search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்றழுத்த தாழ்வு பகுதி"

    • தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சராசரி அளவைவிட கூடுதலாக பெய்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களிலும் கடந்த வாரத்தில் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வெள்ளக்காடாக்கியது.

    வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாளை (31-ந் தேதி) மற்றும் 1-ந் தேதியில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை இலாகா தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் ஜனவரி 1 மற்றும் 2-ந் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.

    வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் இந்திய பெருங்கடல் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதி வரை இந்த மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 3-ந் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    ஜனவரி 1 மற்றும் 2-ந் தேதியில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்துவில்-22 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நாலுமுக்கு-21 செ.மீ. காக்கச்சி-20, மாஞ்சோலை-10 செ.மீ. மழை பெய்துள்ளது.

    • தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.
    • மாலத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

    தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பருவமழை தொடங்கி 20 நாட்கள் ஆகியும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாததால் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாக உள்ளது.
    • ஒரு பகுதியில் பெய்தால் மற்றொரு பகுதியில் மழை பெய்வது இல்லை. மழையும் தொடர்ச்சியாக பெய்யாமல் விட்டு விட்டு பெய்கிறது.

    சென்னை:

    தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சியால் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளது.

    மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது.

    இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி இன்று முதன் முதலாக காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் நாட்களில் வலுபெற்றால் தமிழகத்தில் கனமழையை எதிர்பார்க்கலாம்.

    பருவமழை தொடங்கி 20 நாட்கள் ஆகியும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாததால் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாக உள்ளது.

    வழக்கமாக தீபாவளி பண்டிகை நேரத்தில் பலத்த மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் எதிர்பார்த்த மழை இல்லை. ஒருசில இடங்களில் மட்டுமே மழை பெய்கிறது.

    ஒரு பகுதியில் பெய்தால் மற்றொரு பகுதியில் மழை பெய்வது இல்லை. மழையும் தொடர்ச்சியாக பெய்யாமல் விட்டு விட்டு பெய்கிறது.

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் நிலவரம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளுக்கு அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவானது.
    • காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 8-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் (இன்று) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கும் என்பதால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை தொடரும் என்றும், கடலோர பகுதிகளில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, இன்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான உருவாகியுள்ளது. தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளுக்கு அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவானது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 8-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மேலும், தென்மேற்கு பருவமழை இந்த மாதத்துடன் நிறைவடையும் சூழலில் இந்தியாவில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு ஒடிசா நோக்கி நகரும்.
    • காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் 26ம் தேதி வலுவடையும்.

    டெல்லி, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டியதால் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது.

    யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு ஒடிசா நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது மெதுவாக வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் 26ம் தேதி வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழை பெய்து வந்தது.

    கடலூர்:

    வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை காரணமாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் மீண்டும் மழை பெய்யும். இந்த நிலையில் நேற்று கடலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி பண்ருட்டி பரங்கிப்பேட்டை எஸ் ஆர் சி குடித்தாங்கி வடக்குத்து மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது இதனை தொடர்ந்து லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடை பிடித்து படியும், வாகனத்தில் சென்றவர்கள் மழையில் நனைந்த படியும் சென்றதை காண முடிந்தது. மேலும் இந்த மழை நேற்று இரவு தொடங்கி அதிகாலைவரை மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் வெயில் அடித்து வருகிறது.கடலூர் மாவட்டத்தில் மில்லி மீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு- எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 5.0,குறிஞ்சிப்பாடி - 5.0,கடலூர் - 3.2, பண்ருட்டி - 3.0,பெல்லாந்துறை - 3.0,கலெக்டர் அலுவலகம் - 2.2,வடகுத்து - 1.0,8. பரங்கிப்பேட்டை - 0.,4மொத்தம் - 22.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

    • தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவ உள்ளது‌.
    • மீன்பிடி உபகரணங்களை மேடான பகுதிக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட மீன்வள த்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - 

    வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது . மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவ உள்ளது‌. கடல் காற்றானது 45 முதல் 65 கி.மீ வேகத்தில் வீசும் என வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது. ஆகவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் நாளை (18-ந் ) தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாது அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் ஏற்கனவே கடலில் உள்ள தங்கு கடல் படகுகள் அருகாமையில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக கரைதிரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் 19, 20 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்களது படகு, மீன்பிடி வலை மற்றும் இயந்திரம் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை மேடான பகுதிக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க வேண்டும்.மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
    • 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும்.

    தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×