search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uttarpradesh"

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது மகள் மாற்று ஜாதி இளைஞரை காதலிப்பதை அறிந்த தந்தை, தனது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் ப் பிஹ்ரா பகுதியில் உள்ள தவுலத்ப்பூர் என்ற கிராமத்தில் வசிப்பவர் தட்டாராம். இவரது 21 வயது மகளான பூஜா வேற்று ஜாதி இளைஞரை பல நாட்களாக காதலித்து வந்துள்ளார். மேலும், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

    இதற்கு தட்டாராம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவே, பூஜா நீதிமன்றத்தை நாடியுள்ளார். தங்களுக்கு திருமணம் செய்துவைக்குமாறு பூஜா நீதிமன்றத்தில் மனு அளிக்க அதனை வாபஸ் பெருமாறும், காதலை கைவிடுமாறும் தந்தை தட்டாராம் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், பூஜாவின் பிடிவாதத்தால் ஆத்திரமடைந்த தட்டாராம், பூஜாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு தாமாக முன்வந்து காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுதொடர்பாக, பூஜாவின் தாயார் புகார் அளிக்கவே கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தட்டாராமை சிறையில் அடைத்துள்ளனர்.

    ஜாதி மோகம் அழிந்துவிட்டதாக இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகள் மார்தட்டிக் கொள்ளும் நிலையில், ஜாதி வெறியால் பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விரைவில் துணைவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்ய வந்தேன் என பெண் துறவி சாத்வி பிராச்சி தெரிவித்துள்ளார். #SadhviPrachi #RahulGandhi
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் அமைந்துள்ளது கோரக்நாத் கோவில். இந்த கோவிலுக்கு நேற்று இந்துத்துவா தலைவர் சாத்வி பிராச்சி வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

    அவர்களிடம் சாத்வி பிராச்சி பேசுகையில், நான் எப்போதும் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். ஆனால் இந்த முறை ஒரு சிறப்பு பிரார்த்தனைக்காக வந்துள்ளேன்.

    மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை காங்கிரஸ் பெறவில்லை. எனவே, ராகுலுக்கு விரைவில் நல்ல துணைவியாவது கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கவே இப்போது வந்துள்ளேன் என கூறினார்.



    காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு துணைவி கிடைக்க வேண்டும் என பெண் துறவி வேண்டிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து, உ.பி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அசோக் சிங் கூறுகையில், பிரபலமானவர்களை பற்றி கருத்து கூறுவது தற்போது இது டிரெண்டாக உருவாகி வருகிறது.

    சாத்வி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இதுபோன்ற கருத்துக்களை கூறி வருகிறார். இது அருவருக்கத்தக்க செயல் என தெரிவித்தார். #SadhviPrachi #RahulGandhi
    உத்தரப்பிரதேசத்தில் தொலைபேசிக்கான கண்ணாடி இழைகளை பதிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது களிமண் சரிந்தௌ விழுந்ததில் 5 பேர் பலியாகினர். #Accident
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிலிபிட் பைபாஸ் சாலையில் தொலைபேசிக்கான கண்ணாடி இழைகள் போடப்படும் பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்நிலையில், நேற்று இரவு சில தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரா விதமாக பள்ளம் தோண்டிய களிமண் திடீரென சரிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 5 தொழிலாளர்கள் களிமண்ணில் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.

    இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கு மேற்பார்வை செய்த சூப்பர்வைசரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொலைபேசி இணைப்புக்காக பள்ளம் தோண்டியபோது களிமண் சரிந்து விழுந்து 5 தொழிலாளிகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் முறையாக பணி செய்யாத 2 காவல் கண்காணிப்பாளர்களை பணியிடை நீக்கம் செய்து முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #UttarPradesh #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பால் மற்றும் பிரதாப்கர் பகுதியில் காவல் கண்காணிப்பாளர்களாக பணிபுரியும் பரத்வாஜ், சந்தோஷ் குமார் சிங் ஆகிய இருவரும் ஒழுங்காக பணி செய்வது இல்லை எனவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு  டி.ஜி.பி ஓ.பி.சிங் பரிந்துரை செய்தார்.

