search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூறாவளி புயல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
    • சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    சிகாகோ:

    அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் நேற்று கடுமையான சூறாவளி புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. பலத்த சூறாவளி காற்று மற்றும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்தது.

    இதனால் கிரேட் லேண்ட் மற்றும் சிகாகோ தெற்கு பகுதியில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தது. மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டதால் 97 ஆயிரம் பேர் இருளில் மூழ்கி தவித்து வருகின்றனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது. 2,400 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகிறார்கள்.

    மேலும் பல நகரங்களில் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    • புதிய கட்டுமானத்தில் இருந்த வீடு ஒன்று திடீரென சரிந்து விழுந்து தரைமட்டமானது.
    • மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கான்ரோவில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. மேலும், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால், நகரின் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தண்ணீரால் நகரம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. அப்போது, புதிய கட்டுமானத்தில் இருந்த வீடு ஒன்று திடீரென சரிந்து விழுந்து தரைமட்டமானது. கட்டுமானப் பணியில் இருந்தவர்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் விபத்தில் சிக்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுட்ன மீட்கப்பட்ட 7 பேரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ×