search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "two wheeler"

    • ஜெயச்சந்திரன் தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
    • இரவு பணியை முடித்து விட்டு வந்து பார்க்கையில் அவரது வாகனம் திருடு போனது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் முருக்கேரி பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன். இவர் திண்டிவனம் மயிலம் ரோட்டில் உள்ள தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்இருசக்கர வாகனம் நிறுவனம் எதிரே தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். இரவு பணியை முடித்து விட்டு வந்து பார்க்கையில் அவரது வாகனம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து திண்டிவனம் போலீசாரிடம் ஜெயச்சந்திரன் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்துமர்ம நபர்களை வலை வீசிதேடி வருகின்றனர்.

    • திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து மர்ம நபர்கள் துணிகர கைவரிசை காட்டியுள்ளனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் மீனா(வயது29). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் அவர் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்க்கிறார்.

    இந்நிலையில் தன்னு டைய பிள்ளைகளை தனது சொந்த ஊரான அழகு ரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் விட்டு விட்டு இரவில் இருசக்கர வாகனத்தில் தனக்கன்குளம் வந்து கொண்டிருந்தார்.

    திருமங்கலம்- குதிரைச்சாரிகுளம் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார்சைக்கி ளில் வந்த மர்ம நபர்கள், மீனா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் மீனா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • திண்டிவனம் போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் இரு சக்கர வாகனத்தை தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் மயிலம் ரோட்டில் உள்ள உணவகத்தின் வெளியே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, உணவு வாங்க சென்றுள்ளார். மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து திண்டிவனம் போலீசில் கண்ணதாசன் புகார் செய்தார். அதன் பெயரில் திண்டிவனம் போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் இரு சக்கர வாகனத்தை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இருசக்கர வாகனத்தை திருடியது திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியைச் சேர்ந்த அஜய் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அஜய் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பேரணியை திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா தொடங்கி வைத்தார்.
    • இருசக்கர தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி பா.ஜ.க சார்பில் நடைபெற்றது. ஒன்றிய, நகர இளைஞரணி சார்பில் இருசக்கர தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா தொடங்கி வைத்தார். வேளூரில் தொடங்கிய பேரணி புதிய, பழைய பேருந்து நிலையம், ரெயிலடி மன்னை சாலை, அண்ணா சிலை, வேதை சாலை, அண்ணா நகர் என முக்கிய வீதிகள் வழியாக வந்து நெடும்பலத்தில் முடிவுற்றது. இதில் மாவட்ட பொருளாளர் தமிழ்பால் சிவக்குமார், மாவட்ட செயலாளர் வினோத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராகவன், டி ஆர் கணேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரகுமாரன், ஒன்றிய தலைவர் பூபதி, இளைஞர் அணி பொறுப்பாளர் மணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாநகர பகுதியில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீசார் அறிவுரை கூறினர்.
    • இந்த நடைமுறை பல்வேறு மாவட்டங்களில் அமலுக்கு வந்தன.

    மதுரை

    தமிழகத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நடைமுறை பல்வேறு மாவட்டங்களில் அமலுக்கு வந்தன.

    மதுரை மாநகரில் போக்குவரத்து விதி–முறைகளை மீறுவோர் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்்ந்து பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி (தெப்பக்குளம்), சுரேஷ் (தல்லாகுளம்), கணேஷ் ராம் (தெற்கு வாசல்) உள்ளிட்ட அதிகாரிகள், நகரம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஒட்டிய 545 பேரும், பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணித்த 194 பேரும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 23 பேரும் பிடிபட்டனர். அவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    மேலும் யூனிபார்ம் அணியாமல் ஆட்டோவை ஓட்டிய 74 டிரைவர்களும் பிடிபட்டனர். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை மாநகரம் முழுவதும் பஸ் நிறுத்தங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் மாணவ- மாணவிகளிடம் பஸ்சுக்குள் செல்லும்படி அறிவுறுத்தினர்.

    பஸ் நிறுத்தங்களில் நின்று கொண்டிருந்த மாணவ-மாணவிகளிடம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

    • கள்ளக்குறிச்சியில் காசநோய் கண்டறியும் வாகனம் கலெக்டர் ஸ்ரீதர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்கு டியினர் பிரி வினருக்கு 60 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் 2025-ல் காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை அடையும் வகையில் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ரே பொருத்திய நவீன மருத்துவ வாகனத்தினை சென்னை யில்தமிழகமுதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வழங்கப் பட்ட காசநோய் கண்டறியும் நடமாடும் வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த காசநோய் கண்டறியும் வாகனம், மருத்துவ குழுவினருடன் கிராமங்கள் முழுவதும் சென்று காசநோய் கண்டறிதல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட் டவர்கள், வயதான வர்கள், புகைப்பிடிப்பவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ள வர்கள், சிறுநீரகம் தொடர்பான நோய் உடைய வர்கள், புற்று நோயால் பாதிக்க ப்பட்ட வர்களுக்கு எக்ஸ்ரே பரி சோதனை மேற் கொள்ளப்படும். இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட த்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார்.

