search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானிலை"

    • கடந்த 17, 18ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை
    • நெல்லை மாவட்டத்தில் பால் விநியோகம் ஓரிரு நாளில் சீரடையும்.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், சாலை எங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இதுகுறித்து கூறியதாவது:-

    கடந்த 17, 18ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

    18ம் தேதி காலை முதல் மதியம் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 11 செ.மீ மழை பெய்துள்ளது. இதேபோல், நெல்லை மாவட்டத்தில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது.

    காயல்பட்டினத்தில் 36 மணி நேரத்தில் 116 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

    திருச்செந்தூரில் 92 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    தென்மாவட்டங்களில் பெய்த மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பு தவறானது. அவர்கள் கூறியிருந்த கணிப்பின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருந்தது. ஆனால், கணிப்பை விட கூடுதல் மழை பெய்தததால் பாதிப்பு அதிகமாகி உள்ளது.

    மீட்பு பணிகளில் 1,350 பேரில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 250 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    160 நிவாரண முகாம்கள் அமைப்பு, சுமார் 17 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இன்று மட்டும் முகாம்கள் தவிர 34 ஆயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

    9 ஹெலிகாப்டர்கள் மூலம் கிராமங்களில் உணவு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 13,500 கிலோ உணவு வழங்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் வடிந்த பகுதிகளில் இதர சேவைகள் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பால் விநியோகம் ஓரிரு நாளில் சீரடையும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும்.

    தென்காசி, குமரி மாவட்டங்களில் 100 சதவீதம் மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 18 சதவீத மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 60 சதவீத இடங்களில் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. வெள்ளம் வடிய வடிய மின் விநியோகம் வழங்கப்படும்.

    திருச்செந்தூரில் இன்று காலை அதிகனமழை பதிவானது.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் ஹெலிகாப்டர் மூலம் 2 முறை உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
    • 80 பேர் சென்னை ஆவடியில் இருந்து கடலூருக்கு வருகை தந்தனர்.

    கடலூர்:

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையிலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள காரணத்தினாலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று (2-ந் தேதி) முதல் 4-ந் தேதி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் வரும் நிலையில் மிகுந்த அமைதியுடன் காணப்பட்டு வருகின்றது.

    இதையொட்டி முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 80 பேர் சென்னை ஆவடியில் இருந்து கடலூருக்கு வருகை தந்தனர். இதில் 25 பேரை கொண்ட ஒரு குழுவினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். தற்போது இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 55 பேரை கொண்ட 2 குழுவினர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் தங்கியுள்ளனர். தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை யொட்டி மீட்பு படையை சேர்ந்த அனைவரும், அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் பட்சத்தில், கலெக்டர் எந்த இடத்திற்கு செல்ல அறிவுறுத்துகிறாரோ அந்த இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கக்கடலில் உருவான புயல்களால் வட கிழக்கு பருவமழை ஆரம்பத்தில் வலுக்குறைந்து காணப்பட்டது.
    • வரும் 29ம் தேதி தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைய தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அரபிக்கடல், வங்கக்கடலில் உருவான புயல்களால் வட கிழக்கு பருவமழை ஆரம்பத்தில் வலுக்குறைந்து காணப்பட்டது.

    இந்நிலையில், புயல்கள் கரையை கடந்ததால் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் வலுவடைய தொடங்கியுள்ளது.

    இதன் எதிரொலியால், வரும் 29ம் தேதி தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் 29ம் தேதி கடலூர், சிவகங்கை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 78.8 மி.மீ மழை பெய்துள்ளது என்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 39 சதவீதம் குறைவு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • பேரிடர் தொடர்பு எண் 1077-ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, பேரிடர் பயிற்சியாளர் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    எனவே தாலுகா வாரியாக மண்டல நிவாரண அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

    தாலுகா, ஒன்றியம், நகராட்சி வாரியாக பேரிடர் பொறுப்பு அலுவலர்களை நியமித்து 24மணி நேர பணியாக இருக்க வேண்டும். அவர்களின் தொலைபேசி எண்ணையும் வெளியிட வேண்டும்.

    மாவட்ட கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி பேரிடர் தொடர்பு எண் 1077 ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    பேரிடர் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று முதல் 17 -ந்தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
    • இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    கடலூர்:

    தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 17 -ந்தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், திருவந்திபுரம், கோண்டூர், நடுவீரப்பட்டு, நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம், ெரட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் லேசான சாரல் மழையுடன் தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    • விவசாயிகள் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளை வாட்ஸ்-அப் மூலம் பெறலாம் என அதிகாரி தெரிவித்துள்ளனர்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயம் பருவ மழையை நம்பி உள்ளது. பருவமழை பொய்த்துப்போகும் ேபாதெல்லாம் வறட்சியின் பாதிப்பும், கூடுதல் மழை காரணமாக பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டு உணவு உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது. பருவ காலங்கள் வாரியாக பார்க்கும்போது வடகிழக்குப் பருவமழை காலங்களில் மொத்த மழையில் 61 சதவீதம் பெறப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை நம்பியே மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. உணவு உற்பத்தியில் வானிலை காரணிகளில் ஏற்படும் மாறுதல்கள், அதாவது காலம் தவறிய மழை, அதிக மற்றும் குறைந்த வெப்பநிலை, காற்றின் திசை மற்றும் வேகம், காற்றின் ஈரப்பதம் ஆகியவையும் பயிர் வளர்ச்சி மற்றும் உணவு உற்பத்தியை கடுமையாக பாதிக்கக்கூடும்.

