இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு

திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது. மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து மர்ம நபர்கள் துணிகர கைவரிசை காட்டியுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் மீனா(வயது29). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் அவர் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்க்கிறார்.

இந்நிலையில் தன்னு டைய பிள்ளைகளை தனது சொந்த ஊரான அழகு ரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் விட்டு விட்டு இரவில் இருசக்கர வாகனத்தில் தனக்கன்குளம் வந்து கொண்டிருந்தார்.

திருமங்கலம்- குதிரைச்சாரிகுளம் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார்சைக்கி ளில் வந்த மர்ம நபர்கள், மீனா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் மீனா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com