search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Storm"

    • மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
    • 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும்.

    தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
    • புயலால் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான சக்தி வாய்ந்த சூறாவளி புயல், ஜப்பான்- சீனாவின் கிழக்கு பகுதி, தென் கொரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஹன்னம்னோர் என்று பெயரிடப்பட்ட அந்த புயல் தென்கொரியாவின் தெற்கு பகுதியில் ஜெஜூ கடற்பரப்பை அடைந்தது. துறைமுக நகரான பூசனுக்கு வடமேற்கில் கரையை கடந்தது. சுமார் 144 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. மின் கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன.

    இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    புயல் காரணமாக ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புயல் காரணமாக பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

    கனமழை, வெள்ளம், சூறாவளி காற்று காரணமாக தென்கொரியாவின் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருக்கிறது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. #Rain #TN
    சென்னை:

    தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனினும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் தமிழகத்தை நோக்கி அடுத்த வாரம் புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அது அங்கிருந்து நகர்ந்து 28-ந்தேதி பிற்பகலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இலங்கை நோக்கி நகருகிறது.

    அதன்பின்னர், இலங்கை வழியாக தமிழகத்துக்கு புயலாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போதையை நிலைப்படி தமிழகத்தை நோக்கியும், மியான்மர் பகுதியை நோக்கியும் 2 சூழல்களில் அதன் போக்கு இருக்கிறது.



    25-ந்தேதிக்கு பிறகு தான் அதன் நிலைப்பாடு குறித்து உறுதியாக சொல்ல முடியும். தமிழகத்தை நோக்கி புயல் வந்தால், தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

    அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #Rain #TN

    அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களை புயல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். #USStorm
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அங்குள்ள பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்கள் இந்த புயலில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. 

    தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின.

    மிசிசிபி மாகாணத்தில் லிங்கன் கவுண்டி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான ஆண் சிக்கினார். காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் புயல் காற்றுக்கு மத்தியில் வாகனங்கள் ஓட்டும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

    அலபாமா மாகாணத்தில் பெல் நகரத்தில் 42 வயதான பெண் ஒருவர் வீட்டின் மீது மரம் விழுந்து பலி ஆனார். புயல் தாக்கி இதுவரை 5 பேர் பலியாகினர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    புயல் பாதித்த மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் புயல் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். #USStorm
    மணிப்பூர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை புயலாக வலுவடைந்தது. புயலில் சிக்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #ManipurStorm
    இம்பால்:

    மணிப்பூரில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதிலும் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது.

    கனமழையால் அங்கு புயல் உருவாகியுள்ளது.  இந்த புயலின் தாக்கத்தால் அங்கு காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் வீடுகளின் மேற்கூரைகள், சாலைகளில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பலகைகள் பறந்து கீழே விழுந்தன.



    இந்நிலையில், மணிப்பூரின் காக்சிங் மற்றும் சுரா சந்த்பூர் மாவட்டங்களில் புயல் தாக்கியதில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மாநிலம் முழுவதிலும் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநில அரசு மழையில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. #ManipurStorm
    செய்யாறு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று சாலை மறியல் செய்தனர்.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த அனக்காவூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கபடவிலலை என்று கூறபடுகிறது. இதனால் பெண்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் சுமந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செய்யாறு வந்தவாசி செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர்.

    இது குறித்து தகவலறிந்த செய்யாறு தாசில்தார் மூர்த்தி, அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம் அருகே உள்ள பரமேஸ்வர மங்கலம் பகுதியில் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கபடவில்லை.

    இது குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கபட வில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் பஞ்சாயத்து செயலர் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    புதுக்கோட்டை அருகே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகை , மகளின் கல்வி கடனுக்காக பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm #Storm

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாயி. இவரது மகள் ரம்யா. இவர் கொத்தமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கடந்த 2009ம் ஆண்டு ரூ.2.92 லட்சம் கடன் பெற்று புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வந்தார்.

    இந்த நிலையில் கஜா புயலால் ராஜேந்திரன் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் முழுமையாக சேதமடைந்தது.

    இதற்காக தமிழக அரசு ரூ.34ஆயிரம் நிவாரணத்தொகையை அவரது வங்கி கணக்கில் செலுத்தியது. இது தொடர்பாக அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்.தகவல் வந்ததையடுத்து, ராஜேந்திரன் தொகையை பெற வங்கிக்கு சென்றார்.

    அப்போது அந்த நிவாரண தொகையை வங்கி நிர்வாகம் மகளுக்காக வாங்கியிருந்த கல்வி கடனுக்கு வரவு வைத்து கொண்டது தெரியவந்தது. மேலும் ராஜேந்திரன், அவரது மனைவி ராணி ஆகியோருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் கிடைக்கும் தொகையையும் வங்கி வரவு வைத்தது தெரியவந்தது. இதனால் ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.

    புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன், வட்டி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ள நிலையில், வங்கி நிர்வாகத்தின்செயலால் அதிருப்தியற்ற ராஜேந்திரன், நிவாரணத்தொகையை பெற்று தரக்கோரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும் இது போன்று பலரின் நிவாரண தொகைகள் கடனுக்காக பிடித்தம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. #Gajastorm #Storm

    முத்துப்பேட்டை அருகே புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் கஜா புயலின் கோரதாண்டவத்தால் இப்பகுதி மக்கள் வீடுகள், உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வருவாய்த்துறையினர் கணக்கீடு செய்தனர். இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் குடும்பங்கள் தங்களுக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் புயல் பாதிப்பு ஏற்பட்டு 45நாட்கள் கடந்தும் இன்னும் இப்பகுதி மக்களுக்கு அரசின் எந்தவிதமான நிவாரணமும் வழங்கவில்லை.

    இந்தநிலையில் அருகில் உள்ள மலையாகணபதி நகர் பகுதி மக்களுக்கு நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதனால் அதிருப்தியடைந்த இப்பகுதி மக்கள் எங்களுக்கும் உடன் நிவாரண பொருட்கள் வழங்கவேண்டும் எனக்கோரி கீழக்காடு சுந்தரம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டி.எஸ்.பி. இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, மற்றும் வருவாய்த்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைவருக்கும் டோக்கன் விநியோகம் செய்து நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பட்டுக்கோட்டை- முத்துப்பேட்டை சாலை மற்றும் முத்துப்பேட்டை- அதிராம்பட்டிணம் சாலையில் மாலை 3 மணிமுதல் இரவு 7 மணி வரை சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஜனவரி முதல் வாரத்தில் அந்தமான்-நிக்கோபர் தீவுகளை புயல் தாக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    புதுடெல்லி:

    கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று வங்கக் கடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அடுத்த வாரம் 2-ந்தேதி வாக்கில் தென் சீனக்கடலில் வியட் நாம், கம்போடியாவுக்கு தெற்கே புயல் உருவாகிறது.

    இது 4-ந்தேதி மலாய் தீபகற்பம் வழியாக கரையை கடந்து வங்கக் கடலுக்குள் நுழைந்து 5-ந்தேதி இரவு அந்தமான்-நிக்கோபர் தீவுகளை கடுமையாக தாக்கும் என்று தனியார் வானிலை இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பின்னர் இந்த புயல் வடக்கு மத்திய வங்கக்கடல் வழியாக மியான்மர், வங்காளதேசம் நோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் தென் இந்திய பகுதிக்கு இதனால் பாதிப்பு இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

    பெய்ட்டி புயல் தீவிர புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
    சென்னை:

    பெய்ட்டி புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து வடகிழக்கு திசையில் 300கி.மீ தொலைவில் உள்ள பெய்ட்டி புயல் தீவிரப் புயலாக மாறியது. 26 கி.மீ வேகத்தில் நகரும் பெய்ட்டி புயல் நாளை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும்.

    பெய்ட்டி புயல் கரையை கடக்கும்போது 70-90 கி.மீ முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும். சென்னையை பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திரா-புதுச்சேரி மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
    மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு தென் கிழக்கே 930 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்து ஓங்கோலுக்கும்- காக்கிநாடாவுக்கும் இடையே வருகிற 17-ந் தேதி பகல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #BayofBengal #Rain #Storm
    சென்னை:

    வங்க கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறுகிறது. இது தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது என்றும், இந்த புயல் ஆந்திரா நோக்கி செல்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது.

    ஆந்திரா நோக்கி புயல் சென்றாலும், வட தமிழக கடலோர பகுதிகள் வழியாக அது கடந்து செல்வதால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இது சென்னைக்கு தென்கிழக்கே 930 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 1,090 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டு இருக்கிறது.

    மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் இது நகர்ந்து வருகிறது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று அதிகாலையில்) புயலாக வலுவடைகிறது. இந்த புயல் ஆந்திர கடலோர பகுதிகளான ஓங்கோலுக்கும், காக்கிநாடாவுக்கும் இடையே 17-ந் தேதி (நாளை மறுநாள்) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வடதமிழக கடலோரங்களில் இருந்து 200 கி.மீ. தொலைவில் இந்த புயல் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதால், வடதமிழக கடலோர மாவட்டங்களில் 15 (இன்று), 16 (நாளை) ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் காற்றுடன் மழையும், ஓரிரு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யும். குறிப்பாக, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

    15, 16-ந் தேதிகளில் தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தரைக்காற்றை பொறுத்தவரையில், மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசக்கூடும்.

    புயலானது தற்போது வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதுவே மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்தை நெருங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அது பெரிய மாற்றம். தற்போது உருவாகும் இந்த புயல், ‘கஜா’ புயலை விட சற்று அழுத்தம் அதிகமாக இருப்பதாகவே காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BayofBengal #Rain #Storm
    ×