    மழைப்பொழிவும் காலநிலை மாற்றம் காரண மாக சீராக இல்லாமல் பெரு மளவு மழை சில நாட்களி லேயே பெய்து விடுவதால் விவசாய பணிகளுக்கு பயன்படாமல் மழைநீர் பெருமளவு வீணாகிறது. இந்த சூழ்நிலையில் இயற்கை இடர்பாடுகள் மூலம் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க வானிலை சார்ந்த வேளாண் செயல்பாடுகள் அவசியமான ஒன்றாகிறது.வேளாண்மை யில் பருவகால மாற்றம் மற்றும் பாதகமான காலநிலையின் காரணமாக ஏற்படும் இழப்பு களை முழுஅளவு தவிரப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது. இருப்பினும் வானிலை பற்றி முன்கூட்டியே அறிந்தால் தக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இழப்பை ஓரளவிற்கு தவிர்க்க முடியும்.

    இதனை கருத்தில் கொண்டு இந்திய வானிலை ஆய்வுத்துறையால் மத்திய கால வேளாண் முன்னறிவிப்பானது கணினி மாதிரிகள் மூலம் கணிக்கப் பட்டு விவசாயிகளின் பயிர் நிலையை அறிந்து மாறுபடும் வானிலைக்கு ஏற்றவாறு வானிலை முன்னறிவிப்பு மற்றும் வேளாண் ஆலோச னைகள் வட்டார வாரியாக வாரத்திற்கு 2 முறை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விவசாயிகளுக்கு வாட்ஸ்-அப் செயலி மூலம் வேளாண்மை அறிவியல் நிலையம் அளித்து வருகிறது.

    இந்த அறிக்கையின் உதவியால் பருவமழை பொழி விற்கு ஏற்ப பயிர் விதைப்பு செய்யவோ அல்லது விதைப்பை தள்ளிப்போடவோ முடிவெடுக்கலாம். மேலும் நடவு, நிலம் தயாரித்தல், உரமிடுதல், நீர்ப்பாசனம், பயிர் பாதுகாப்பு, அறுவடை மற்றும் அறுவடைக்குப்பின் நேர்த்தி போன்ற மேலாண்மை உத்திகளை வேளாண் பணிகளில் முடிவெடுப்பதில் முன்னறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே உழவர் பெரு மக்கள் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளை பெறுவதற்கு வேளாண் அறிவியல் நிலையத்தின் வாட்ஸ்-அப் குழுவில் வேளாண் அறிவியல் மையத்தின் திட்டத்தை வழங்கக்கூடிய வெங்கடேசுவரியின் 95003 98922 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்தது காண முடிந்தது.

    கடலூர்:

    அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் 5 -ந் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த தாழ்வு பகுதி இந்திய பெருங்கடல் வழியாக தமிழக பகுதி நோக்கி இரண்டாவது வாரத்தில் பயணிக்க வாய்ப்பு இருப்பதாகவும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை யொட்டி கடந்த சில தினங்களாக மிக கனமழை பெய்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளகாடானது. அவ்வப்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தும் வருகின்றது. இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, அண்ணாமலை நகர், தொழுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு மேல்ப ட்டாம்பாக்கம் திருவந்திபுரம் கூத்தப்பாக்கம் பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழையாக மாறியது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திடீர் மழையால் மழையில் நனைந்தபடியும், குடைப்பிடித்த படியும் சென்றதை காண முடிந்தது. மேலும் திடீர் மழை காரணமாக காலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்தது காண முடிந்தது. மேலும் சாலை ஓரத்தில் உள்ள கட்டிடத்தில் மழைக்கு ஒதுங்கி இருந்ததையும் காணமுடிந்தது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு:- தொழுதூர் - 9.0, பரங்கிப்பேட்டை - 2.0, சிதம்பரம் - 1.4, கடலூர் - 1.1, அண்ணாமலைநகர் - 1.0 என மொத்தம் - 14.50 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

    • நகராட்சியின் சார்பில்க லைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 58 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு குளத்தை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஆறுகாட்டுக்குறை பகுதிக்கு செல்லும் வழியில் வைதூக்கையம்ஆலயத்தின் எதிர் புறத்தில் நகராட்சி க்கு சொந்தமான குளம் அமை ந்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நகராட்சி முழுவதும் 35 கிலோமீட்டர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மழை பெய்தவுடன் தண்ணீர் உடனுக்குடன் வடியும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை நகரமன்ற தலைவர் புகழேந்தி , நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன் ஆகியோர் ஆய்வு செய்தனர் .

