search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Treatment"

    • வயநாடு மக்கள் அனைவரையும் எனது குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுகிறேன்.
    • தொகுதியின் வளர்ச்சிக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கேரள மாநிலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குறிப்பாக தனது தொகுதியான வயநாட்டில் மக்களை சந்தித்தும் வருகிறார். திருவாலியில் வலி மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி அவர் பேசியதாவது:-

    கேரளாவின் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு துறை நாட்டிலேயே மிகச்சிறந்த துறைகளில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் நோய் தடுப்பு சிகிச்சையில் கேரளா ஒரு முன்னோடியாக உள்ளது. தன்னால் இயன்ற உதவிகளை செய்யத்தயாராக இருப்பதாகவும், ஆனால் எம்.பி.யாக இருந்து தனக்கு கிடைத்த நிதி மட்டுப்படுத்தப்பட்டதாகவும், கவனமாக பகிர்ந்தளிக்க வேண்டியதாகவும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மறைந்த முஸ்லீம் லீக் தலைவர் சீத்தி ஹாஜி பற்றிய புத்தக வெளியீட்டு விழாவிலும் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வயநாடும், கேரளாவும் தனக்கு 2-வது வீடு போன்றது என்றார். கேரளா மற்றும் வயநாட்டுக்கு நான் எவ்வளவு அதிகமாக வருகிறேனோ, அவ்வளவு அதிகமாக இது எனது வீடு என்று உணர்கிறேன். வயநாடு மக்கள் அனைவரையும் எனது குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுகிறேன். மேலும் அடுத்த திட்டமாக எனது தாய் சோனியா காந்தியை இங்கு அழைத்துவர உள்ளேன். நான் இங்கு வரும்போது புதிதாக ஒன்றை கற்றுக்கொள்கிறேன். தொகுதியின் வளர்ச்சிக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றார்.

    • வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்துடன் மதுவை கலந்து குடித்துள்ளார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அடுத்த மேலகபிஸ்தலம் கொத்ததெரு பாலக்கரை பகுதியில் வசிப்பவர் அப்பாசாமி (வயது 64).

    விவசாய கூலி தொழிலாளி.

    இவரது மனைவி சரோஜா (55).

    சம்பத்தன்று அப்பாசாமிக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்துடன் மதுவை கலந்து குடித்து மயங்கிவிட்டார்.

    இதனை அறிந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சரோஜா கொடுத்த புகாரின் போரின் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதுரை கண் ஆஸ்பத்திரிக்கு இலவசமாக செய்யகூடிய அறுவை சிகிச்சைக்காக கண்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    • விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம். கண்தானம் செய்வோம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் தேவதானம் மனற்படுகையை சேர்ந்த பெரியசாமி மனைவியும், கார்த்தி தாயாரும், கட்டிமேடு ஓவிய ஆசிரியர் நேரு சகோதரியுமான மணிமேகலை மரணம் அடைந்தார். முன்னதாக மரணத்திற்கு முன்பே அவர் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் கண்தானம் செய்ய விருப்பம் தெரிவித்து இருந்தார்.அதன்படி மணிமேகலை கண்களை தானமாக ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் பெற்று குடும்பத்தினரின் ஒப்புதலோடு மதுரை அரவிந்த கண் மருத்துவமனைக்கு இலவசமாக செய்யகூடிய அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    மறைந்தும் நான்கு நபரின் வாழ்வில் ஒளியேற்றி, உயிர் வாழ்கிற மணிமேகலை குடும்பத்திற்கு ராய் டிரஸ்ட் சார்பாக பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது.

    இது பற்றி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் கூறும் போது, தானங்களில் சிறந்தது கண்தானம். உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி கார்னியல் பிளைண்ட்னெஸ் எனப்படும் கருவிழி பாதிப்பானது பார்வையிழப்புக்குக் காரணமான விஷயங்களில் நான்காவது இடம் வகிப்பதாகத் தெரிகிறது.

    இறந்தவர்களின் கண்களை அடுத்த 6 - 8 மணி நேரத்துக்குள் எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. இறந்தவர்களின் கண்கள் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் அவற்றை பிரத்தியோக ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்து வருவார்கள். கருவிழி மாற்று அறுவைசிகிச்சை தேவைப் படுவோருக்கு அவற்றைப் பொருத்துவதன் மூலம் பார்வை கிடைக்கச் செய்ய முடியும்.

    கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில், பிரச்னைகள் ஏதும் இல்லாத பட்சத்தில் 5 முதல் 15 வருடங்கள் வரை அப்படியே இருக்கும். ஆனால், இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நபர், அடிக்கடி கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம். கண் தானம் செய்வோம். கண்கள் புதைப்பதற்கு அல்ல, விதைப்பதற்கு என்ற விழிப்புணர்வை அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்றார்.

    • சளி, வைரஸ் ஜுரம் போன்ற நோய்களால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
    • நடமாடும் மருத்துவமனை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர்மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பருத்திச்சேரியில் மழை காலத்தில் ஏற்படும் காய்சல், இருமல் , சளி, வைரஸ் ஜுரம் போன்ற நோய்களால் பொதுமக்கள் அவதியுற்று வந்த நிலையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவமனை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது.

    வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் முத்துகுமாரசாமி மேற்பார்வையில் நடந்த முகாமில்பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தேவையானவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    • பலத்த காயமடைந்த சாக்கப்பாவை பொது மக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • சான மாவு வனப்பகுதியில் 5 காட்டு யானைகளும் சுற்றித் திரிவதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலமங்கலம் அடுத்த விருப்பாச்சி நகரை சேர்ந்தவர் சாக்கப்பா (வயது45).

    இவரது மனைவி திம்மக்கா. கூலி வேலை செய்து வரும் சாக்கப்பாவுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். சாக்கப்பா இன்று விருப்பாச்சி நகரிலிருந்து சினிகிரிப்பள்ளி கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை சாக்கப்பாவை தாக்கி உள்ளது.

    இதில் அவருக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பி உள்ளார்.

    பலத்த காயமடைந்த சாக்கப்பாவை பொது மக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து ஓசூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிகிரிப் பள்ளி பகுதியில் ஒற்றை காட்டு யானையும் சான மாவு வனப்பகுதியில் 5 காட்டு யானைகளும் சுற்றித் திரிவதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு காய்ச்சல் தடுப்பு வார்டு தொடக்கம்
    • கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா பேட்டி

    கோவை,

    கோவையில் காலநிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது. தினசரி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சராசரியாக 50 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் தற்போது 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து கோவை ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:

    30 பேர் உள்நோயாளிகளாக பல்வேறு வைரஸ் காய்ச்சல்களால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காலநிலை மாற்றத்தால் தண்ணீர் மற்றும் கொசுவால் வைரஸ் காய்ச்சல் பரவுவதால், குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். வீட்டின் முன் தேங்கும் நீரினை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், கொசுக்கள் பரவாமல் தவிர்க்க வேண்டும். 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியை அணுகி பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிலத்தில் இருந்த காட்டுப் பன்றி திடீரென்று மணிவண்ணனை கடித்தது.
    • காட்டுப்பன்றி ஊடுறுவதை வேளாண்மை துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சின்ன தானங்குப்பம் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 28). இவர் விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வருகின்றார்.

    நேற்று மணிவண்ணன் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் தனது நிலத்திற்கு விவசாய பணி மேற்கொள்வதற்காக சென்றார். அப்போது நிலத்தில் இருந்த காட்டுப் பன்றி திடீரென்று மணிவண்ணனை கடித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் உடனடியாக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மணிவண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காட்டுப்பன்றி ஊடுறுவதை வேளாண்மை துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகை பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது குத்புதீன் மகன் முகமது வசிப் (வயது 14).

    இவர் காரைக்கால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்தபோது முகமதுவசிப்பை ஏதோ விஷப்பூச்சி கடித்து அலறி உள்ளார்.

    உடன் முகமதுவசிப் பெற்றோர் அவர் தூங்கி இடத்தை சுற்றி பார்த்துள்ளனர்.

    எதுவும் கண்ணில் படாததால் திரும்ப தூங்க சொல்லி உள்ளனர்.காலை முகமதுவசிப் சோர்வாகவும்,மயங்கி விழுந்துள்ளார்.

    உடன் முகமதுவசிப் அவரது பெற்றோர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முகமதுவசிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • முரளிக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதுண்டு.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி(30) செங்கல் சூளைதொழிலாளி.திருமணமானவர்.இவ ருக்கு மனைவி, 2மகள்கள் உள்ள னர். முரளிக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதுண்டு.

    இந்நிலையில் கடந்த 29ம் தேதி இரவு 8 மணிக்கு விஷம்குடித்தார். ஆபத்தான நிலையில் உடனடியாக முரளியை முண்டியம்பாக் கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலை யில் நேற்று இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றார்.
    • சிகிச்சை பலனின்றி ஜெயரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கை நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் . இவரது மனைவி ஜெய ரஞ்சனி (வயது 31). இவர் நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றார். அப்போது திடீரென கட்டு விரியன் பாம்பு கடித்தது.

    இதில் மயங்கி விழுந்த ஜெயரஞ்சனியை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயரஞ்சனி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அந்தப்பணத்தில் சாராயம் குடித்துவிட்டு, சாராயக்கடை ஓரம் படுத்து தூங்குவது வாடிக்கையாக வைத்திருந்தார்.
    • குப்பைகளிலிருந்து பாட்டில்களை எடுத்துவிட்டு, சாலையை கடக்க முயன்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் மகத்தோப்பு சாராயக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மதுரையை சேர்ந்த குமார் (வயது50) என்பவர், பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை குப்பைகளிலிருந்து எடுத்து விற்று, அந்தப்பணத்தில் சாராயம் குடித்துவிட்டு, சாராயக்கடை ஓரம் படுத்து தூங்குவது வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 23-ந் தேதி, குமார், திரு.பட்டினம் கீழவாஞ்சூர் சாலையில் குப்பைகளிலிருந்து பாட்டில்களை எடுத்துவிட்டு, சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது, காரைக்கால், நாகை சாலையில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அதிவேகமாகக சென்ற மோட்டார் சைக்கிள், குமார் மீது மோதியது. இதில், குமார் பலத்த காயமுற்றார். தொடர்ந்து, காரைக்கால் தனியார் துறைமுகம் ஆம்புலன்ஸ் மூலம் குமார் காரைக்கால் அரசு ஆஸ்பதிரிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு குமார் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, சாராயக்கடையில் வேலை செய்யும் தங்கபாண்டியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், திரு.பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள்(வயது70) விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அய்யம்பெருமாள் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யம்பெருமாள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×