பருத்திச்சேரியில் நடமாடும் மருத்துவ முகாம்

சளி, வைரஸ் ஜுரம் போன்ற நோய்களால் பொதுமக்கள் அவதியுற்றனர். நடமாடும் மருத்துவமனை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது.
பருத்திச்சேரியில் நடமாடும் மருத்துவ முகாம்
Published on

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர்மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பருத்திச்சேரியில் மழை காலத்தில் ஏற்படும் காய்சல், இருமல் , சளி, வைரஸ் ஜுரம் போன்ற நோய்களால் பொதுமக்கள் அவதியுற்று வந்த நிலையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவமனை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது.

வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் முத்துகுமாரசாமி மேற்பார்வையில் நடந்த முகாமில்பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தேவையானவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com