search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி"

    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன.
    • தமிழக அரசு சார்பில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.

    கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் அணைகள் நிரம்பியதால் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன. லட்சக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் தவித்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.


    தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.1000 என வழங்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


    இந்நிலையில், நடிகர் பிரசாந்த், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் மழையால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. இதற்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

    • ஏற்கனவே ஜனவரி 2ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
    • நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற மின் நுகர்வோருக்கும் அவகாசம் பொருந்தும்.

    தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு மின் கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    வரும் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

    வீடு, வணிக பயன்பாடு, தொழிற்சாலைகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற மின் நுகர்வோருக்கும் அவகாசம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இரு மாவட்ட மக்களுக்கும் ஏற்கனவே ஜனவரி 2ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
    • நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 30 மற்றும் 31ம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    • மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களில் நடைபெறுகிறது.
    • மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்கள், சான்றுகளை பெற ஏதுவாக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    டிசம்பர் 28ம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

    அதன்படி, தூத்துக்குடி வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களில் நடைபெறுகிறது.

    இதேபோல், மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது.
    • மின்வினியோகம் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன.

    தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18-ம் தேதிகளில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்தது. மிக குறைந்த நேரத்தில் அதீத கனமழை பெய்ததால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது.

    இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்தன. தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தென்திருப்பேரை, ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் சுற்றுவட்டார பகுதிகள் உள்பட மாவட்டம் முழுக்க ஆயிரத்திற்கும் அதிக கிராமங்களை வெள்ளம் சூழந்தது.

     


    இரண்டு மாவட்டங்களிலும் ஏராளமான இடங்களில் பாலங்கள் உடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் மின்வினியோகம், தொலைதொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டது. மழை நின்று ஒரு வாரத்திற்கும் மேலாகி விட்ட நிலையில், தூத்துக்குடியில் முழுமையாக மின்சேவை வழங்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக மின் வினியோகம் வழங்கப்பட்டு விட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

    • நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக நடவடிக்கை.
    • தூத்துக்குடியில் பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி இம்மாதம் (டிசம்பர்) 31ம் தேதி வரை சுங்க கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெருவாரியான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • மழை பாதிப்பில் இருந்து நெல்லை தற்போது மீண்டுவருகிறது.
    • தூத்துக்குடியின் ஒரு சில பகுதிகளில் மழைநீர் வடியாமல் இருக்கிறது.

    புதுடெல்லி:

    கடுமையான மழை வெள்ளத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் பாதித்தன. மிக கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் பல பகுதிகள் முழு அளவில் சகஜ நிலைக்கு வரவில்லை.

    வானிலை ஆய்வு மையம் முறையாக எச்சரிக்க தவறிவிட்டதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது. ஆனால் அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை. முதலமைச்சரே இந்தியா கூட்டணிக் கூட்டத்துக்கு சென்றுவிட்டார். மத்திய அரசு உடனடியாக ஹெலிகாப்டர்கள், ராணுவ வீரர்களை அனுப்பி மீட்பு பணியில் ஈடுபட்டது. மழை நீர் வடிகால் ஓடை அமைக்க கொடுக்கப்பட்ட ரூ.4 ஆயிரம் கோடி பணத்தை முறையாக செலவிடவில்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பரபரப்பாக புகார் கூறினார்.

    அவரது இந்தக் கருத்துக்கு அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். வெள்ள நிவாரண நிதி எதுவும் ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.

    இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் (26-ம் தேதி) தூத்துக்குடி வருகிறார்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார். பகல் 12.30 மணியளவில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர் அங்கிருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட செல்கிறார். தூத்துக்குடி டவுன், முத்தையாபுரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை பார்க்கிறார்.

    ஏற்கனவே மத்திய குழுவினர் வெள்ளம் வடிவதற்கு முன்பே நேரில் ஆய்வுசெய்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

    தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி வழங்கவேண்டும் என்று கேட்டுள்ளது.

    இதற்கிடையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, விரைவில் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கும் என்று குறிப்பிட்டார். எனவே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு நிர்மலா சீதாராமன் நிவாரண நிதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • வெள்ளம் காரணமாக பல பகுதிகள் துண்டிக்கப்பட்டன.
    • செல்போன் டவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய இரு தினங்ளில் பெய்த அதிக கனமழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்டன.