    மேலும் ஆறுகாட்டுக்குறை பகுதிக்கு செல்லும் வழியில் வைதூக்கையம்ஆலயத்தின் எதிர் புறத்தில் நகராட்சி க்கு சொந்தமான குளம் அமை ந்துள்ளது.

    நாள்தோறும் நூற்றுக்க ணக்கான மக்கள் குளிப்பதற்கு பயன்படும் இந்த குளம் மாசுபட்டு இருந்தது. அதனை தற்போது நகராட்சியின் சார்பில்க லைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 58 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு குளத்தை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது குளம்தூர்வா ரப்பட்ட பின்பு மிகுந்த தூய்மையாகவு ம்பெருவாரியான மீனவ மக்கள் குளிப்பதற்கும் பயன்பட்டு வருகிறது இந்த குளக்கரையில் நடைபெறும் பணியினையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர். 

    • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில் கன மழையும், மற்ற இடங்களில் பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • ஒடிசாவின் கடலோர பகுதியில் மழையின் தீவிரம், புயலின் பாதை, காற்றின் வேகம் ஆகியவை இன்னும் கணிக்கப்படவில்லை.

    தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது. இந்த வளி மண்டல சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ தூரம் வரை பரந்து விரிந்துள்ளது.

    வங்கக்கடலில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்கிறது. அது நாளை மறுநாள் (சனிக் கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. அது மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும்.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வருகிற 23-ந்தேதி புயலாக வலுவடைய உள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட 'சிட்ரங்' என்ற பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த புயல் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை முதலில் தாக்கும்.

    வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த புயல் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை முதலில் தாக்கும்.

    மேலும் புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாகே, கர்நாடகாவின் தெற்கு பகுதிகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய இடங்களிலும் பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில் கன மழையும், மற்ற இடங்களில் பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதிய புயல் உருவாவதை தொடர்ந்து பல கடலோர மாவட்டங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    புயல் முன்அறிவிப்பை கருத்தில் கொண்டு ஒடிசா அரசு தனது ஊழியர்களின் விடுமுறையை வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ரத்து செய்துள்ளது.

    இந்த புயலின் பாதை ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதியை நோக்கி இருக்கும் என்பதால் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒடிசா அரசு 7 கடலோர மாவட்டங்களின் நிர்வாகங்களை உஷார்படுத்தி உள்ளது.

    புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் கஞ்சம்பூரி, குர்தா, ஜெகத்சிங்பூர், கேந்திரபடா, பத்ரக் மற்றும் பாலசோர் ஆகிய மாவட்டங்களை புயல் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    எனவே அங்கு அதிகாரிகள் மிகவும் உஷாராக இருக்கவும், நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வருகிற 23-ந்தேதி பூரி, கேந்திரபடா மற்றும் ஜெகந்த் சிங்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதேநேரத்தில் ஒடிசாவின் கடலோர பகுதியில் மழையின் தீவிரம், புயலின் பாதை, காற்றின் வேகம் ஆகியவை இன்னும் கணிக்கப்படவில்லை.

    • அடுத்த 24 மணி நேரத்தில் அஜ்மீர், பரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.
    • அஜ்மீரில் உள்ள தொலைதூர பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிப்பு.

    ஜெய்ப்பூர்:

    கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த நிலையதில், கடந்த 24 மணி நேரத்தில் நாகௌர் மாவட்டத்தில் உள்ள மக்ரானா பகுதியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ரத்தன்கர் (சுரு) 8 செ.மீ மழையும், ஹனுமன்கரில் சங்கரியா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.

    பனேரா (பில்வாரா), கெர்வாடா (உதைபூர்), பதம்பூர், சதுல்ஷாஹர் (இரண்டும் கங்காநகரில்), மற்றும் நவா (நாகூர்) தலா 6 செ.மீ., நரைனா (ஜெய்ப்பூர்), பசேரி (தோல்பூர்), சஜ்ஜன்கர் (பன்ஸ்வாரா), தோல்பூரில் 5 செ.மீ., சோட்டிசாத்ரி (பிரதாப்கர்), அக்லேரா, அஸ்னாவர் (இரண்டும் ஜாலவாரில்), கர்ஹி (பன்ஸ்வாரா), துங்லா (சித்தோர்கர்), மற்றும் பாரி (தோல்பூர்) ஆகியவை பதிவாகியுள்ளன. 4 செ.மீ மற்றும் பல இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் 4 செ.மீட்டருக்கும் குறைவான மழை பெய்துள்ளது.

    மறுபுறம், ஸ்ரீகங்காநகரில் ஒரு நாள் முன்பு பெய்த கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேங்கிய பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு குழாய்கள் மற்றும் பிற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    சுகாதியா மார்க், அசோக் நகர், மீரா சௌக், சுகாடியா சர்க்கிள், பூரணி அபாடி போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    அடுத்த 24 மணி நேரத்தில் அஜ்மீர், பரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், அஜ்மீரில் உள்ள தொலைத்தூர பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    ×