search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Storm"

    • புதிய கட்டுமானத்தில் இருந்த வீடு ஒன்று திடீரென சரிந்து விழுந்து தரைமட்டமானது.
    • மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கான்ரோவில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. மேலும், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால், நகரின் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தண்ணீரால் நகரம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. அப்போது, புதிய கட்டுமானத்தில் இருந்த வீடு ஒன்று திடீரென சரிந்து விழுந்து தரைமட்டமானது. கட்டுமானப் பணியில் இருந்தவர்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் விபத்தில் சிக்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுட்ன மீட்கப்பட்ட 7 பேரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும்.
    • 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயலானது நாளை மே 11 ம் தேதி காலை கடுமையான சூறாவாளி புயலாக மாறும் எனவும் இது பங்களாதேஷ் மியான்மர் இடையை மே 14 ம் தேதி கரையை கடக்கும் என்று அறிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து தூரத்தில் புயல் உருவாகி உள்ளது என்பதை குறிக்கும் வகையில் நாகை, காரைக்கால், சென்னை, கடலூர், புதுச்சேரி, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் அதற்கு மோக்கா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தாக்கம் கடுமையாக அதிகரித்து வந்த நிலையில் 101 டிகிரி வெயில் பதிவானது . சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வந்தனர். மேலும் காலை மற்றும் மதிய நேரங்களில் வெயில், மாலை நேரங்களில் புழுக்கம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்துவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் மிக கனமழை பெய்த காரணத்தினால் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பாதிப்ப டைந்து விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியானது.

    இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் மோக்கா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும், கடல் காற்றானது மணிக்கு 50 முதல் 80 கி.மீ வரை வீசக்கூடும் எனவும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் வங்க்கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஒருபுறம் சுட்டெரிக்கும் வெயில், திடீர் கனமழை என இருந்து வந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் புதிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    • கலிபோர்னியாவில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீச்சு ஏற்பட்டு மொத்தம் 19 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
    • நிலச்சரிவு, கடும் வெள்ளம் ஏற்பட கூடிய ஆபத்தும் உள்ளது.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குளிர்கால பருவத்தின்போது, கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் புயலானது பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

    கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீச்சும் ஏற்பட்டு மொத்தம் 19 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். கலிபோர்னியாவில் கார்மெல் மற்றும் பெப்பிள் பீச் ஆகியவை மிக பெரிய சுற்றுலா தலங்களாக அறியப்படுகின்றன.

    இவற்றின் அருகேயுள்ள சாலினாஸ் ஆற்றில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பேராபத்து ஏற்பட கூடும். அதனால், சுற்றுலாவாசிகளுக்கு தடை விதிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டது.

    இந்த ஆற்றில் நேற்று அபாய அளவை கடந்து வெள்ளம் ஓடியது. இதனை தொடர்ந்து, அந்த ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 24 ஆயிரம் பேரை அதிகாரிகள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.

    புயல் பாதிப்புகளால் ஏற்பட்ட வெள்ளம் வீடுகளை சூழ்ந்து உள்ளது. கட்டிடங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்துள்ளன. சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.

    இதனால், குடியிருப்பில் உள்ள மக்கள் பாதுகாப்பு தேடி புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில், 2.2 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக பகுதிகள் மின் இணைப்பு இன்றி பாதிக்கப்பட்டு உள்ளன. லட்சக்கணக்கான மக்கள் மின் வினியோகம் பாதித்து அவதிப்படுகின்றனர்.

    இந்நிலையில், இன்னும் 2 புயல்கள் கூடுதலாக கலிபோர்னியா மற்றும் பசிபிக் வடமேற்கு பகுதியை பாதிக்ககூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

    எனினும், கடந்த 2 வாரங்களில் 7 பருவகால புயல்கள் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளன. நிலச்சரிவு, கடும் வெள்ளம் ஏற்பட கூடிய ஆபத்தும் உள்ளது என பொதுமக்களுக்கு அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    • வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டோஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.
    • 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில் சாரல் மழையாக பெய்து வருகிறது.

    தரங்கம்பாடி:

    வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டோஸ் புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    சின்னூர்பேட்டை, சந்திரபாடி தரங்கம்பாடி சின்னங்குடி வானகிரி பூம்புகார் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் 28 மீனவர் கிராமங்களிலும் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை மயிலாடுதுறை மாவட்டத்தில் 400 விசைப்படகுகளும் 15,000 பைபர் படகுகளும் உள்ள நிலையில் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் ஏற்றி நிறுத்தி உள்ளனர். தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக பகுதியில் பல அடி உயரத்திற்கு அலைகள் சீறிப் பாய்கின்றன.

    துறைமுகத்தின் தடுப்புச் சுவர்களை அலைகள் மோதி தாண்டி உள்ளே நுழைவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

    தற்போது 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில் சாரல் மழையாக பெய்து வருகிறது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் 25 நாட்களுக்கு மேலாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை இதன் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் உள்ளது போல் மீனவர்களுக்கும் மீனவர் நல கூட்டுறவு வங்கிகள் தொடங்க வேண்டும் என்றும் இதனால் தங்களுக்கு இது போன்ற தடை காலங்களில் நிவாரணம் பெறவும் கடனுதவி பெறவும் பெரும் வசதியாக இருக்கும் என்று மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே இன்று மாலைக்கு மேல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    • வங்க கடலில் உருவாகி யுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • இதன் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்தால் உடனடியாக அகற்ற மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்களை தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    ராசிபுரம்:

    வங்க கடலில் உருவாகி யுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், கொல்லிமலை, புதுச்சத்திரன் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்குழு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ரப்பர் படகுகள், கயிறு, லைப் ஜாக்கெட்கள், வீடு களுக்குள் வெள்ளம் புகுந்தால் உடனடியாக அகற்ற மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்களை தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    மேலும் பெரு வெள்ளம் சமயத்தில் மக்களை பாது காப்பாக தங்க வைக்க திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவன முடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • சாலைகள் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
    • பஸ் நிலையம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வங்க கடலில் நிலை கொண்டுள்ள தீவிர மாண்டஸ் புயல் காரணமாக வேதாரணத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் அலைகள் 5 அடி உயரம் எழுந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது.

