மகாராஜ் மகாலிங்க தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் தீபம் ஏற்றி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி குகநாதீஸ் வரர் கோவில் அர்ச்சகர் ராஜாமணி அய்யர் தலைமையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர் சுரேஷ் முன்னிலையில் 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் கொண்ட ராட்சத தீபாரதனை த்தட்டில் தீபம் ஏற்றி பவுர்ணமி நிலவை நோக்கி தீபம் காட்டி ஆராதனை செய்தனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம் உள்பட திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • சுமங்கலி பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள்

    கன்னியாகுமரி :

    வைகாசி பவுர்ணமியை யொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில்நேற்று மாலைநடந்தது. மாலை 5.30மணிக்கு பஜனையுடன் நிகழ்ச்சிதொடங்கியது.

    அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேத பாடசாலையில் இருந்து கைலாய வாத்தியத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவிலில் பூஜை நடந்தது. தொடர்ந்து சித்திரகுப்தர் பூஜை மற்றும் சாதுக்களிடம் ஆசிபெறும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் சப்தகன்னிகள் பூஜை நடந்தது. அதன் பிறகு கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தது.

    அதையடுத்து சுமங்கலி பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள். வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டாக்டர் சிவசுப்பிர மணியபிள்ளை, பொருளாளர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியா செல்வி ஆகியோர்முன்னிலை வகித்தார்கள். இதில் தமிழக சட்டமன்ற பா.ஜ.க.தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபம் ஏற்றி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கன்னியா குமரி குகநாதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் ராஜா மணி அய்யர்தலைமையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர்சுரேஷ் முன்னிலையில் 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் கொண்ட ராட்சத தீபாரதனை தட்டில் தீபம் ஏற்றி பவுர்ணமி நிலவை நோக்கி தீபம் காட்டி ஆராதனை செய்தனர்.

    இதில் திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கன்னியாகுமரி கடற்கரையில் இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.
    • சுசீந்திரம் காசி திருப்பனந்தாள் திருமடத்தைச்சேர்ந்த தம்பையா ஓதுவாரின் பண்ணிசை நிகழ்ச்சி

    கன்னியாகுமரி:

    வைகாசி பவுர்ணமியை யொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு பஜனையும் அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேத பாடசாலையில் இருந்து கைலாய வாத்தியத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில் உள்ள பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதில் சுசீந்திரம் காசி திருப்பனந்தாள் திருமடத்தைச்சேர்ந்த தம்பையா ஓதுவாரின் பண்ணிசை நிகழ்ச்சி நடக்கிறது.

    5 .15 மணிக்கு பரசுராமர் விநாயகர் கோவிலில் பூஜை நடக்கிறது. 5.30மணிக்கு சித்திரகுப்தர் பூஜை மற்றும் சாதுக்களிடம் ஆசிபெறும் நிகழ்ச்சி நடக்கிறது. 5.30மணிக்கு சப்தகன்னிகள் பூஜை நடக்கிறது.

    பின்னர் நடக்கும் நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட இந்து திருத் தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபாலன் தலைமை தாங்குகிறார்.

    பொதுச்செயலாளர் டாக்டர்சிவசுப்பிர மணியபிள்ளை, பொருளாளர்செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியாசெல்வி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். 6.30மணிக்கு கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகம் நடக்கிறது.

    6 45 மணிக்கு சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல்அன்னைக்கு தீபம் காட்டுகிறார்கள்.இறுதியாக இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர்எஸ். ராஜகோபால், பொதுச்செயலாளர் எஸ்.சிவசுப்பிரமணிய பிள்ளை, பொருளாளர் செந்தில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுசுயா செல்வி, எம். சந்திரன், எம். கோபி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    ×