என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம்
- வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
இதனால் வரும் 8ம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியை புயல் நெருங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது.
Next Story