    கடல் சீற்றம் காரணமாக ஆற்காடுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையிலிருந்து சற்று தொலைவாக பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    வேதாரண்யம் பகுதியில் இரவில் இருந்து கடும் குளிர் காற்று வீசி வருகிறது.

    இதனால் பொதுமக்கள் வீடுகளிலே முடங்கி உள்ளனர்.

    இதனால் சாலைகள் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாற்றம்யின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்பட்ட போதும் பேருந்து நிலையம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க தயார் நிலையில் காவல் துறை சார்பில் மீட்பு படையினர் வேதா ரண்யத்தில் முகாமிட்டு ள்ளனர்.

    • மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

    காரைக்கால்:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் சின்னம் காரணமாக 8ம் தேதி, 9ம் தேதி மற்றும் 10ம் தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் காரைக்கால் மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்புமாறும் மீனவ கிராமங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவ கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தில் இருந்து ஆந்திர பிரதேச கடற்பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்ற 43 படகுகளில் உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டு இதுவரை 31 படகுகள் வந்து சேர்ந்துள்ளதாகவும், 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் வரும் 8ம் தேதி மாலை முதல் கனமழை பெய்யும்.
    • தமிழகத்தின் வானிலை முன்னெச்சரிக்கை குறித்து தலைமை செயலாளருடன் ஆலோசித்ததாக பாலசந்திரன் பேட்டி.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இதனால், தமிழகத்தில் வரும் 8ம் தேதி மாலை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் இறையன்பு உடன், தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து, தமிழகத்தின் வானிலை முன்னெச்சரிக்கை குறித்து தலைமை செயலாளருடன் ஆலோசித்ததாக பாலசந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

    இதனால் வரும் 8ம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியை புயல் நெருங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது.

    • வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை.
    • சேதமடைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தை புதிதாக கட்டித்தர நடவடிக்கை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கிடங்கள், காலமாநல்லூர், சின்ன ங்குடி, கீழையூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பார்வையிட்டு வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்,

    மேலும் சின்னங்குடி மீனவர் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையம், அரசினர் உயர்நிலைப்பள்ளி சுற்றி குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றவும் சேதமடைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தை புதிதாக கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்களிடம் உறுதியளித்தார்.

    அதைத் தொட ர்ந்து கீழையூர், கிடாரங்கொ ண்டான், புன்செய், தலைச்சங்காடு உள்ளிட்ட ஊராட்சிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிரு ப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து ஆறுதல் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஒன்றிய உதவி செயற்பொறியாளர் முத்துகுமார், ஒன்றிய குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில் கன மழையும், மற்ற இடங்களில் பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • ஒடிசாவின் கடலோர பகுதியில் மழையின் தீவிரம், புயலின் பாதை, காற்றின் வேகம் ஆகியவை இன்னும் கணிக்கப்படவில்லை.

    தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது. இந்த வளி மண்டல சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ தூரம் வரை பரந்து விரிந்துள்ளது.

    வங்கக்கடலில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்கிறது. அது நாளை மறுநாள் (சனிக் கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. அது மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும்.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வருகிற 23-ந்தேதி புயலாக வலுவடைய உள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட 'சிட்ரங்' என்ற பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த புயல் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை முதலில் தாக்கும்.

    வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த புயல் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை முதலில் தாக்கும்.

    மேலும் புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாகே, கர்நாடகாவின் தெற்கு பகுதிகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய இடங்களிலும் பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில் கன மழையும், மற்ற இடங்களில் பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதிய புயல் உருவாவதை தொடர்ந்து பல கடலோர மாவட்டங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    புயல் முன்அறிவிப்பை கருத்தில் கொண்டு ஒடிசா அரசு தனது ஊழியர்களின் விடுமுறையை வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ரத்து செய்துள்ளது.

    இந்த புயலின் பாதை ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதியை நோக்கி இருக்கும் என்பதால் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒடிசா அரசு 7 கடலோர மாவட்டங்களின் நிர்வாகங்களை உஷார்படுத்தி உள்ளது.

    புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் கஞ்சம்பூரி, குர்தா, ஜெகத்சிங்பூர், கேந்திரபடா, பத்ரக் மற்றும் பாலசோர் ஆகிய மாவட்டங்களை புயல் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    எனவே அங்கு அதிகாரிகள் மிகவும் உஷாராக இருக்கவும், நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வருகிற 23-ந்தேதி பூரி, கேந்திரபடா மற்றும் ஜெகந்த் சிங்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதேநேரத்தில் ஒடிசாவின் கடலோர பகுதியில் மழையின் தீவிரம், புயலின் பாதை, காற்றின் வேகம் ஆகியவை இன்னும் கணிக்கப்படவில்லை.

    ×