    சாலைகள் மழை, வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. தற்போது வெள்ளம் வடிந்து வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை பாதிப்பு காரணமாக செல்போன் டவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

     


    இதன் காரணமாக தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், ஏரல், காயல்பட்டினம் பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தொலைபேசி சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பெருமழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகு தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். சேவை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 60 சதவீத பி.எஸ்.என்.எல். சேவை செயல்பட துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    • ஆறுமுகமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத் தெண் விநாயகர் கோவில்.
    • சுப்ரமணிய புஜங்கம் பாடியபின் நோய் வலி நீங்கப்பெற்றார்.

    கடவுள் ரூபங்களில் முதன் முதலாக வணங்கப்பட்ட விநாயகர் என்றும் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநயாகர் கோவில் என்றும் சொல்லப்படுவது தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத் தெண் விநாயகர் கோவில்.

    கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தென்று இந்த ஆலயத்தின் வரலாறு கூறுகிறது. கி.மு. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோமார வல்லபன் என்ற அரசன் நர்மதை நதிக்கரையில் இருந்து ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து இங்கு மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்திட முடிவு செய்தான்.

    ஆனால் அங்கு வந்தவர்களோ 999 பேர்தான் ஒரு பண்டிதர் குறைந்ததால் மன்னனின் மனதில் கவலை ஏற்பட்டது. பிரார்த்தனை செய்பவர் போல வடிவம் கொண்டு விநாயகரே பண்டிதராக வந்து யாகத்தை நிறைவுசெய்தார். இதனால் இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகப் பெருமான் என்று அழைக்கப்படுகிறது.

    யக்ஞம் முடிந்த உடன் ஆறுமுக மங்கலத்தையே கிராமதானமாக பெற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்ட தாக வரலாற்று ஏடு தெரிவிக்கிறது.

    தொடக்க காலத்தில் இந்த கிராமத்தின் தெற்கு கரையில் பல அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டார்கள். பின்னர் காளஹஸ்தீஸ்வரர் கல்யாணி தேவி சன்னதிகளோடு மகா மண்டபம் அமைக்கப்பட்டது. தேர், கொடிமரம், 10 நாட்கள் உற்சவங்களோடு திருவிழா காணும் முக்கிய விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்றாக கூறப்படுகிறது.

    5 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இந்த கோவிலில் ஒரு சமயம் ஆதிசங்கரருக்கு வயிற்று வலி ஏற்பட்டபோது, இங்கே கணேச பஞ்சரத்ன கீர்த்தனம் பாடி பிறகு திருச்செந்தூருக்கு சென்று முருகன் சன்னதியில் சுப்ரமணிய புஜங்கம் பாடியபின் நோய் வலி நீங்கப்பெற்றார் என்பது இங்கே நடந்த முக்கிய செய்தி.

    வாகன விபத்து, பயண பிரச்சினை, வழக்கு இழுபறி ஆகியவை சுமூகமாக முடிய இந்த விநாயகரை வேண்டினால் நடந்துவிடும் என்று நம்பும் கக்தர்கள் அப்படி நடந்த பிறகு 1008, 108 தேங்காய்களை உடைத்து 108 தீபங்களும் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்போது 7-ம் திருநாளன்று ஸ்ரீநடராஜ மூர்த்தியுடன் பஞ்சமுக கணபதி திரு வீதி உலா வருவார். நெல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஏரலில் இருந்து அடுத்த 4 கி.மீட்டரில் வடக்கு திசையில் ஆறுமுக மங்கலத்தை அடையலாம்.

