search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sticker"

    • துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • அந்தந்த துறையின் லோகோ ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துக்களை ஒட்டி உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் துணை போலிஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் கூறியதாவது;-

    திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்டவைகளில் போலீஸ், பிரஸ், வக்கீல் மற்றும் அரசு துறையின் கீழ் பணியாற்றுபவர்கள் அந்தந்த துறையின் லோகோ ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துக்களை ஒட்டி உள்ளனர். இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானதாகும். அரசு வாகனங்களில் மட்டுமே அந்தந்த துறையின் சார்பில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட கண்டிப்பாக அனுமதி கிடையாது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றமும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது.

    எனவே, திருக்கோவிலூர் பகுதியில் வாகனங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் ஸ்டிக்கர்களை உடனடியாக தாங்களாகவே அகற்ற வேண்டும். அரசு அறிவித்துள்ளபடி நம்பர் பிளேட்டுகளில் நம்பர் தெரியும்படி இருக்க வேண்டும். வருகிற 20-ந்தேதியில் இருந்து திருக்கோவிலூர் நகரப் பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார். வீதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்க–ளில் உள்ள கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள கறுப்பு ஸ்டிக்கர்கள் அகற்றம்.
    • டிரைவர்களிடம் வாகன குறைகளை கேட்ட–றிந்து, அவற்றை நிவர்த்தி செய்யவும் உத்தரவிட்டார்.

    சேலம்:

    தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் போலீசார், அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்க–ளில் உள்ள கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள கறுப்பு ஸ்டிக்கர்களை உடனே அகற்றி மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அறிக்கை அளிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி சேலம் மாவட்டத்தில் போலீசாரின் வாகனங்களில் உள்ள கறுப்பு ஸ்டிக்கர் அகற்றும் பணி ஒரு வாரமாக நடந்தது. நேற்று சேலம் மாவட்ட ஆயுதப்படை கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து, டிரைவர்களிடம் வாகன குறைகளை கேட்ட–றிந்து, அவற்றை நிவர்த்தி செய்யவும் உத்தரவிட்டார்.

    • சாதி, மத அடையாளங்களை குறிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
    • இருசக்கர வாகனங்களில் சாதி, மதம் சம்மந்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றார்.

    தேவகோட்டை

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரியில் திறக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆணைக்கிணங்க, துணை சூப்பிரண்டு ரமேஷ் உத்தர வின் பேரில் ேதவகோட்டை நகர் காவல் நிலையத்தில் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் நடந்தது.

    நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கி பேசுகையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாதி, மதத்தை விளக்கும் விதத்தில் கயிறு மற்றும் பிற பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் பள்ளி, கல்லூரி வாளகத்தில் மாணவ, மாணவிகள் கயிறு அணிந்து வர அனுமதிக்க கூடாது. மாலை நேரங்களில் வீட்டுக்கு செல்லும் மாணவர்கள் வெளி இடங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் அதிக நேரம் நிற்க கூடாது. இருசக்கர வாகனங்களில் சாதி, மதம் சம்மந்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றார்.

    இக்கூட்டத்தில் நகரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி முதல்வர்கள், பேன்சி ஸ்டோர் உரிமையாளர்கள், ஸ்டிக்கர் ஒட்டும் கடை உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×