பேரிடர் பொறுப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பேரிடர் தொடர்பு எண் 1077-ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பேரிடர் பொறுப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்
Published on

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, பேரிடர் பயிற்சியாளர் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

எனவே தாலுகா வாரியாக மண்டல நிவாரண அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

தாலுகா, ஒன்றியம், நகராட்சி வாரியாக பேரிடர் பொறுப்பு அலுவலர்களை நியமித்து 24மணி நேர பணியாக இருக்க வேண்டும். அவர்களின் தொலைபேசி எண்ணையும் வெளியிட வேண்டும்.

மாவட்ட கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி பேரிடர் தொடர்பு எண் 1077 ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

பேரிடர் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com