என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்கிறது
    X

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்கிறது

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி இடையே கரையை கடக்கும்.
    • தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியது.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலைக்கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி இடையே கரையை கடக்கும். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியது என்றும் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் சில தினங்களாக வெளுத்து வாங்கிய கனமழைக்கு காரணமான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றைக்குள் வலுவிழக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×