search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
    X

    கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள காட்சி.

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    • வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் அதற்கு மோக்கா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தாக்கம் கடுமையாக அதிகரித்து வந்த நிலையில் 101 டிகிரி வெயில் பதிவானது . சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வந்தனர். மேலும் காலை மற்றும் மதிய நேரங்களில் வெயில், மாலை நேரங்களில் புழுக்கம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்துவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் மிக கனமழை பெய்த காரணத்தினால் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பாதிப்ப டைந்து விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியானது.

    இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் மோக்கா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும், கடல் காற்றானது மணிக்கு 50 முதல் 80 கி.மீ வரை வீசக்கூடும் எனவும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் வங்க்கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஒருபுறம் சுட்டெரிக்கும் வெயில், திடீர் கனமழை என இருந்து வந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் புதிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×