    • பள்ளி தாளாளர் ஆ.ஜெயா சண்முகம் தலைமையில் தாத்தா, பாட்டிகள் தினம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் கிருஷ்ண ஜெயந்தி விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளும் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மூன்றாம் மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் தாத்தா, பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஆ.ஜெயா சண்முகம் தலைமையில் தாத்தா, பாட்டிகள் தினம் நடை பெற்றது. ஆசிரியை இசக்கியம்மாள் வரவேற்று பேசினார். மாணவ- மாணவிகளின் தாத்தா, பாட்டிகள் வந்திருந்து பேரக்குழந்தைகளை பூக்களை தூவி ஆசீர்வாதம் செய்த னர். மாணவ- மாணவிகளின் சிறப்புரை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 'தாத்தா பாட்டிகள்' தினத்தை பற்றி ஆசிரியை உதயம்மாள் சிறப்புரையாற்றினார். கிருஷ்ண ஜெயந்தி விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளும் வழங்கப் பட்டது. பழைய பாடல்களுக்கு தாத்தா, பாட்டிகள் தங்கள் பேரக்குழந்தைகளுடன் ஆடி மகிழ்ந்தனர். ஆசிரியை நாகேஸ்வரி நன்றி கூறினார்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
    • ஒருமித்த கருத்துகளுடன் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலை மையில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரிய சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    அனைத்து தரப்பினரின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது. செய்த சாதனைகள் ஏராளம். இதை அனைத்து தரப்பினர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். ஒருமித்த கருத்துகளுடன் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைக்க ப்பட்டு உள்ளது. அந்த கூட்டணி அமைவதற்கு காரணமாக இருந்த நமது முதல்- அமைச்ச ரை, பா. ஜனதா கட்சியினரும், பிரதமர் மோடியும் தேவையி ல்லாத கருத்துக்களை எல்லாம் கூறி வருகின்றனர். என வே பாராளுமன்ற தேர்த லில் பா.ஜனதா அரசை வீழ்த்தும் வரை அனைவரும் தீவிர மாக பணியாற்ற வேண்டும்.

    உதயநிதிக்கு வரவேற்பு

    வருகிற 4-ந்தேதி (திங்கட்கி ழமை) தூத்துக்குடி மாவட்ட த்திற்கு வருகை தரும் மாநில இளைஞர் அணி செயலா ளரும், விளையாட்டு மேம்பா ட்டுத்துறை அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இதில் அனைத்து அணியை சார்ந்த நிர்வாகி களும், ஒன்றிய,நகர,பேரூர் கிளை வட்டச்செயலாளர்கள் அதிக அளவில் கலந்து கொ ள்வது மட்டுமின்றி, இளைஞர் அணியி னர் ஒவ்வொரு பகுதி யில் இருந்து அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறு முகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்தி ரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பி னர்கள் கோட்டு ராஜா, கஸ்தூரிதங்கம், ராஜா, தலைமை செயற்குழு உறுப்பி னர் ராதா கிருஷ்ணன், கோவி ல்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செய லாளர்கள், முருகேசன், சின்னப்பாண்டியன், ராதா கிருஷ்ணன், காசிவி ஸ்வநாதன், மாவட்ட அணி அமைப்பா ளர்கள் அந்தோணி ஸ்டாலின், மதியழகன், அன்பழகன், குபேர் இளம்பரிதி, வக்கீல் பால குருசாமி, துணை அமைப்பா ளர்கள் பிரதீப், நாகராஜன், ஜோசப் அமல்ராஜ், பிரபு, அந்தோணி கண்ணன், மாவட்ட பிரதிநிதி கள் சேர்ம பாண்டி யன், செந்தில்குமார், நாரா யணன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர் மற்றும் கருணா, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

    புதிய வடிகால்கள்

    தூத்துக்குடி மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கிரேட் காட்டன் சாலை பார்டர் பஜாரில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு குத்தகை உரிமத்திற்கு பொது ஏலம் ஒப்பந்தம் கோரியவர்களுக்கு அனுமதி வழங்குதல், ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளி கோராத கடைகளுக்கு மறு ஏலம் விடப்படுகிறது,

    மாநகராட்சி முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், ரஹ்மத் நகர், அய்யாசாமி காலனி,பொன் சுப்பையா நகர், லூர்தம்மாள் புரம் மற்றும் செயின்ட் மேரிஸ் காலனி ஆகிய பகுதிகளில் கடந்த 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் பெய்த பருவ மலையின் காரணமாக அதிக அளவு வெள்ள நீர் தேங்கி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

    எனவே அந்தப் பகுதியில் மழை நீர் தேங்காமல் தடுக்கும் வகையில் ஆசிய மேம்பாட்டு வங்கி கடன் மானியம் மற்றும் உள்ளாட்சி பங்கு தொகையுடன் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 4 சிப்பங்களாக ரூ.87.01 கோடி மதிப்பீட்டில் 36.36 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வடிகால் திட்ட பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி, கோட்டுராஜா, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் சோமசுந்தரி, ரிக்டா ஆர்தர் மச்சாது, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ்,சேகர், ராமச்சந்திரன், ஹரிகணேஷ்,ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×