    இந்நிகழ்வின்போது, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பாலச்சந்தர், துணை இயக்குநர் (காசநோய்) சுதாகர், துணை இயக்குநர் பொது சுகாதாரம் ராஜா, நெஞ்சக நோய் நிபுணர் ராம்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் நேரு, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் பழமலை, உதவி மருத்துவ அலு வலர் பொய்யாமொழி, தேசிய சுகாதார குழுமத்தின் மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பிரதம மந்திரி மத்திய மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகவும், சில்லரை மீன் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டும் ரூ.69,243 மதிப்பீட்டிலான இருசக்கர வாகனத்தினையும், ரூ.4,478 மதிப்பீட்டிலான 70 லிட்டர் கொள்ளளவு உள்ளகுளிர்காப்பு பெட்டியினையும், பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியத்திலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்கு டியினர் பிரி வினருக்கு 60 சதவீத மானிய த்திலும் வழங்கப் படுகிறது.

    அதன்படி, இன்று சங்கராபுரம் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர் களில் பொதுப்பிரிவு வகுப்பைச் சேர்ந்த 12 பயனாளிகளுக்கு தலா ரூ.73,721 மதிப்பிலான குளி ர்காப்பு பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தினை 40 சதவீத மானியத்துடன் ரூ.44,233 மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது, உதவி இயக்கு நர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) நித்ய பிரியதர்ஷினி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் சந்திரமணி மற்றும் அரசு அலு வலர்கள் உடன் இருந்தனர்.

    • தாராபுரத்தில் மழை காலங்களில் சாக்கடை நீர் சாலைகளில் செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
    • நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி இணைந்து கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள படிகளை அகற்றி வருகின்றனர்.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் மழை காலங்களில் சாக்கடை நீர் சாலைகளில் செல்வதாலும், பெரிய கடைவீதி, ஜவுளி கடை வீதி ,சின்ன கடை வீதி , பூக்கடை கார்னர் சர்ச் வீதி ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    எனவே மழை காலங்களில் சாக்கடை நீர் ரோட்டில் செல்லாமல் தடுப்பதற்காகவும் தாராபுரத்தில் அனைத்து பகுதியிலும் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி இணைந்து கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள படிகளை அகற்றி வருகின்றனர்.

    இந்தநிலையில் அகற்றப்பட்ட கற்குவியல்கள் கடை வீதி எங்கும் காணப்படுகின்றன .ஒரு சில இடங்களில் தெருவிற்கு செல்லும் ரோட்டை அடைத்து கிடப்பதால் அந்த வீதியில் இருந்து வெளியே வரும் பள்ளிக்குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 2 கிலோ மீட்டர் அளவுக்கு சுற்றி வருகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக கற்களையும் மண்ணையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் ,வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாதி, மத அடையாளங்களை குறிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
    • இருசக்கர வாகனங்களில் சாதி, மதம் சம்மந்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றார்.

    தேவகோட்டை

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரியில் திறக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆணைக்கிணங்க, துணை சூப்பிரண்டு ரமேஷ் உத்தர வின் பேரில் ேதவகோட்டை நகர் காவல் நிலையத்தில் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் நடந்தது.

    நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கி பேசுகையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாதி, மதத்தை விளக்கும் விதத்தில் கயிறு மற்றும் பிற பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் பள்ளி, கல்லூரி வாளகத்தில் மாணவ, மாணவிகள் கயிறு அணிந்து வர அனுமதிக்க கூடாது. மாலை நேரங்களில் வீட்டுக்கு செல்லும் மாணவர்கள் வெளி இடங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் அதிக நேரம் நிற்க கூடாது. இருசக்கர வாகனங்களில் சாதி, மதம் சம்மந்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றார்.

    இக்கூட்டத்தில் நகரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி முதல்வர்கள், பேன்சி ஸ்டோர் உரிமையாளர்கள், ஸ்டிக்கர் ஒட்டும் கடை உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த மாத விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்தது.
    • இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மே 2022 விற்பனையில் அமோக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த மே மாத விற்பனை அமோகமாக நடைபெற்று இருக்கிறது. முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பல்வேறு நிறுவனங்கள், ஊழியர்களை அலுவலகம் வர வலியுறுத்தி இருப்பதை அடுத்து தனிப்பட்ட போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து உள்ளது.