    இந்த பரிந்துரை தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், அந்த இரண்டு காவல் கண்காணிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்கு பதிலாக சம்பால் பகுதியில் யமுனா பிரசாத்தையும், மற்றும் பிரதாப்கர் பகுதிக்கு தேவ் ரஞ்சன் வெர்மாவையும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 அதிகாரிகளும், அவர்களது பகுதியில் நடைபெற்ற கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. #UttarPradesh #YogiAdityanath
    உத்திரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகள் போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    லக்னோ:

    உத்திரப்பிரதேச மாநிலம் ராம்நகர் பகுதியில் 17 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த முஷிர் மற்றும் இப்ராகிம் ஆகிய 2 குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை குற்றவாளிகள் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    போலீசாரை கண்ட முஷிர் மற்றும் இப்ராகிம் அங்கிருந்து தப்பிப்பதற்காக போலீசாரை துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காவல்துறையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 குற்றவாளிகளும் கொல்லப்பட்டனர். இதுகுறித்து எஸ்.பி. ஸ்ரீவசதாவ் கூறுகையில், 'அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 காவலர்கள் காயமடைந்தனர். தற்காப்புக்காக நாங்கள் சுட்டதில் முஷிர் மற்றும் இப்ராகிம் கொல்லப்பட்டனர்' என தெரிவித்துள்ளார்.

    முஷிர் மற்றும் இப்ராகிமை பிடித்துக்கொடுக்க 50 ஆயிரம் ரூபாய் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    உத்தர பிரதே சமாநிலத்தில் ஜூலை 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. #UPPlasticBan
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை விதிக்கும்படி அலகாபாத் ஐகோர்ட் கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. முழுமையாக இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில், மீண்டும் 2017ம் ஆண்டு அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. ஆனால், நகர்ப்புறங்களில் பிளாஸ்டிக் புழக்கத்தையும், பயன்பாட்டையும் அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை.

    இந்நிலையில், வரும் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரபங்கியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த தடை உத்தரவு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.


    ‘மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் கப்புகள், டம்ளர்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. நமது இலக்கை எட்டுவதற்கு ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க, அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்று யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த மாதம் 23-ம் தேதியில் இருந்து பிளாஸ்டிக் தடை செய்ப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முதல் முறை மீறுவோருக்கு 5000 ரூபாயும், இரண்டாவது முறை மீறுவோருக்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறுசெய்யும்பட்சத்தில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறையைப் பின்பற்றி உ.பி. அரசும் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #UPPlasticBan
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வராததால் தனது பாட்டியை கட்டை வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு தூக்கி வந்த பேரனின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Ambulance #GrandmainCart
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பஸ்டி மாவட்டத்தில் உள்ளது கமல்பூர் கிராமம். இங்கு வசிக்கும் சிறுவன் சோட்டு (12). இவனது பாட்டி அனரா தேவி (85).

    அனரா தேவிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நிலை மோசமானது. இதையடுத்து, சோட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். ஆம்புலன்சுக்கு போன் செய்தார். ஆனால் ஆம்புலன்ஸ் எதுவும் வரவில்லை

    நேரம் சென்று கொண்டிருப்பதை உணர்ந்த  சோட்டு, அங்கிருந்த கட்டை வண்டியில் அனரா தேவியை வைத்து அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

    உ.பி.யில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது வாடிக்கையாக உள்ளதால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தோல் தொழிற்சாலையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். #LeatherFactory #Fire
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் ஜாஜ்மாவ் பகுதியில் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
    இன்று இரவு அந்த தோல் தொழிற்சாலையில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து 6-க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் சேத விவரங்கள் வெளியாகவில்லை. தோல் தொழிற்சாலையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #LeatherFactory #Fire
    பாஜக தலைவர்களால் எனது சகோதரர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என கோரக்பூர் டாக்டர் கபில்கான் குற்றம் சாட்டியுள்ளார். #GorakhpurHospital #DoctorKafeelKhan #KashifJameel
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். தொடர்ந்து அந்த மருத்துவமனையில் குழந்தைகள் இறந்து வருவது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து உ.பி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில் கானை உ.பி. மாநில சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். 

