search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன மழை எச்சரிக்கை: கடலூரில் தயார் நிலையில் மீட்பு படையினர்
    X

    புயல் எச்சரிக்கையையொட்டி பேரிடர் மீட்பு படையினர் கடலூரில் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பதை படத்தில் காணலாம்.

    கன மழை எச்சரிக்கை: கடலூரில் தயார் நிலையில் மீட்பு படையினர்

    • தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
    • 80 பேர் சென்னை ஆவடியில் இருந்து கடலூருக்கு வருகை தந்தனர்.

    கடலூர்:

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையிலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள காரணத்தினாலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று (2-ந் தேதி) முதல் 4-ந் தேதி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் வரும் நிலையில் மிகுந்த அமைதியுடன் காணப்பட்டு வருகின்றது.

    இதையொட்டி முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 80 பேர் சென்னை ஆவடியில் இருந்து கடலூருக்கு வருகை தந்தனர். இதில் 25 பேரை கொண்ட ஒரு குழுவினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். தற்போது இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 55 பேரை கொண்ட 2 குழுவினர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் தங்கியுள்ளனர். தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை யொட்டி மீட்பு படையை சேர்ந்த அனைவரும், அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் பட்சத்தில், கலெக்டர் எந்த இடத்திற்கு செல்ல அறிவுறுத்துகிறாரோ அந்த இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.

    Next Story
    ×