search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்திரப்பிரதேசம்"

    • இங்கு, ராமாயண அடிப்படையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.
    • இதை நினைவு கூறும் விதத்தில் “ராமலீலா” என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்ளில் ராமாயண அடிப்படையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.

    ராமபிரான் இலங்கைக்கு போருக்கு சென்றபோது பேராற்றலும், பலமும் வேண்டி அம்பிக்கையை பூஜித்தார்.

    இதை நினைவு கூறும் விதத்தில் "ராமலீலா" என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    விஜயதசமி அன்று ராவணனின் உருவத்தை பத்து தலைகளுடன் செய்து அதை நெருப்பிட்டு எரிக்கிறார்கள்.

    அந்த பொம்மைக்குள் பட்டாசு, மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை நிரப்பி மைதானங்களில் வைத்து கொளுத்தி விடுவார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு "ராவண தகனம்" என்று பெயர்.

    மனதில் உள்ள தீய எண்ணங்களை நீங்கி நல்லருள் பெற வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

    உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஊறுகாய் தயாரிப்பு ஆலையில் உள்ள தொட்டியில் விழுந்து ஆலை உரிமையாளர், அவரது மகன் உள்பட மூன்று பேர் பரிதாபமக உயிரிழந்தனர். #UPpicklefactoryDeath
    லக்னோ :

    உத்திரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் உள்ள ஊறுகாய் தயாரிப்பு ஆலையில்,  ஊறுகாய் தாயாரிப்பதற்கு என ரசாயணம் கலந்த காய்கறிகள் இருந்த தொட்டியில் விழுந்து ஆலை உரிமையாளர், அவரது மகன் மற்றும் தொழிலாளர் உள்பட 3 பேர் பரிதாபமக உயிரிழந்துள்ளனர்.

    ரசாயனம் கலந்த தொட்டியை எட்டிப்பார்த்த போது நெடியால் பாதிக்கப்பட்டு தந்தையும், மகனும் தொட்டிக்குள் மழங்கி விழுந்துள்ளனர். அவர்களை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளியும் பரிதமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். உயிரிழப்பு ஏற்பட்ட ஊறுகாய் ஆலை முறையான அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். #UPpicklefactoryDeath
    ×