    இதற்கிடையே, கோரக்பூர் மருத்துவமனை விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில் கானின் சகோதரர் காஷிப் ஜமீல் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இந்நிலையில், பாஜக தலைவர்களால் எனது சகோதரர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என கோரக்பூர் டாக்டர் கபில்கான் குற்றம் சாட்டியுள்ளார். 

    இதுதொடர்பாக கபில் கான் கூறுகையில், எனது சகோதரரை சுட்டவரை 48 மணி நேரத்தில் பிடித்திருக்கலாம். ஆனால் சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும் யாரையும் கைது செய்யவில்லை.

    பாஜக தலைவர்களால் எனது சகோதரர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #GorakhpurHospital #DoctorKafeelKhan #KashifJameel
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் புழுதி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. #UPRain #UPDustStorm
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெருமளவில் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த தொடர் மழை ஓய்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. 

    இதற்கிடையே, உ.பி.யின் சில மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதன்படி கோண்டா, பைசாபாத், சீதாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்று வீசியதால் சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

    இந்த புயல் மழை தொடர்பான விபத்துக்களில் கோண்டாவில் 3 பேரும், பைசாபாத்தில் ஒருவரும், சீதாப்பூரில் 6 பேரும் என நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், கவுஷாம்பியில் 3 பேரும், ஹர்தோய் மற்றும் சித்ரகூட் பகுதிகளில் தலா ஒருவரும் புழுதி புயலுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, மழை மற்றும் புழுதி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 28 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். #UPRain #UPDustStorm
    உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவமனை விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில் கானின் சகோதரர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். #GorakhpurHospital #DoctorKafeelKhan #KashifJameel
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். தொடர்ந்து அந்த மருத்துவமனையில் குழந்தைகள் இறந்து வருவது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக உ.பி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில் கானை உ.பி. மாநில சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். 

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவமனை விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில் கானின் சகோதரர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ஹுமாயுன்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்த காஷிப் ஜமீல் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்த காஷிப் ஜமீலை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். துப்பாக்கியால் சுட்ட நபர்களை தேடி வருகிறோம் என தெரிவித்தனர். #GorakhpurHospital #DoctorKafeelKhan #KashifJameel
    உ.பி. முதல் மந்திரி அளித்த காசோலை வங்கியில் திருப்பி அனுப்பப்பட்டதால் பத்தாம் வகுப்பில் 7வது இடம் பிடித்த மாணவர் அதிர்ச்சி அடைந்தார். #UttarPradesh #BoardTopper #ChequeBounce
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 7வதி இடம் பிடித்தவர் அலோக் மிஸ்ரா.

    கடந்த மாதம் 29ம் தேதி லக்னோவில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அலோக் மிஸ்ராவை பாராட்டி, ஒரு லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினார்.

    இதையடுத்து, மிஸ்ராவின் தந்தை அந்த காசோலையை கடந்த 5ம் தேதி வங்கியில் செலுத்தினார். ஆனால், காசோலையில் உள்ள கையெழுத்து பொருந்தவில்லை எனக்கூறி வங்கி காசோலை திருப்பி அனுப்பியது. அத்துடன், காசோலையை திருப்பி அனுப்பியதற்காக அபராத கட்டணத்தையும் மிஸ்ராவிடம் வசூலித்தது.

    இதையறிந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அந்த காசோலைக்கு பதிலாக வேறு காசோலையை வழங்கி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    முதல் மந்திரி அளித்த காசோலை வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh #BoardTopper #ChequeBounce
    ×