search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இந்திய இருசக்கர வாகனங்கள் விற்பனை விறுவிறு உயர்வு
    X

    இந்திய இருசக்கர வாகனங்கள் விற்பனை விறுவிறு உயர்வு

    • இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த மாத விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்தது.
    • இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மே 2022 விற்பனையில் அமோக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த மே மாத விற்பனை அமோகமாக நடைபெற்று இருக்கிறது. முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பல்வேறு நிறுவனங்கள், ஊழியர்களை அலுவலகம் வர வலியுறுத்தி இருப்பதை அடுத்து தனிப்பட்ட போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து உள்ளது.

    அந்த வகையில், மே 2022 மாதத்தில் இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் முன்னணி இருசக்கர உற்பத்தியாளர்களின் வாகன விற்பனை விவரங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மே 2022 மாதத்தில் மட்டும் இந்தியாவில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 466 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 561 யூனிட்களை மட்டும் விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை மே 2022 மாதத்தில் 59 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2021 மே மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 60 ஆயிரத்து 342 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மே 2022 மாதத்தில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 844 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டு மே மாதத்தில் வெறும் 38 ஆயிரத்து 763 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.


    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் கடந்த மாதம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 482 யூனிட்களை விற்பனை செய்தது. 2021 மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் மொத்தத்தில் 52 ஆயிரத்து 084 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ராயல் என்பீல்டு நிறுவனம் 2022 மே மாதத்தில் 53 ஆயிரத்து 525 யூனிட்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு 20 ஆயிரத்து 073 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் கடந்த மே மாதம் 60 ஆயிரத்து 518 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 11 சதவீதம் அதிகம் ஆகும்.

    Next Story
    ×