    அந்த வகையில், மே 2022 மாதத்தில் இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் முன்னணி இருசக்கர உற்பத்தியாளர்களின் வாகன விற்பனை விவரங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மே 2022 மாதத்தில் மட்டும் இந்தியாவில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 466 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 561 யூனிட்களை மட்டும் விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை மே 2022 மாதத்தில் 59 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2021 மே மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 60 ஆயிரத்து 342 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மே 2022 மாதத்தில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 844 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டு மே மாதத்தில் வெறும் 38 ஆயிரத்து 763 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.


    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் கடந்த மாதம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 482 யூனிட்களை விற்பனை செய்தது. 2021 மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் மொத்தத்தில் 52 ஆயிரத்து 084 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ராயல் என்பீல்டு நிறுவனம் 2022 மே மாதத்தில் 53 ஆயிரத்து 525 யூனிட்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு 20 ஆயிரத்து 073 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் கடந்த மே மாதம் 60 ஆயிரத்து 518 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 11 சதவீதம் அதிகம் ஆகும்.

    இந்தியாவில் 13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Scooter



    உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகனமாக இந்திய ஆட்டோமொபைல் சந்தை இருக்கிறது. எனினும், கடந்த சில மாதங்களில் இருசக்கர வாகனங்களின் விற்பனை சரிவை சந்தித்து வருகிறது. இந்திய சந்தையில் 13 ஆண்டுகளில் முதல் முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிந்துள்ளது.

    2018-19 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 67 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருக்கிறது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 0.27 சதவிகிதம் குறைவாகும். 



    முன்னதாக 2005-06 நிதியாண்டில் ஸ்கூட்டர் விற்பனையில் 1.5 சதவிகிதம் சரிந்தது. வேலைவாய்ப்பு பிரச்சனை காரணமாக ஸ்கூட்டர் மற்றும் இருசக்கர வாகன விற்பனை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

    ஜனவரி மாதம் முதல் இருசக்கர வாகனம் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை சரிவை சந்திக்க துவங்கியது. பெரும்பாலான ஸ்கூட்டர் மற்றும் இருசக்கர வாகன பிராண்டுகள் உற்பத்தியை குறைத்துவிட்டன. 

    இந்த வரிசையில் டி.வி.எஸ்., ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.
    புதுச்சேரியில் நாளை முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா கூறினார். #Helmet #TwoWheeler
    புதுச்சேரி:

    புதுவையில் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பெண்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கட்டாய ஹெல்மெட் திட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் ஹெல்மெட் அணிவது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் ஹெல்மெட் அணிவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 648 பேர் இறந்துள்ளனர். இதில் 322 பேர் ஹெல்மெட் அணியாததாலேயே உயிரிழந்துள்ளனர். எனவே நாளை (திங்கட்கிழமை) முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாவிட்டால் வழக்கை சந்திக்க வேண்டியது இருக்கும்.

    ஹெல்மெட் அணியாதவர்களுக்கு முதலில் ரூ.100 அபராதம் விதிப்போம் அல்லது அதற்கான ரசீது கொடுப்போம். 3-வது முறை ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டால் டிரைவிங் லைசென்சு ரத்து செய்யப்படும். காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதும் அவசியம். இதை மீறுவோருக்கும் அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது வாகனங்கள் விற்பனையில் 6 சதிவிகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #TVSMotor



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத விற்பனையில் 6 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    டி.வி.எஸ். நிறுவனம் 2017 டிசம்பரில் 2,56,870 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2,71,395 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டிசம்பர் 2017 உடன் ஒப்பிடும் போது டிசம்பர் 2018 இல் வாகன விற்பனையில் 4 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருக்கிறது.

    2017 டிசம்பரில் உள்நாட்டு இருசக்கர வாகனங்கள் விற்பனை 2,07,739 யூனிட்களாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் 2,09,906 யூனிட்கள் விற்பனையாகி ஒரு சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.



    டி.வி.எஸ். நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2017 டிசம்பரில் 83,638 யூனிட்கள் விற்பனையானது. கடந்த ஆண்டு டிசம்பரில் 91,480 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 

    மோட்டார்சைக்கிள் விற்பனை 2017 டிசம்பரில் 95,246 யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் 1,07,189 யூனிட்கள் விற்பனையாகி 13 சதவிகித வளர்ச்சி பெற்றுள்ளது.

    டி.வி.எஸ். நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 26 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டும் டி.வி.எஸ். நிறுவனம் 60,262 யூன்ட்களை ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய ஆண்டு டிசம்பரில் டி.வி.எஸ். நிறுவனம் 47,818 யூனிட்கள் ஏற்றுமதியாகி இருந்தது.
    ×